உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்போலோவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்!

அப்போலோவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்!

சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின், நேற்று (ஜூலை 27) மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மூன்று நாள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.கடந்த ஜூலை 21ம் தேதி காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, முதல்வர் ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. சிகிச்சைக்காக, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைகள் முடிவில், இதயத் துடிப்பை சீராக வைக்க உதவும், 'பேஸ் மேக்கர்' கருவி முதல்வர் ஸ்டாலினுக்கு பொருத்தப்பட்டது. நேற்று (ஜூலை 27) மாலை அவர் மருத்துவமனையில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். அவர் மூன்று நாள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.வீடு திரும்பிய முதல்வர் ஸ்டாலினுடன், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் உடன் வந்தனர் ஸ்டாலினை பார்க்க திமுக தொண்டர்கள் ஏராளமானோர் வழிநெடுகிலும் கூடினர்.முதல்வர், முழுமையாக குணம் அடைந்துள்ளதாகவும், மூன்று நாட்கள் இடைவெளிக்கு பின், வழக்கமான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாகவும் அப்போலோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நலம் பெற்று வீடு திரும்பினேன்

வீடு திரும்பிய ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது நலம் விசாரித்தஅனைவருக்கம் எனது நெஞ்சார்ந்த நன்றி. மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சையளித்து,நான் விரைந்து நலம்பெற உறுதுணையாய் இருந்த மருத்துவர்கள்மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் அன்பும், நன்றியும்.https://x.com/mkstalin/status/1949467299041452261 உங்களுக்காக உழைப்பை வழங்கும் என் கடமையை என்றும் தொடர்வேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 88 )

Palanisamy T
ஜூலை 28, 2025 12:28

மோடி அவர்கள் தமிழகம் வரும் வேளையில் முதல்வர் அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டது மிகவும் ஏம்மாற்றமாகவுள்ள்ளது. மோடி அவர்களை நேரிலேயே சந்தித்து பேசும் வாய்ப்பு இப்படி அடிக்கடிக் கிடைக்காது . முதல்வர் அவர்கள் தமிழகத்தின் பல்வேறுப் பிரச்சனைகளை மனம் விட்டுப் பேசி சிலவற்றிற்க்காவது உடனடித் தீர்வுகள் கண்டிருக்கலாம்.


பெரிய ராசு
ஜூலை 29, 2025 14:10

பார்க்கக்கூடாது அப்டிங்கறதுக்காகவே ஆஸ்ப்பிரத்தில போயி படுத்தாச்சு


ram
ஜூலை 28, 2025 04:13

மோடி ஜி நிகழ்ச்சி முடிச்சுட்டு கிளம்பிட்டார்... தானாகவே சரியாகிடும்.. இந்த நாடகமெல்லாம் துணை முதல்வரை முதல்வராக்கும் ஒத்திகைதானே...


Indian
ஜூலை 28, 2025 07:01

கீழ் தரமான கருத்து


vivek
ஜூலை 28, 2025 08:19

கீழ்தரமான கருத்து என்று உனக்கு மட்டுமே தெரிகிறது....எப்படி கைலாசு....எங்களுக்கு அப்படி தெரியல


Kasimani Baskaran
ஜூலை 28, 2025 04:11

தஞ்சை பெரிய கோவில் என்றால் பயப்பட வேண்டும் - ஆனால் கங்கைகொண்ட சோழபுரத்தை நினைத்து ஏன் பயப்பட வேண்டும், அப்போலோவில் ஏன் பதுங்க வேண்டும் என்பதை புரிந்து கொண்ட உபிகள் விளக்க வேண்டும்.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 28, 2025 01:44

பிரதமர் வருகிறார் என்றதும் என்னென்ன நாடகம் . கபட வேடதாரிகள் . இன்னமும் தமிழகம் இவர்களை புரிந்துகொள்ளவில்லையே


உ.பி
ஜூலை 27, 2025 23:54

அடச்ச


வாய்மையே வெல்லும்
ஜூலை 27, 2025 23:50

முதல்வரின் பிலேஷர் வண்டியை கவனித்தீர்களா மன்னா? பரம ஏழை வேஷம் ரொம்ப பொருத்தம் இந்த திராவிட மாயை தலீவர்களுக்கு .. சாக்கடை ஓரத்தில் குடிசை வாழ் ஏழை என்றைக்குமே ஏழைகளாக இருக்கவேணும் .. திருட்டுறையில் வித்தகர்கள் திடீர் பணக்காரன் லிஸ்டில் வரணும்.. என்ன கொடுமையோ. வருமான வரி அரசியல் திருடர்களுக்கு கிடையாதோ இப்படியே போனால் நாடு நாசமாவது உறுதி


Natarajan Ramanathan
ஜூலை 27, 2025 22:59

முதல்வருக்குத்தான் வயதாகிவிட்டது, முடியவில்லை. துணை முதல்வரை ஏன் பிரதமர் நிகழ்ச்சிக்கு அனுப்பவில்லை? மோடிமீது அவ்வளவு பயமா?


V K
ஜூலை 28, 2025 04:32

அப்படி இல்லை அப்போலோ ஹாஸ்பிடல் மீது பயம்


Bhakt
ஜூலை 27, 2025 22:51

நாடகம் விடும் நேரம் தான் உச்ச காட்சி நடக்கதும்மா. உருட்டுக்கள் பல உருட்டியே நடந்த ஆட்சி சீக்கிரம் முடியுதம்மா.


G Mahalingam
ஜூலை 27, 2025 22:32

கதை வசனம் திரைக்கதை நடிப்பு எல்லாம் சூப்பர். இது ஒரு ரெட் ஜெயண்ட் தயாரிப்பு.


krishna
ஜூலை 27, 2025 22:27

SINGA THALAIVAN MODI CHOLA MANNIL VEERA NADAI POTTU DELHI POYAACHU.APPARAM ENNA POONAI KUTTI DISCHARGE AAYACHU.SUPER COMEDY.


முக்கிய வீடியோ