உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திட்டங்களுக்கு தந்தையின் பெயரை வைக்க முனைப்பு காட்டும் முதல்வர்; அண்ணாமலை விமர்சனம்

திட்டங்களுக்கு தந்தையின் பெயரை வைக்க முனைப்பு காட்டும் முதல்வர்; அண்ணாமலை விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்கெல்லாம், தனது தந்தையின் பெயரை வைக்க முதல்வர் ஸ்டாலின் முனைப்பு காட்டுகிறார்'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

அவரது அறிக்கை:

சுதந்திரப் போராட்டத் தியாகி காளியண்ணன், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகவும், தமிழகத்தின் முதல் சட்டசபை உறுப்பினராகவும், மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், காமராஜர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவரும் ஆவார். தமது பொதுவாழ்வில், தமிழகம் முழுவதும் பல நூறு அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் அமையவும் காரணமாக இருந்தவர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=52ni3o5p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமது சொந்த நிலங்களை, ஏழை, எளிய மக்களுக்குத் தானமாக வழங்கி, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றியவர். ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் முன்னேற முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர். இத்தனை சிறப்புக்குரிய காளியண்ணன் பெயரை, நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வைக்க வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக, பொதுமக்களால் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக அரசு இதுவரை இந்தக் கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்கெல்லாம், தனது தந்தையின் பெயரை வைக்க முனைப்பு காட்டும் முதல்வர் ஸ்டாலின், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்த காளியண்ணன் பெயரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வைக்க ஏன் மறுக்கிறார்? ஒவ்வொரு பகுதிகளின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தலைவர்களின் பெயர்களையே அங்குள்ள பஸ் நிலையம், கல்லூரிகள் உள்ளிட்ட மக்கள் பயன்படுத்தும் பொது இடங்களுக்கு வைக்க வேண்டும் என்பது, பொதுமக்களின் எதிர்பார்ப்பு. ஆனால் திமுக எப்போதுமே, மக்களுக்காகப் பாடுபட்ட தமிழகத்தின் பல்வேறு தலைவர்களின் பெயரை இருட்டடிப்பு செய்வதையே வேலையாக வைத்திருக்கிறது. நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கு, காளியண்ணன் பெயரை வைப்பது குறித்து, முதல்வர் ஸ்டாலின் உடனடியாக முடிவெடுக்கவில்லை என்றால், பொது மக்களைத் திரட்டி, உண்ணாவிரதம் உள்ளிட்ட கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நடத்தவிருப்பதாக, கொங்கு நாட்டு வேளாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்திருக்கின்றன. எனவே, இனியும் தாமதிக்காமல், நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கு, காளியண்ணன் பெயரை வைக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று, முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Ramesh Sargam
ஜூலை 28, 2025 21:13

கருணாநிதியின் பெயர் எங்கெல்லாம் வைக்கவேண்டுமோ அங்கெல்லாம் இல்லை. அது என்ன எங்கெல்லாமோ? அது ஒரு சிலருக்கு புரியும்.


ramesh
ஜூலை 28, 2025 18:12

மோடி பெயரை கிரிக்கெட் ஸ்டேடியம் க்கு வைத்தார்கள் மறந்து விட்டதா அண்ணாமலை


vivek
ஜூலை 28, 2025 19:51

மோடி பெயரை வைத்தது எங்களுக்கு பெருமை...உன்னை போல இருநூறு கொத்தடிமைக்கு புரியாது...


ramesh
ஜூலை 29, 2025 11:48

கடைசிவரையில் 200 ரூபாய்க்கு கமலாலயத்தில் விழுந்து கிடைக்கும் கொத்தடிமை தான் நீ விவேக்


S.V.Srinivasan
ஜூலை 28, 2025 14:56

தந்தையின் பெயரோ, தாத்தாவின் பெயரோ, எல்லாம் திட்டமும் தாளில்தான் இருக்கு. செயல் வடிவம் இல்லை. ஆனா பட்ஜெட் மட்டும் கரெக்ட்-ஆ போட்டுடுவாங்க.


திகழ்ஓவியன்
ஜூலை 28, 2025 13:04

வாயை பிளக்கும் குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா அடித்து ஆடிய தமிழ்நாடு ஃபோகசை திருப்பிய உலக நாடுகள்:::சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்து தொடர்ந்து உற்பத்தி நிறுவனங்கள் வர தொடங்கி உள்ளன. முக்கியமாக ஆப்பிள் ஐபோன் உள்ளிட்ட ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் அதிக அளவில் சென்னையை நோக்கி வர தொடங்கி உள்ளன. 2025 நிதியாண்டில் தமிழ்நாடு இதுவரை இல்லாத அளவுக்கு $14.65 பில்லியன் மதிப்புள்ள மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 41.2 சதவீதமாகும். இந்தத் திட்டத்தின் மூலம், தற்போதைய $14.6 பில்லியன் மதிப்பிலிருந்து அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் $50 பில்லியன் அளவிற்கு மின்னணு ஏற்றுமதியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் மூலம், மின்னணு மதிப்புச் சங்கிலியில் மிகவும் சிக்கலான மற்றும் உயர் மதிப்புள்ள பகுதிகளுக்கு விரிவுபடுத்தவும், ஒட்டுமொத்த விநியோகச் சங்கிலியையும் உள்நாட்டில் பூர்த்தி செய்யவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, அண்ணாமலை அவர்களே விடியல் ஆட்சியில் இதை பாருங்க பேர் என்ன சோறு போடுமா


saravan
ஜூலை 28, 2025 13:01

ஆட்சி ஆட்டத்தில் நீங்கள் மாற்றுங்கள் அறிவிக்கலாமே


Sundar R
ஜூலை 28, 2025 12:54

ஒருவர் வீட்டில் பசுமாடு கன்று போட்டதால். அவருடைய வீட்டு நாய் 10 குட்டிகள் போட்டதாம். அவர்கள் வீட்டிற்கு அந்த லோக்கல் எம்எல்ஏ போனாராம். எம்எல்ஏயிடம் அந்த விலங்குகளுக்கு பெயர் வைக்கும்படி கேட்டார்கள். எம்எல்ஏ, பசுமாட்டிற்கு "அண்ணா" என்றும், கன்னுக்குட்டிக்கு "கருணாநிதி" என்றும் பெயர் சூட்டினார். பிறகு, அந்த நாய், பத்து குட்டிகளுடன் இருந்ததால், நாய்க்கு "கருணாநிதி" என்றும் அதன் குட்டிகளுக்கு கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் பெயரையும் சூட்டினார். திமுகவை திட்டி பிரயோஜனம் இல்லை. திமுகவோடு கூட்டணி வைத்து தமிழ்நாட்டை நாசமாக்கும் காங்கிரஸ், கம்மீஸ், விசிக மற்றும் லில்லிபுட் மாதிரி இருக்கும் இதர கட்சியினர்கள் தான் காரணம். அங்க சரி பண்ணணும்.


vivek
ஜூலை 28, 2025 12:52

இன்று முதல் திராவிட அறிவிலிகள் தலைவன் என்ற பட்டம் நமது திகழ் ஓவியருக்கு வழங்கப்படுகிறது


Mario
ஜூலை 28, 2025 12:47

Narendra Modi Stadium cricket ground in Motera, Ahmedabad, Gujarat, India. யாரோட பெயர்?


மூர்க்கன்
ஜூலை 28, 2025 12:33

தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே?? தலைவன் ஒரு விளம்பர பிரியன் அல்ல வெற்றியின் ... தலைவன் நேற்று ராஜ ராஜனுக்கும் ,ராஜேந்திரனுக்கு சிலை வைப்பேன் என்கிறார் ?? இவர் அரசு அமைத்த மருத்துவமனைக்கு அண்ணன் காளியண்ணன் பேர் சூட்ட வேண்டும் என்று போராடுவேன் என்கிறார். ஆனால் மதுரையில் மருத்துவமனை என்னாச்சு ???என்கிற கேள்விக்கே பதில் உள்ள வரை சொல்ல மாட்டார் ?? மதுரையில் ஒண்டிய அரசு மக்களுக்கான மருத்துவமனையை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று மக்களை திரட்டி போராடினால் இவர் அரசியல்வாதி என்று ஏற்று கொள்ளலாம் அதை விடுத்து மாநில அரசு தனது சொந்த நிதியில் அமைத்த ஒருங்கிணைந்த மருத்தவமனைக்கு சென்று பெயர் தகராறு செய்வேன் என்று ஆடம் பிடித்தால் இவனை அரசியல் தெரியாத அரைவேக்காட்டு வியாதி என்றுதான் மக்கள் சொல்வார்கள்.


ஆரூர் ரங்
ஜூலை 28, 2025 16:30

மத்தியில் திமுக 17 ஆண்டுகளுக்கு மேல ஆண்ட போது ஏன் AIMS கட்டவில்லை? 11 ஆண்டு பிஜெபி ஆட்சியில்தான் 60 சதவீத மத்திய நிதியில் 16 அரசு மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் தி.மு.க தனியார் கல்லூரிகள்தான் அதிகம் முளைத்தன. தனியாரால் கட்சிக்கு நிதி கிடைத்ததை ஆற்காட்டார் ஒப்புதல் வாக்குமூலம் போல கூறினாரே.


Samy Chinnathambi
ஜூலை 28, 2025 12:21

போன ஆட்சியில் இருந்த கம்பீரமான சாலை இந்த ஆட்சியில் மட்டும் எப்படி காணாமல் போகிறது.?


திகழ்ஓவியன்
ஜூலை 28, 2025 12:24

குஜராத்தில் இருந்த பாலம் அது இடிந்து லார்ரி தொங்கி கொண்டு இருக்கு அது எப்படி சொல்லுங்கள் பெரிய தம்பி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை