உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரிவினைவாதத்தை துாண்டுகிறார் முதல்வர்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

பிரிவினைவாதத்தை துாண்டுகிறார் முதல்வர்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

சென்னை : “தனித் தமிழ்நாடு, தனிக்கொடி வேண்டும் என முதல்வர் நினைக்கிறார். பிரிவினைவாதத்தை துாண்டுகிறார்,” என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

நேற்று அவர் அளித்த பேட்டி:

மாநிலங்களை பிரிக்க வேண்டும் என, பிரிவினைவாதத்தை முதல்வர் துாண்டுகிறார். இந்திய நாடு வல்லரசாக வேண்டும், ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை. தனித் தமிழ்நாடு வேண்டும்; தனிக்கொடி வேண்டும் என, முதல்வர் நினைக்கிறார். அதனாலேயே சட்டசபையில் மாநில சுயாட்சியை வலியுறுத்துவது போல, பிரிவினை வாதத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதை பா.ஜ., கண்டிக்கிறது.இந்தியா வல்லரசாக, அனைத்து மாநிலங்களும் ஒன்றாக இருக்க வேண்டும். இந்திய நாடு நிர்வாக வசதிக்காக, பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. சட்டசபை தேர்தலை முன்னிறுத்தி, ஏதேனும் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, தி.மு.க., நினைக்கிறது.இது மக்களுக்கும், நாட்டுக்கும் விரோதமான செயல். மக்கள் இதை சிந்தித்து, வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும். பெண்களை அவதுாறாக, அமைச்சர் பொன்முடி பேசி உள்ளார். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதுகுறித்து, கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

rishya
ஏப் 17, 2025 15:57

இந்த திராவிட கூட்டம் கடந்த அறுபது வருடமாக "மாநிலங்களுக்கு உரிமை, அதிகாரம்" என்று தன்னையும் தன் குடும்பத்தையும் வளர்த்துக் கொள்கிறார்கள். மற்ற மாநிலங்களில் பணி, வியாபாரம் நிமித்தமாக செல்லும் தமிழக மக்களுக்கு எவ்வளவு அழுத்தம் ஏற்படுகிறது என்பதை இந்த கையாலாகாத கூட்டம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நிறுவனத்தில் பணி புரியும் பொது ஏற்படும் போட்டிகளில் கேரளாக்காரர்களும், மற்றவர்களும் இந்த தமிழ் பிரிப்பு போக்கை கோள் மூட்ட பயன்படுத்துவதும் இண்டடைய தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுக்கும் கட்சி காசில் உயிர் வாழும் விசுவாசிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை .


Sampath Kumar
ஏப் 17, 2025 09:42

பிரிவினை வாதம் இதுக்கு உன்னக்கு முதல அர்த்தம் தெரியுமா? சும்மா வாய்க்கு தந்தை உள்ளரதே அதை தூண்டி விடுவதே உங்க கட்சி காரனின் கொள்கையும் ன் யம் அராஜகமும் தாண்டா முக்கிய காரணம் முதல் அதை பத்தி பேசு பார்க்கலாம்


nisar ahmad
ஏப் 16, 2025 13:42

தவறில்லை ஒன்றிய அரசு தமிழகத்திலிருந்து வரியை வசூலித்து வட மாநிலங்களுக்கு வாரி வழங்குவதூம் தமிழகத்தை வஞ்சிப்பதும் செய்தால் வேறு என்ன செய்து.பிரிவினையை முதல்வர் தூண்டவில்லை ஒன்றிய அரசு தூண்ட வைக்கிறது.


Nallavan
ஏப் 16, 2025 12:15

மாநில சுயாட்சி தத்துவத்தின் படி, மாநில அரசுக்கு நிதி கொடுக்காத ஒன்றிய அரசுக்கு எதிராக தனி வீடு, கொடி கேட்பதில் இந்த தவறு


Barakat Ali
ஏப் 16, 2025 11:30

சீரியஸான குற்றச்சாட்டு.... முதல்வர் பதிலளிக்க வேண்டும் .... அல்லது நாகேந்திரன் மீது வழக்குத் தொடர வேண்டும் .....


Rengaraj
ஏப் 16, 2025 11:23

திமுக வுக்கு தெரிந்ததெல்லாம் வக்கீல் படைகளை கொண்டு வழக்கு பதிவு, அதிகாரத்தை வைத்து மிரட்டல், குண்டர் படை கொண்டு அடிதடி, தனது பேச்சாளர்களை கொண்டு வக்கிரம் கலந்த ஆபாச பேச்சு, பொய் மற்றும் பித்தலாட்டம் பண்ணி இருக்கும் பிரச்சினையை திசை திருப்பல், நடக்காத ஒன்றுக்காக கற்பனையில் பிரச்சினைகளை உருவாக்கல். திமுக சரித்திரத்தை அவர்களின் அந்நாள், இந்நாள் பிரமுகர்களை கொண்டு ஆராய்ந்தால் இவை ஏராளமாக இருக்கும். இப்போது கூட முதல்வரின் பேச்சில் இல்லாத ஒன்றை கற்பனைக்கொண்டு பேசி இருக்கும் பிரச்சினைகளை மூடி மறைக்கவும், திசை திருப்பவும் சட்டசபையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார். தமிழகத்தில் பிரச்சினைகளே இல்லையா? அதற்கு பதில் சொல்வதில்லை. கேள்வி கேட்கும் நபர்களையும் சட்ட சபையை விட்டு வெளியில் அனுப்பும் எல்லாவித முயற்சிகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.


baala
ஏப் 16, 2025 10:52

அவர் போய் இவரு


Thetamilan
ஏப் 16, 2025 08:56

மோடியின் துதிபாடிகள் ஏஜெண்டுகள்


vivek
ஏப் 16, 2025 16:09

சரிங்க 200 ரூபாய் கொத்தடிமை


Velan Iyengaar
ஏப் 16, 2025 08:38

பிரிவினைவாதத்தை தூண்ட முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியை துணைக்கு அழைப்பார்களா ?? அடப்பாவிகளா


V Venkatachalam
ஏப் 16, 2025 09:11

உச்ச நீதி மன்ற நீதிபதிக்கு பின்னாடி போய் நின்னுட்டா இவனுங்க ரொம்ப யோக்கியனுங்க..


GMM
ஏப் 16, 2025 08:35

கருணாநிதியை விட பலமடங்கு ஊழலில் திமுக. ஊழல் விசாரணை வேகத்தை குறைக்க திமுக கையில் எடுக்கும் ஆயுதம் உடனுக்குடன் வழக்கு, மாநில சுயாட்சி ,இந்தி எதிர்ப்பு, தனக்கு உதவாத பிஜேபி மீது வெறுப்பு உணர்வை தூண்டுவது. தினமும் புதுவித தேச விரோத மசோதா மூலம் பிரிவினை தூண்டுவது. . இந்த முறை எதிர் கட்சிகள் ஒன்று சேர்ந்தால், திமுக மிக பெரிய தோல்வியை சந்திக்கும். வழக்கு சட்டபடி நடந்தால், திகார், புழல் சிறை இடம் போதாது.


புதிய வீடியோ