உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்திய ராணுவத்துக்கு ஆதரவு: சென்னையில் ஒற்றுமை பேரணி: முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு: சென்னையில் ஒற்றுமை பேரணி: முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று ஒற்றுமை பேரணி நடந்தது. மெரினா கடற்கரையில் உள்ள டி.ஜி.பி., அலுவலத்தில் துவங்கிய பேரணி, தீவுத்திடல் போர் நினைவுச் சின்னம் வரை நடந்தது. பேரணியில் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், காவல் துறையினர், என்.சி.சி., மாணவர்கள் என, 10,000க்கும் மேற்பட்டோர், கைகளில் தேசியக்கொடி ஏந்தியவாறு பங்கேற்றனர்.காமராஜர் சாலை மற்றும் நேப்பியார் பாலம் வழியாக, ஒரு மணி நேரம் நடந்த பேரணி, போர் நினைவுச் சின்னம் அருகே நிறைவு பெற்றது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, இந்தியா - பாகிஸ்தான் போரில் வீரமரணம் அடைந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முரளி நாயக் உருவப்படத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் மலர் துாவி மரியாதை செலுத்தினார். டி.ஜி.பி., அலுவலகம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை, 200 நிழற்கூடங்கள்; 50 கழிப்பறைகள்; 10 மருத்துவ முகாம்கள்; 71 குடிநீர் தொட்டிகள்; 15 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இதில் பங்கேற்ற பின், துணை முதல்வர் உதயநிதி கூறுகையில், ''தேசப்பற்றில் முதன்மையான மாநிலமாக தமிழகம் உள்ளது. மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக முதல்வர் ஸ்டாலின், நம் ராணுவத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், இந்த ஒற்றுமை பேரணியை நடத்தி உள்ளார். இது, நம் ராணுவத்திற்கு நாம் செய்யும் நன்றி,'' என்றார். தி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறுகையில், ''ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு நம்பிக்கை தருவதோடு, அவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் என்றும் இருப்போம் என்பதை குறிக்கும் வகையில் இந்த பேரணி நடந்தது. நம்மை காக்க உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு, நாம் உறுதுணையாக இருப்போம்,'' என்றார். பேரணியில், அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு, சுப்பிரமணியன், மகேஷ், செழியன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, வி.சி., தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்வர் ஸ்டாலினுக்கு

கவர்னர் ரவி பாராட்டுராணுவத்துக்கு ஆதரவாக, சென்னையில் மக்கள் பேரணி நடத்திய முதல்வர் ஸ்டாலினுக்கு, கவர்னர் ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட பதிவு:பாகிஸ்தானிய ராணுவ ஆக்கிரமிப்பு செயல்களுக்கு எதிராக, நாட்டை துணிச்சலுடனும், வெற்றிகரமாகவும் பாதுகாக்கும் இந்திய ஆயுதப் படைகளுடன், எட்டு கோடி தமிழக மக்களின் தெளிவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், நேற்று மாலை பிரமாண்டமான மக்கள் பேரணியை, முதல்வர் ஸ்டாலின் நடத்தியுள்ளார். இதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.நம் ஆயுதப் படைகளுடன், இந்திய தேசம் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் துணை நிற்கிறது. இது, பயங்கரவாதத்தின் அனைத்து முனைகளையும் அழித்தொழித்து, நம் தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நம் ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

kumar
மே 11, 2025 21:49

இந்த ஆள் காமெடிக்கு ஒரு அளவில்லையா ? வருடம் முழுக்க இந்திய இறையாண்மைக்கு எதிராக, இந்திய ஒற்றுமைக்கு எதிராக நடந்து கொண்டு , ராணுவ செயல்களிலும் , நாட்டு முன்னேற்றத்திலும் மதசாயம் பூசிக்கொண்டு , தேசிய கீதம் பாடுவதே தங்கள் மதத்துக்கு எதிரான செயல் என்று பாடாமல் இருப்பதை ஆதரித்து கொண்டு இருப்பது என்று எல்லாம் செய்து கொண்டு , திடீரென்று நாட்டு பாசம் பொங்கி வருகிறதோ ? அது சரி ... தேர்தல் வருகிறது ... அமலாக்க துறை விசாரணையில் யார் யார் எல்லாம் மாட்டப்போகிறார்களோ ? எதுக்கும் கொடிய தூக்கி வைப்போம்


VIDYASAGAR SHENOY
மே 11, 2025 18:06

போருக்கு நடுவுல அப்பா வோட காமெடி


Selliah Ravichandran
மே 11, 2025 17:47

Mr.Stalin already warned stoped one week ago.i have remember last minute Sri Lanka war your father did also like this so no need don't disturb public thank u


Sundar R
மே 11, 2025 14:00

திராவிட ஜோக்கர்ஸ்


panneer selvam
மே 11, 2025 12:46

Stalin ji, just because of your procession, Indo - Pak war becomes standstill . Same way , please conduct similar processions to stop the wars in Gaza and Ukraine. It is the grea achievement of Dravidian Model .


Enrum anbudan
மே 11, 2025 12:28

மிக கேவலமான தேர்தல் நேர அரிதாரம், காஸ்மீரில் உள்ள மாணவர்களை கூட்டிக்கொண்டு வந்து அதை விளம்பரப்படுத்துகின்ற தரங்கெட்டவர்கள் தற்பொழுது தமிழகத்தை ஆளும் ஆளும்கட்சி. தனி நாடு போல இவர்களின் இயல்பாடுகள் உள்ளது. மத்திய அரசு ஏன் ஒரு நடவடிக்கையும் இல்லாமல் இன்னும் தூங்கிக்கொண்டு இருக்கின்றது என்று தெரிய வில்லை.


Bhaskaran
மே 11, 2025 11:52

புது வேஷம்


Sridharan Venkatraman
மே 11, 2025 11:14

எங்க தலிவரு ஊர்வலம் -ன்னு சொன்னுதுமே சண்டை நின்னுடுச்சு.


theruvasagan
மே 11, 2025 10:50

எல்லாம் காலத்தின் கோலம். வேறேன்னத்த சொல்ல


ஆரூர் ரங்
மே 11, 2025 10:22

நாட்டைப் பிரித்த முஸ்லிம் லீக்குடன் கூட்டு சேர்ந்து ஊர்வலம்? ஊரை ஏமாற்றும் தி.மு.க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை