உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய வரி வசூலில் மாநிலங்களுக்கு 50 சதவீதம் : ஸ்டாலின் வலியுறுத்தல்

மத்திய வரி வசூலில் மாநிலங்களுக்கு 50 சதவீதம் : ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை : மத்திய அரசின் வரி வருவாயில் சரி பாதியை மாநிலங்களுக்கு கொடுத்தால் மட்டுமே, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் மாநில அரசுகள் திருப்திகரமாக செயல்பட முடியும்,'' என்று, சென்னை வந்துள்ள 16வது நிதிக்குழுவிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். மத்திய, மாநில அரசுகள் இடையிலான நிதி பகிர்வு தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்க, 16வது நிதிக்குழுவை மத்திய அரசு நியமித்தது. அதன் தலைவர் அரவிந்த் பனகாரியா மற்றும் உறுப்பினர்கள் ஒவ்வொரு மாநிலமாக சென்று வருகின்றனர். நேற்று சென்னையில் அவர்கள் தமிழக குழுவை சந்தித்தனர்.

பாதிக்கிறது

அந்த ஆலோசனை கூட்டத்தில், நிதி பங்கீடு குறித்த தமிழக அரசின் கருத்துக்களை முதல்வர் ஸ்டாலின் எடுத்துக் கூறினார். தமிழகம் எதிர்கொள்ளும் முக்கியமான மூன்று பிரச்னைகளையும் அவர் பட்டியலிட்டார். அந்த சவால்களை எதிர்கொள்ள, மத்திய அரசின் பங்கு அதிகரித்தாக வேண்டியது அவசியம் என்பதையும் சுட்டிக் காட்டினார். ஸ்டாலின் உரையின் முக்கிய பகுதிகள் வருமாறு:சுகாதாரம், கல்வி, சமூக நலம், வேளாண்மை போன்ற துறைகளின் முன்னேற்றத்திற்கு, பல முக்கியமான திட்டங்களை வடிவமைத்து, மாநில அரசுகள் நிறைவேற்றி வருகின்றன. அவற்றுக்கு தேவையான வருவாயை பெருக்க, மாநில அரசுகளிடம் அதிகாரம் குறைவாக உள்ளது. கடந்த நிதிக்குழு பரிந்துரையால், மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கும் வரி வருவாய் பங்கு, 41 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்ததை கணக்கிட்டால், மத்திய அரசின் வருவாயில், 33.1 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்கு தரப்பட்டுள்ளது.மாநிலங்களுக்கான வரி பகிர்வில் இடம் பெற்றிருக்கும், மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணம் போன்றவற்றை, மத்திய அரசு பெருமளவு உயர்த்தியதே இதற்கு முக்கிய காரணம். மேலும், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில், மாநில அரசின் பங்கு அதிகரிப்பது, தமிழகம் போன்ற மாநிலங்களின் நிதி நிலைமையை பாதிக்கிறது. அனைத்து துறைகளிலும் சிறப்பான நிர்வாகம் காரணமாக முன்னேறிஉள்ள தமிழகத்தை தண்டிப்பதை போல, தற்போதைய வரி பகிர்வு முறை அமைந்துள்ளது.

தீர்வு தேவை

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக, பின்தங்கிய மாநிலங்களுக்கு கூடுதல் நிதி வழங்குவது அவசியம் தான். என்றாலும், சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு தேவையான நிதியை வழங்காமல் இருந்தால், அவற்றின் வளர்ச்சியை தக்க வைக்க முடியாது. அது, பின் தங்கிய மாநிலங்களுக்கு கிடைக்கும் பங்கையும் பாதிக்கும்.எனவே, கடந்த காலங்களில் தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உரிய தீர்வை, 16வது நிதிக்குழு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

மூன்று முக்கிய சவால்கள்

தமிழகம் எதிர்கொள்ளும் மூன்று முக்கிய பிரச்னைகளை, முதல்வர் விவரித்தார்:1) சில ஆண்டுகளாக, தமிழகம் இயற்கை பேரிடர்களால் பேரழிவை சந்தித்து வருகிறது. இழப்புகளை சரி செய்ய, கணிசமான நிதி செலவிட வேண்டியுள்ளது. அதனால், வளர்ச்சி திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்க முடியாமல் போகிறது. 2) முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது தமிழக மக்கள் தொகையின் சராசரி வயது 36.4 ஆண்டுகள். இது, உத்தர பிரதேசத்தின் சராசரி அளவை விட, 9.5 ஆண்டுகள் அதிகம். இந்த நிதிக்குழுவின் பரிந்துரை காலம் முடியும் போது, தமிழகத்தின் சராசரி வயது, 38.5 ஆண்டுகளாக இருக்கும். அதாவது, நாட்டிலேயே முதியோர் அதிகம் வாழும் மாநிலமாக தமிழகம் உருவெடுக்கும். முதியோர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு, அடுத்த, 10 ஆண்டுகளில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டியுள்ளது. இதை நிதிக்குழு கவனத்தில் வைத்து, சமூக முதலீடுகளுக்கு தேவையான நிதி ஆதாரத்தை வழங்க வேண்டும். 3) நாட்டிலேயே நகரமயம் அதிகம் நடக்கும் மாநிலம் தமிழகம். பெருகும் நகர மக்கள் தொகைக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க நிறைய நிதி தேவை. நிலவளம் மற்றும் நீர்வளம் குறைவாக உள்ள நிலையில் இது மிகப்பெரிய சவால். எனவே, சென்னை போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, அதிக நிதி மற்றும் மானியங்களை வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

G Mahalingam
நவ 20, 2024 08:22

மத்திய அரசு செய்த பெரிய தவறு ஒவ்வொரு திட்டத்திற்கும் தனி தனியாக நிதி கொடுப்பது. இப்படி தனி தனியாக கொடுப்பதால் மாநில அரசு திருடுவது குறையும் என்று நோக்கில்தான். காங்கிரஸ் போல மொத்தமாக கொடுத்தால் ஊழல அதிகம் ஆகியது. காங்கிரஸ் அதில் கமிஷன் அடித்தது. இப்போது மத்தியஅரசு 60 சதவீதம் நிதியை கொடுக்கிறது. தனி தனியாக கொடுப்பதால் தத்திக்கு கணக்கு தெரியவில்லை.


Kalaiselvan Periasamy
நவ 19, 2024 21:53

தரமற்ற முதல்வர் .தமிழ்நாட்டு பத்திரிக்கைகள் ஜால்ரா ... உருப்படுமா தமிழ் நாடு .?


visu
நவ 19, 2024 21:18

ஏற்கனவே GST வசூலில் 50 சதவீதம் மாநிலத்துக்குத்தானே போகிறது .மேலும் மத்திய அரசு பலநிதிகளை மாநிலத்துக்கு ஆக தமிழ்நாட்டுக்கு 50 சதவீதம் நிதி மட்டுமே குறைத்து கொடுத்தால் போதும் என்கிறார்கள்


hari
நவ 19, 2024 17:35

for getting SGST please submit proper documents......nothing will come OSI (free)


hari
நவ 19, 2024 17:33

நாங்கள் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லயே.ஜிஎஸ்டி ஆபீசர்


வைகுண்டேஸ்வரன்
நவ 19, 2024 22:11

Tou couldnt understand or you are pretending that you dont understand. SGST goes to union govt treasury only. After the Staye govts relish AG report with data and document, the same is released in pieces, to state govts. For 100 lakhs, GST would be roughly 25 lakhs, since its from 5% to 28%. Out of this, 12.5 lakgs us due for Stste govt, but is not directly coming to the treasury of State govt. After a long procedural companys only, States could get their shares. Therefore, at any point of time, thats always a huge money, due for States is with union govt.


வைகுண்டேஸ்வரன்
நவ 19, 2024 16:53

hari : the SGST collected by various service and goods enterprises too are getting credited to the union govt taxation revenue account only. This tax amount is supposed tho be released tho the respective States, yet, not bring regularly released, dating thay, AG certificate not submitted, submitted certificate is inadequate, improper, balh... blah.. And refund of input credit is another junk of money being withheld by union govt, demanding various documents, and if at all submitted, tax dept dedicated saying, this us not pepper, thats not refundable, etc etc.. சிவாஜி சினிமா மாதிரி ஆபீஸ் ஆபீஸா போகணும், form A, form 21, form 3c, declaration, suppliers invoice, this, that.. னு கேட்டு நாக்கு தள்ளிவிடுகிறது. Union govt speed press meet and stopped announcing the amount of GST Monthly Collection, because the amount is very huge, giving an impression to common man that, "Taxes are too high by bjp govt". 2024 Aug it is 1.74 lakh crore 2024 Sept it is 1.79 lakh crores 2024 Oct it is 1.87 lakh crore. Indian population is 144 crores. ஒவ்வொரு இந்தியனும் சராசரியாக மாசத்துக்கு ரூ. 1300 ரூபாய் GST கட்டறார்.


hari
நவ 19, 2024 17:30

I don't want copy paste data vaigundam.....where is SGST going?? give simple if you really know don't bluff


ஆரூர் ரங்
நவ 19, 2024 17:43

பிற்பட்ட வகுப்பினருக்கு சலுகைகளும் அதிக நிதியும் நியாயமென்றால் ( இயற்கை சுற்றுச்சூழல் காரணமாக) பிற்பட்ட மாநிலங்களுக்கு அதிக நிதிச் சலுகைகள் நியாயமே. வசதியான மாநிலங்கள் விட்டுக் கொடுத்து நடந்துகொள்ள வேண்டும்.


S.V ராஜன்(தேச பக்தன்...)
நவ 19, 2024 21:43

எல்லோரும் உன்னை போலவே 200 ரூபாய் கொத்தடிமையாக இருப்பார்கள் என்று நினைத்து ஓவரா புலுகாதே...


Suppan
நவ 19, 2024 16:42

ஜி எஸ் டி பயிற்சியாளரான வைகுண்டர் சாமி ப்ராண்ட் செய்யப்பட அரிசி, கோதுமை ஆகிய உணவுப்பொருட்களுக்குத்தான் ஐந்து சதவீத ஜி எஸ் டி உண்டு. மற்றவைகளுக்கு கிடையாது. உங்கள் புருடாவை நிறுத்திக்கொள்ளுங்கள். தமிழகத்தில் விளையும் பருப்பு வகைகள் போதுமானதல்ல. மகாராஷ்டிரா ம.பி போன்ற மாநிலங்களிலிருந்து தமிழகம் வாங்குகின்றது. சமீபத்தில் 4000 டன் களுக்கான டெண்டர் கோரியுள்ளது.


Suppan
நவ 19, 2024 16:29

அந்த அதானியுடன் தான் ஐந்து காங்கிரஸ் அரசுகள் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்களைப்போட்டுக்கொண்டுள்ளன. விடியல் அரசு 42700 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டுக்கொண்டுள்ளது . அதானி வேண்டாமென்றால் இந்த ஒப்பந்தங்கள் ஏனப்பா ? நல்லா ஏமாற்றும் கும்பல்


Narayanan
நவ 19, 2024 15:50

ஸ்டாலின் அவர்களே தமிழகம்தான் ஏனைய மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் , அணைத்து துறைகளிலும் முதல் மாநிலமாகவும் இருப்பதாக கூறுகிறீர்கள் .ஆகவே வளர்ச்சியடையாத மற்ற மாநிலங்களை வளர்ச்சியடைய செய்யவேண்டும் . கொடுக்கும் பணமே அதிகம் . ஏனெனில் நீங்கள் ஆட்சிக்கு வந்த பின்னால் தனி மனிதனின் செலவீனங்கள் கட்டுக்கு போய்க் கொண்டே இருக்கிறது .வரி என்ற பெயரில் மக்களை சுரண்டி கஜானாவை நிறப்புகிறீர்கள் .


வைகுண்டேஸ்வரன்
நவ 19, 2024 14:57

West Bengal is the state producing highest quantify of rice. Here someone writes falsely as Uttarpradesh. PLEAS DONT SPREADS LIES. See here, the info from FCI. For ID Svs to note West Bengal is the top rice-producing state in India: Production: West Bengal produces about 15 million metric tons of rice annually.


hari
நவ 19, 2024 15:22

so Mr. vaigundam....please tell us where SGST tax goes to? you are GST officer..pl tell truth here


Duruvesan
நவ 19, 2024 19:01

மூர்கஸ் ஆங்கிலச் சூப்பர்


சமீபத்திய செய்தி