உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யார் அந்த சார் ஞானசேகரன் கூட்டாளி கைது! திருட்டு வழக்கில் தொடர்பு இருப்பது அம்பலம்

யார் அந்த சார் ஞானசேகரன் கூட்டாளி கைது! திருட்டு வழக்கில் தொடர்பு இருப்பது அம்பலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: யார் அந்த சார் ஞானசேகரன் கூட்டாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை கிண்டி அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஞானசேகரன். இந்த சம்பவத்தில் மாணவியை மிரட்டும்போது செல்போனில் ஒருவரிடம் சார் என்று கூறி பேசியதாக கூறப்பட்டதால் இந்த விவகாரம் பெரும் பேசு பொருளானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uyv73z79&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சம்பவத்துக்கும், சார் என்று அழைத்து ஞானசேகரன் போனில் பேசிய ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. யார் அந்த சார்? என்பது தெரியவேண்டும் என்று கூறி எதிர்க்கட்சிகள் போராட்டத்திலும் இறங்கின. கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது 7 திருட்டு வழக்குகளை சென்னை பள்ளிக்கரணை போலீசார் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந் நிலையில், ஞானசேகரன் கூட்டாளி பொள்ளாச்சி முரளி என்பவரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.2022ல் 2 திருட்டு சம்பவங்களை பொள்ளாச்சி முரளி அரங்கேற்றியதாக போலீசர் கூறி உள்ளனர். இதே வழக்கில் ஞானசேகரனிடம் திருட்டு நகை வாங்கியதாக நகை வியாபாரி குணால் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளது, குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

R K Raman
மார் 08, 2025 22:19

இதுவே உ பியாக இருந்தால் புல்டோசர் வேலைகள் நடந்து இருக்கும்


கத்தரிக்காய் வியாபாரி
மார் 07, 2025 21:33

சபாநாயகர் அப்பாவு தம்பின்னு தெளிவா போடுங்க தினமலர்


sankaranarayanan
மார் 07, 2025 21:22

இன்னும் சார் யார் என்று வெளி வரவில்லையே அந்த சார் அமைச்சராகவும் இருக்கலாம் கட்சியில் பிரமுகராகவும் இருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுகின்றன சார் யார் என்று வெளிவரும்வரை இந்த வழக்கு சென்று கொண்டே இருக்கும்


நிக்கோல்தாம்சன்
மார் 07, 2025 21:08

நம்பித்தான் ஆகணும் இல்லையா சொட்டையாப்பாரே


Mecca Shivan
மார் 07, 2025 20:51

பாலியல் வழக்கை திருட்டு வழக்காக திசை திசை திருப்பும் போலீஸ் .. அவனை கைது செய்தது அடிப்படை குற்றமாக கருதப்படும் கற்பழிப்பு கள் .. ஆனால் அவனை பற்றி வரும் செய்திகள் அனைத்தும் திருட்டு மட்டுமே


Ashok Subramaniam
மார் 07, 2025 20:37

ஆளும் கட்சிக்கு வலிக்காமல் அடிக்கிற கலையில் தேர்ந்துவிட்ட ஊடகமாகத்தான் தோன்றுகிறது...


Raghavan
மார் 07, 2025 20:34

இவன் கட்டியுள்ள வீடு கோவில் இடம் என்றும் அதற்க்கு உரிய அனுமதி பெறவில்லை என்றும் பத்திரிகைகளில் செய்தி வந்தது. இப்போது அந்த வீட்டை காலி செய்துவிட்டானா இல்லையா? அரசாங்கமோ அல்லது அறநிலைத்துறையோ அவனுக்கு நோட்டீஸ் கொடுத்து காலி செய்ய சொல்லி இருக்கிறார்களா? இல்லை "அந்த சார்" எல்லாவற்றையும் சரி செய்து விட்டாரா? ஆடி கார் யாருடையது? அதில் வந்த "அந்த சார்" யார்? இந்த வழக்கை சிபிஐ இடம் கொடுத்தால்தான் எல்லா உண்மைகளையும் கண்டறியலாம்.


rama adhavan
மார் 07, 2025 20:07

எனக்கென்னவோ உண்மையான சாரை எப்போவும் கண்டுபிடிக்க இயலாது என நினைக்கிறேன்.


Karthik
மார் 07, 2025 20:02

"யார் அந்த சார்" னு கண்டு பிடிச்சுட்டாங்களாம். அதாங்க நம்ம போலி சார்.. இனி "யாரோ அந்த சார்"..


Sudha
மார் 07, 2025 19:39

அவ்வளவு தான் விஷயமா? யாரோ மண்டபத்தில் எழுதி கொடுப்பதை மட்டும் பிரசுரிப்பீர்களா? கேஸ் எங்கே உளளது? பிரியாணி கடை என்ன ஆயிற்று? சார்களுக்கு குடும்பம் மனைவி மக்கள் இருக்கிறார்களா? அவர்களது கட்சி பதவி என்ன ஆயிற்று? சரி போகட்டும், பல்கலை வளாகத்தில் என்ன மாற்றங்கள் வந்துள்ளன? வெயிலில் போக பயமாக உள்ளதா? வேறு பயமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை