உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முதலீடுகளை முதல்வர் ஸ்டாலின் கோட்டை விடுகிறார் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை: தமிழகத்தில் ரூ.1720 கோடி முதலீடு செய்யவிருந்த தென்கொரிய நிறுவனம் 'ஹ்வாஸுங்', தற்போது தமிழகத்தை விட்டு ஆந்திராவில் முதலீடு செய்யவிருப்பதாய் அறிவித்த சேதி அறிவீர்களா? தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்று வீண் பேச்சு பேசும் முதல்வர், உங்கள் திமுக அரசின் விளைவாகத் தான் தமிழக இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய 20,000 நேரடி வேலைவாய்ப்புகள் இன்று பறிபோயுள்ளன.'புலி வருது, புலி வருது' என்பது போல ஒவ்வொரு முறையும் தாங்கள் முதலீடு வருகிறது என்று விளம்பரம் வெளியிடுவதும், பின் அந்த முதலீடு அண்டை மாநிலத்திற்குச் சென்றுவிட்டதாய் செய்தி வருவதும் தொடர் கதையாகி வருகிறது. முதலீட்டை ஈர்க்கிறேன் என வெளிநாடுகளுக்குப் பயணம் சென்றுவிட்டு வெறுங்கையுடன் திரும்புவது, தானாகக் கிடைத்த முதலீட்டையும் எந்தவொரு முயற்சியும் எடுக்காது கோட்டை விடுவது, தமிழகத்தின் எதிர்காலத்தைச் சிதைப்பது என மும்முரமாக இருக்கும் நீங்கள், மீண்டுமொரு முறை ஆட்சிக் கோட்டையைப் பிடித்து தமிழகத்தைத் தலை நிமிரச் செய்வேன் என்று முதல்வர் கூறுவதை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Saai Sundharamurthy AVK
நவ 16, 2025 22:27

இப்போது நடப்பது தமிழ் திமுக ஆட்சியல்ல.


Saai Sundharamurthy AVK
நவ 16, 2025 22:23

இப்போதெல்லாம் தமிழர்களே அண்டை மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று வேலை தேடிக் கொள்ள வேண்டும் என்கிற நிலைக்கு வந்து விட்டார்கள். கட்டாயம் இந்தியை சொந்தமாக செலவு செய்து கற்றுக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். இந்த திமுக அரசை நம்பி எந்த பயனும் இல்லை.


Thravisham
நவ 16, 2025 18:20

ஸ்டாலின் முதலீடுகளை கோட்டை விடுவார்.


M Ramachandran
நவ 16, 2025 17:55

புதுசா ஏதாவது சொல்லுங்க. எப்போதும் உள்ளதை சொல்லி கீறல் விழுந்த ரெக்கார்டுக போய்விடும்


என்னத்த சொல்ல
நவ 16, 2025 15:53

ஒரு தேசிய கட்சி தலைவரா இருந்து கொண்டு, ஒரு தொழிற்சாலை ஆந்திரா போனதை விமரிசிக்கிறீர்களே, இதெல்லாம் நாயடுகாருக்கு தெரிந்தால், முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கும் அவருடைய செங்கலை உருவிட மாட்டாரா. தமிழ்நாட்டை விமர்ச்சிக்கிறேன் என்று, மத்திய ஆட்சிக்கு ஆப்பு வெச்சுடாதீங்க...


Vasan
நவ 16, 2025 15:10

தமிழகமும் வளர வேண்டும், அண்டை மாகாணங்களும் வளர வேண்டும்.


Sur
நவ 16, 2025 14:54

தென் கொரிய முதலீடு ஆந்திரா சென்று விட்டது! தமிழ்நாடு முதலீடு கர்நாடகா சென்று விட்டது!


Kasimani Baskaran
நவ 16, 2025 13:41

யார் சொன்னது? அவர்தான் சிறப்பாக முதலீடு செய்கிறார். துபாய் போகிறார், லண்டன் போகிறார், அமேரிக்கா போகிறார், சிங்கப்பூர் போகிறார் - அத்தனை நாடுகளிலும் முதலீடு செய்ய நிறுவனங்கள் வைத்திருக்கிறார்.


sundarsvpr
நவ 16, 2025 13:34

தமிழ்நாட்டில் வேலை கிடைக்காததால் படித்தவர் படிக்காதவர்கள் வெளிநாட்டிற்கு செல்கின்றனர். இவர்களின் வயதான தாய் தந்தையர் மட்டும் இங்கு உள்ளனர். இவர்கள் வாழ்வாதாரத்திற்கு மட்டும் பணம் அனுப்புகின்றனர். அப்படி சென்றவர்கள் தாய் நாட்டிற்கு திரும்புவதில்லை. குழந்தைகள் மேல்படிப்பு அங்கே நடைபெறுகிறது. இந்த நிலை தொடருமானால் நினைக்கவே பயமாக உள்ளது. இங்கு உள்ளவர்கள் மனோ நிலை பாதிப்பு அடையும்.


திகழ்ஓவியன்
நவ 16, 2025 14:01

அப்பா என்ன சொல்ல வருகிறீர் படிக்கச் கூடாது இல்லை படிச்சு வேலைக்கு வெளிநாடு செல்ல கூடாது. வெளிநாட்டு சுர்ரெனசி வரவில்லை எனில் எப்படி இந்தியா வல்லரசு ஆகும்


Gokul Krishnan
நவ 16, 2025 14:41

பீகாரில் இருந்து தமிழகம் வந்து வேலை செய்ய பிழைப்புக்கு வருவோரை என்ன சொல்வீர்கள் ஒரு மாநில தேர்தலுக்கு ஆக இத்தனை சிறப்பு ரயில்களை இயக்கியது ஏன்


திகழ்ஓவியன்
நவ 16, 2025 13:00

இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவது மக்களின் ஆதரவால்.. பீகார்,ஹரியானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜக வெற்றி பெறுவது தேர்தல் ஆணையத்தின் தில்லுமுல்லுகளால்..


Kumar Kumzi
நவ 16, 2025 14:17

நல்லா முட்டி போட்டு கதறு கொத்தடிமை அதுசரி துண்டுசீட்டு கோமாளி எப்படி 40/40 வெற்றி பெற்றார்


kjpkh
நவ 16, 2025 14:29

அப்படி எத்தனை பேர் தேர்தல் தில்லுமுல்லுகளால் வாக்குரிமை இழந்திருக்கிறோம் என்று புகார் அளித்திருக்கின்றனர். தெளிவாக புள்ளி விவரங்களுடன் கொஞ்சம் கொடுக்கிறீர்களா. நொண்டிக்குதிரைக்கு சறுக்கியதுதான் சாக்கு. ஆக வரும் சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் திமுகவுக்கு ஆனது அல்ல..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை