உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புகார் வாங்க மறுத்ததால் அதிருப்தி! போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு

புகார் வாங்க மறுத்ததால் அதிருப்தி! போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் பரபரப்பான பகுதியில் அமைந்துள்ள போலீஸ் ஸ்டேஷன் முன்பு ஒருவர் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை உயிரிழந்தார்.இதுபற்றிய விவரம் வருமாறு; ஆர்.கே. நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்றிரவு ஒரு வாலிபர் வந்துள்ளார். கையில் அவர் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலையும் கொண்டு வந்ததாக தெரிகிறது. திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை, போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வாசலுக்கு வந்த அவர், பாட்டிலில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தம் மீது ஊற்றி உள்ளார். பின்னர், தன்னைத் தானே தீ வைத்துக் கொண்டு இருக்கிறார். நொடிக்கும் குறைவான நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் பரபரப்பான அந்த பகுதியே திடீர் களேபரமானது. உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள், தீ வைத்துக் கொண்ட வாலிபர் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர். படுகாயங்களுடன் கதறிய அவரை அனைவரும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை ராஜன் உயிரிழந்தார்.தகவலறிந்த போலீசார், சம்பவ பகுதியில் விசாரணை நடத்தினர். அதில் தீக்குளித்த நபர் பெயர் ராஜன் (30) என்பது தெரிய வந்தது. மேலும் தம்மை தாக்கிய இருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வந்ததும், போலீசார் மனுவை வாங்க மறுத்துவிட்டதால் இப்படி செய்துவிட்டதும் தெரிய வந்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

நிக்கோல்தாம்சன்
ஜன 21, 2025 21:48

இருண்ட காலத்தின் கோலங்கள்


ச்ய்பெர்
ஜன 22, 2025 05:45

அனுதாபி


Ramesh Sargam
ஜன 21, 2025 20:18

தாக்கிய நபர் திமுக விசுவாசியாக இருக்கலாம். ஆகையால் இந்த கைக்கூலி போலீஸ் மனு வாங்க மறுத்துள்ளது.


கத்தரிக்காய் வியாபாரி
ஜன 21, 2025 17:26

சட்டம் ஒழுங்கு அண்ணாத்தையோட நேரடி கண்காணிப்புல இருக்கிறது. அதனால்தான் எவனும் வேலை செய்ய மாட்டேங்குறான்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 21, 2025 17:00

தமிழ்நாட்டு மந்திரிசபையில் ஒவ்வொரு துறைக்கும் மந்திரிங்க இருக்குற மாதிரி இந்த போலிஸ் துறைக்கு மந்திரி கிடையாதா


R.RAMACHANDRAN
ஜன 21, 2025 15:54

காவல் துறையினரின் சட்ட விரோத செயல்களுக்கு அளவே இல்லை.அவர்கள் குற்றவாளிகளுக்கு புகலிடம் அளித்து ஆதாயம் காண்பதில் வல்லவர்களாக இருப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன.அவர்கள் புகார்களை வாங்கி பதிவு தேய்த்தாலும் பின்னர் எதிரிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு புகார் கொடுத்தவரை நிர்கதியாக்கிவிடுவார்.


சமீபத்திய செய்தி