உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லையில் பிரமாண்ட சூரிய மின்கலன் உற்பத்தி ஆலை; திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

நெல்லையில் பிரமாண்ட சூரிய மின்கலன் உற்பத்தி ஆலை; திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், 4,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள டாடா குழுமத்தின் சூரிய மின்கலன் உற்பத்தி ஆலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.முதல்வர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, அரசு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அப்போது, அங்கு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இந்நிலையில், இன்று (பிப்.,06) திருநெல்வேலிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையின் இருபுறமும் மக்கள் நின்று முதல்வரை வரவேற்றனர். அப்போது சிலர் முதல்வருக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், 4,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 350 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள டாடா குழுமத்தின் சூரிய மின்கலன் உற்பத்தி ஆலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், ரூ.3,125 கோடி மதிப்பில் விக்ரம் சோலார் நிறுவன ஆலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த புதிய ஆலையால், 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதில் 80 சதவீத பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. மாற்றுதிறனாளிகள் 100 பேருக்கு வேலை கிடைக்கும்.டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகர், ' இது இந்தியாவிலேயே ஒரே இடத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய சோலார் ஆலை, என்றார். முன்னதாக, மறைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடாவின் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதற்கிடையே முதல்வர் ஸ்டாலினின் கான்வாயில் விழுந்து ஒருவர் காயம் அடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
பிப் 06, 2025 17:15

மூணு மாசமாவது வேலை செய்யுமாடா?


Perumal Pillai
பிப் 06, 2025 16:05

Not interested.


Laddoo
பிப் 06, 2025 14:27

மாபியானா இதுதான் ஒரிஜினல் மாபியா. இவரு உயரமா தெரியணும் என்பதற்காக உயரம் குறைவாக இருப்பவர்களை பக்கத்தில் நிற்க வைத்திருக்கிறார்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 06, 2025 16:23

முதல்வர் ஸ்டாலினைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை. எனவே, நீங்கள் எழுதினா மாதிரி எல்லாம் செய்ய அவசியமே இல்லை. உங்களுக்கு வேற ஏதோ பிரச்னை. எதுக்கும் ஒரு டாக்டரைப் பாருங்க.


புதிய வீடியோ