உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்சி பொறுப்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை

கட்சி பொறுப்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: தி.மு.க., மண்டல பொ றுப்பாளர்களுடன், கட்சிப் பணிகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் நேற்று மருத்துவமனையில் ஆலோசனை நடத்தினார். தலை சுற்றல் காரணமாக, கடந்த 21ம் தேதி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், முதல்வர் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின், அவரது இதயத் துடிப்பு சீராக செயல்பட, 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந் தபடி, அரசு அலுவல் மற்றும் கட்சிப் பணிகளை, முதல்வர் கவனித்து வருகிறார். தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் அளிக்க வேண்டிய மனு தொடர்பாக, தலைமைச் செயலர் முருகானந்தம் உடன் நேற்று காலை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது கனிமொழி எம்.பி., முதல்வரின் செயலர்கள் உடனிருந்தனர். பின்னர், நேற்று மாலை, தி.மு.க., மண்டல பொறுப்பாளர்களுடன், முதல்வர் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக, முதல்வர் வெளியிட்ட அறிக்கை: தி.மு.க.,வினர் களத்தில் ஓய்வின்றி களமாடும்போது, டாக்டர்கள் வற்புறுத்தினாலும், எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை. உயிராக நம்மை இயக்கும் கட்சியின் களச்செயல்பாடுகள் குறித்து, தி.மு.க., மண்டல பொறுப்பாளர் களிடம் ஆலோசித்தேன். அப்போது, உறுப்பினர் சேர்க்கையில், 150 தொகுதிகளில், நம் இலக்கை எட்டிய இன்பச் செய்தியை, அவர்கள் பகிர்ந்தனர். ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுப்பு குறித்து, ஆலோசனைகள் வழங்கி உற்சாகம் பெற்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !