உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் மூத்த குடிமக்களுக்கு ஜன.31 வரை கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

சென்னையில் மூத்த குடிமக்களுக்கு ஜன.31 வரை கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

சென்னை: மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன் ஜன 31ம் தேதி வரை வழங்கப்படும் என்று சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவு; மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் சென்னை சார்ந்த மூத்த குடிமக்களுக்கான ஜனவரி 2026 முதல் ஜூன் 2026 வரை பயன்படுத்தக்கூடிய ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்திற்கான கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்கள் வழங்குதல் மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல் / புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகியவை இன்று(டிச.21) முதல் வழங்கப்படுகிறது. பயண டோக்கன்கள் 31 ஜனவரி, 2026 வரை வழங்கப்படும்.மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்கள் காலை 08.00 மணி முதல் இரவு 07.30 வரை அடையாறு, திருவான்மியூர், பூந்தமல்லி, மாதவரம் என மொத்தம் 42 மையங்களில் வழங்கப்படும்.இவ்வாறு அந்த எக்ஸ் வலைதள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramachandra Moorthy
டிச 26, 2025 17:21

Useful to Elders


Ramachandra Moorthy
டிச 26, 2025 17:19

Its very useful to Elders really appreciate.


Manickavelu Rathinavelu
டிச 25, 2025 16:52

மகிழ்ச்சி தரும் பதிவு


Manickavelu Rathinavelu
டிச 25, 2025 16:51

மிக சிறப்பு வாழ்த்துக்கள்


Kalyanasundaram Linga Moorthi
டிச 21, 2025 19:51

election stunt soon can expect 30% increase on the transport fares anytime


Vasan
டிச 21, 2025 20:16

If the scheme is extended to all those who are all 18 plus years of age, we can suspect whether it is an election stunt. But the Govt has announced it for senior citizens only, who form only a part of the voters. So I dont think it is an election stunt.


முக்கிய வீடியோ