உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் கமிஷன் செய்யும் சதி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

தேர்தல் கமிஷன் செய்யும் சதி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பாஜவுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது'', என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், கூட்டணி கட்சிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது. அவசரகதியில் செய்யப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பாஜவுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது.ஏற்கெனவே, பீஹாரில் பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் - பழங்குடியின மக்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததும் சேர்ந்து, கடும் ஐயத்தை அனைவரது மனதிலும் எழுப்பியிருக்கிறது.தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசியிருக்கிறோம். அதனடிப்படையில் வரும் நவம்பர் 2 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கக் கூட்டம் நடத்தப்படும்.மக்களின் வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதனைப் பறிக்கத் துணியும் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழகம் போராடும். தமிழகம் வெல்லும்! இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

திகழ் ஓவியன், AJAX ONTARIO
அக் 28, 2025 19:48

சவூதியில் பெண்களுக்கு ஓட்டு உரிமை இல்லை. அதை பின்பற்றி இங்கேயும் மார்க்கம் பின்பற்றும் அனைவருக்கும் ஓட்டு உரிமை பறிக்க பட வேண்டும்


V Venkatachalam, Chennai-87
அக் 28, 2025 13:12

தேர்தல் ஆணையம் சதி.‌ ஆஹா. அப்புடியா? இருக்கட்டுமே. இந்த சதியினால் திருட்டு தீய முக வை துடைத்து எறிய முடியுமென்றால் பொது மக்களாகிய நாங்கள் இந்த சதியை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.


Haja Kuthubdeen
அக் 28, 2025 12:50

திமுக எதிர்ப்பதுதான் சந்தேகமா இருக்கு..இப்பவும் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்காமலே நிறைய இருக்கு..டபுல் என்றியும்..ஒரே வாக்காளருக்கு இரண்டு இடங்களில் வாக்குகள் இருக்கு..இது திமுக முகவர்களுக்கு நன்றாகவே தெரியும்.தேர்தலில் வென்றால் வாய் மூடிக்கிறது..தோற்றால் தேர்தல் கமிசன் மீது குறை சொல்வது..இதே பொழப்பு.


V RAMASWAMY
அக் 28, 2025 09:56

தங்கள் குறைகளை மறைக்க மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டிருப்பதும் ஒரு உபாயம்.


S.V.Srinivasan
அக் 28, 2025 09:35

பதவிக்கு வந்ததிலிருந்து 5 வருஷமா இவருக்கு எப்பவும் மத்திய அரசு, மத்திய அரசு சம்பத்தப்பட்ட துறைகளை குறை சொல்றதே பொழப்பா போய்டுச்சுப்பா. வேற நன்மை ஒன்றும் தமிழகத்திற்கு இல்லை.


Indian
அக் 28, 2025 09:21

உண்மை , தேர்தல் கமிஷன் நேர்மையாக செயல்பட வில்லை .


R K Raman
அக் 28, 2025 10:50

தரவுகளை கொடுத்து வழக்கு பதிவு செய்து பார்க்கலாம்... அமலாக்கத்துறைக்கு எதிராக தங்களை காத்துக்கொள்ள எடுக்கப்படும் நடவடிக்கைகள் போல இதற்கும் செய்து பார்க்கலாம்


Haja Kuthubdeen
அக் 28, 2025 12:52

அப்ப எப்டீ பாராளுமன்ற தேர்தலில் உங்க கட்சி 40/40 ஜெயித்தது..ஓட்டு மெசின் சரியா வேல செஞ்சுச்சா...


shyamnats
அக் 28, 2025 08:16

ஒரு முதல்வராக இருந்து கொண்டு , இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது சரியில்லை. இவரும் ராவுல் வின்சியும் ஒருவருக்கு ஓருவர் சளைத்தவர்கள் இல்லை. ஒரு அரசியல்வாதி வீட்டிற்குள் வேறு ஒருவர் அநுமதியில்லாமல் நுழைய முடியுமா அல்லது தங்கதான் முடியுமா? முறையில்லாமல் தங்கி தேர்தல்களில் மற்ற நாட்டவர்கள், இறந்து போனவர்கள் பெயரில் கட்சியினர் வாக்களிப்பது நிச்சயமாக தடுக்க பட வேண்டும்


Madhavan
அக் 28, 2025 08:09

" சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து... சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தெரிந்தும் தெரியாம நடந்திருந்தா அதை திரும்பவும் வராம பார்த்துக்கோ திருடாதே பாப்பா திருடாதே "எனும் பாடல் வரிகள் பட்டுக் கோட்டையார் இயற்றியது ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும் தேர்தல் அதிகாரிகளுக்கும் பொருந்தும். கழகக் கண்மணிகள் பெரியார் வழி வந்த சீர்திருத்தவாதிகள் அல்லவா? வாக்காளர் சீத்திருத்தத்தை ஏன் சந்தேகிக்க வேண்டும்?


Iyer
அக் 28, 2025 07:38

சட்டவிரோதமாக குடியேறிய பங்களாதேஷிகளை களை எடுத்ததால் - பிஜேபி மஹாராஷ்டிராவில் பெரும்பான்மை பெற்று ஜெயித்தது.


Iyer
அக் 28, 2025 07:27

ஹிந்தி பேசும் மற்ற மாநிலங்களில் இருந்து வந்த இந்திய குடிமகனுக்கு வோட்டுரிமை சட்டப்படி தமிழகத்தில் உண்டு - VOTER CARD ஐ மாற்றிக்கொண்ட பிறகு. ஆனால் இந்த குடும்ப ஊழல் கட்சிகள்" - சட்டவிரோதமாக வந்த பங்களாதேஷிகளை அனுமதித்து விடுகின்றனர் - ஏனென்றால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள். மோதிக்கு எதிராக வோட்டளிப்பவர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை