உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை புறநகர் ரயில் சேவையில் முக்கிய மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை புறநகர் ரயில் சேவையில் முக்கிய மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை; சென்னை கடற்கரை-செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் நாளை (ஜன.14) ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்து உள்ளனர். பண்டிகை எதிரொலியாக தொடர் விடுமுறை விடப்பபட்டு உள்ளதால் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.பயணிகளின் வசதிக்காக ஏராளமான சிறப்பு பஸ்கள், ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் கூடுதல் பாதுகாப்பும், கண்காணிப்பும் போடப்பட்டு உள்ளது.இந் நிலையில் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளதால் மின்சார ரயில்களின் அட்டவணையில் தெற்கு ரயில்வே மாற்றம் செய்துள்ளது. அதன்படி நாளை (ஜன.14) சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், சூளுர், செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் புறநகர் ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படியே இயங்கும் என்றும் தெற்கு ரயில்வே கூறி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி