வாசகர்கள் கருத்துகள் ( 1 )
5000 கோடி - சென்னை ஸ்மார்ட் சிட்டி - கொள்ளை அடிக்கப்பட்டது இந்த மழையினால் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்து விட்டது.
சென்னை: சென்னையில் பெஞ்சல் புயல் அறிவிப்பால் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்துள்ளது.வங்கக்கடலில் உருவாகி மெல்ல, மெல்ல நகர ஆரம்பித்துள்ள பெஞ்சல் புயலால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தலைநகர் சென்னையில் நேற்றிரவு முதல் பல்வேறு பகுதிகளில் பெய்ய தொடங்கிய மழை இன்னமும் ஓயவில்லை. சென்னை சென்ட்ரல், கிண்டி, கத்திபாரா, அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xk6pt1t3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தொடர் மழையுடன் சூறாவளி காற்றும் வீசி வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் குறைந்துள்ளது. அரசு பஸ்கள் தவிர மற்ற வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற தேவைகளுக்காக மக்கள் வெளியில் வராமல் பாதுகாப்பாக வீடுகளிலேயே உள்ளனர். சாலைகளில் போதிய வெளிச்சம் இல்லாமல் காணப்படுவதால், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களில் மக்கள் செல்கின்றனர். மழைநீர் எங்கு எல்லாம் தேங்கி இருக்கிறதோ அதை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
5000 கோடி - சென்னை ஸ்மார்ட் சிட்டி - கொள்ளை அடிக்கப்பட்டது இந்த மழையினால் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்து விட்டது.