உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சான்சே இல்லை! 2 நாட்கள் ரெட் அலர்ட்! ஷாக் தந்த வானிலை நிலவரம்

சான்சே இல்லை! 2 நாட்கள் ரெட் அலர்ட்! ஷாக் தந்த வானிலை நிலவரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு 2 நாட்கள் ரெட் அலர்ட் அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது. வானிலை நிலவரம் நேற்று போல இன்று இல்லை. தலைநகர் சென்னையில் நேற்றிரவு பெய்யத் தொடங்கிய மழை, தற்போது வரை நான்ஸ்டாப்பாக பெய்து தள்ளி வருகிறது. இடைவிடாது கொட்டும் மழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. முக்கிய பகுதிகள் என்றில்லாமல் சென்னை தவிர்த்து காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4lg1da81&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னையில் மட்டும் நேற்றிரவு முதலே இடைவிடாது மழை கொட்டி வருகிறது. மேலும் தற்போதுள்ள நிலையை காட்டிலும் மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் கவனமுடன் இருக்குமாறு தமிழக அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் மழை நிலவரம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.அதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரெட் அலர்ட் என்னும் அதி கனமழை பெய்யும் வாய்ப்புகள் அதிகம். கிட்டத்தட்ட 204 மில்லிமீட்டருக்கு மேல தான் மழை பதிவாகும். அதாவது 20 செ.மீட்டருக்கும் அதிகமாகத்தான் மழை இருக்கும் என்பதாகும்.மேலும் எந்த மாவட்டங்களில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது என்ற விவரமும் குறிப்பிடப்பட்டு உள்ளது, அதன் விவரம் வருமாறு; ஆரஞ்சு அலர்ட் அக்.15; ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகைஅக்.16: ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் அக்.17: திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ரெட் அலர்ட் அக். 15 மற்றும் அக்16: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Jey a
அக் 15, 2024 19:31

தாய் மொழியில் எழுதவும்...கொத்தடிமைகளே


Smba
அக் 15, 2024 14:23

இப்பதான் கலர்கலரா மழை முன்பு கலர் இல்ல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை