உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்; முதல்வர் பெருமிதம்

கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்; முதல்வர் பெருமிதம்

சென்னை: தஞ்சை - புதுக்கோட்டையில் அமைந்துள்ள கடற்பசுப் பாதுகாப்பகத்திற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது பெருமையளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972ன் அட்டவணை 1ன் கீழ் கடற்பசு இனங்கள் பாதுகாக்கப்படுகின்றன. வாழ்விட இழப்பு காரணமாக எண்ணிக்கையில் மிகவும் குறைந்த அளவிலேயே கடற்பசுக்கள் இருக்கின்றன. எனவே, கடற்பசு இனத்தையும், அதன் கடல் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் பொருட்டு, 448 சதுர கி.மீ பரப்பளவில் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பாக் விரிகுடாவை கடற்பசு பாதுகாப்பகமாக தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில், தஞ்சை - புதுக்கோட்டையில் அமைந்துள்ள கடற்பசுப் பாதுகாப்பகத்திற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது பெருமையளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; தஞ்சை - புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைந்த பாக் வளைகுடாவில், திமுக அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்!இந்த முன்னோடி முயற்சியைப் பாராட்டும் தீர்மானம், அபு தாபி பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் உலக பாதுகாப்பு மாநாட்டுக்கு முன் ஆன்லைன் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. இந்த முயற்சியில் பங்கேற்ற தமிழக வனத்துறை மற்றும ஓம்கார் அறக்கட்டளை உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள்!, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Thiagaraja boopathi.s
செப் 25, 2025 21:30

ஸ்டிக்கர் திமுக


N S
செப் 25, 2025 19:34

திராவிட மாடல் அரசு சொன்னதை செய்யும். சொல்லாததையும் செய்யும். எல்லாம் அப்பா முயற்சி.


Kjp
செப் 25, 2025 19:13

பெரும்பாலும் இப்போது முதல்வருடைய அறிக்கைகளை யாருமே சீரியஸ் ஆக எடுத்துக் கொள்வதில்லை. அவர் எழுதிக் கொடுத்து தானே படிக்கிறார் என்று கிட்டத்தட்ட எல்லோருக்கும் தெரிந்து விட்டது.


என்றும் இந்தியன்
செப் 25, 2025 17:03

கடற்பசு பாதுகாப்பகம் அப்படியென்றால் என்னவென்று தெரியுமா சுடலை மாயாண்டி ஜோசப் கான்???ஒரு வரைவு எல்லை கணித்தல் என்று அர்த்தம்???சரி வரைவு எல்லை ஓகே???இதுவரை அங்கு என்ன ஆய்வு நடந்தது அதன் ஆக்கம் என்ன???இந்த மாதிரி ஒரு மண்ணும் தெரியாமல் செய்யாமல்???அந்த உலகளாவிய அங்கீகாரத்தின் பயன் தான் என்னா???நீ முதல்வராக இருப்பதற்கும் இல்லாமல் இருப்பதற்கும் மூளை உபயோகம் செய்யாத போது என்னவாகும் அதைப்போல உள்ளது இந்த டப்பா???


Venugopal S
செப் 25, 2025 19:04

தமிழக முதல்வரை இத்தனை கேள்விகள் கேட்கிறீர்களே, உங்களுக்கு முதலில் கடல்பசு என்றால் என்ன என்று தெரியுமா?


Ramesh Sargam
செப் 25, 2025 13:26

சென்னை வீதிகளில் சுற்றிதிரியும் பசுக்கள் பாதுகாப்புக்கு முதலில் நீங்கள் ஆவண செய்யவும்.


புதிய வீடியோ