உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் பிரபல துணிக்கடையில் திடீர் தீ; அலறி ஓடிய ஊழியர்கள், பொதுமக்கள்

சென்னையில் பிரபல துணிக்கடையில் திடீர் தீ; அலறி ஓடிய ஊழியர்கள், பொதுமக்கள்

சென்னை: சென்னையில் பிரபல துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தை அறிந்து ஊழியர்கள், பொதுமக்கள் அலறி ஓடினர்.சென்னை ரங்கநாதன் தெருவில் பிரபலமான துணிக்கடை ஒன்று உள்ளது. 2 அடுக்கு மாடிகள் கொண்ட இந்த கடையில் வழக்கம் போல் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கடையின் முதல் மாடியில் தீப்பிடித்தது. இதை அறிந்த ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர். தீப்பிடித்ததை கண்ட பொதுமக்கள் உடனடியாக அப்பகுதியில் இருந்து ஓடினர்.தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். சிறிது நேர போராட்டத்துக்குப் பின்னர், அவர்கள் தீயை கட்டுப்படுத்தினர். நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவிதமான காயம் ஏற்படவில்லை.விசாரணையில்,மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது என்பது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

chennai sivakumar
மே 12, 2025 21:07

ஆக்கிரமிப்புகளால் குறுகிய ரங்கநாதன் தெருவுக்குள் தீ அனைக்கும் படையினர் செல்வதற்குள் மொத்தமும் பஸ்மம் ஆகி விட்டு இ ருக்கும்.


சுந்தரம் விஸ்வநாதன்
மே 12, 2025 20:01

வழக்கம்போல மின்கசிவு


krishnamurthy
மே 12, 2025 20:00

எந்தக்கடை என்று கூறலாமே .


Anantharaman Srinivasan
மே 12, 2025 22:41

Jayachandra