உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீண் விளம்பர நாடகம் நடத்தும் முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்

வீண் விளம்பர நாடகம் நடத்தும் முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தினமும் வீண் விளம்பர நாடகங்களை முதல்வர் ஸ்டாலின் நடத்தி கொண்டு இருக்கிறார்'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு, பேராசிரியர் வருகைப் பதிவு போதிய அளவு இல்லாதது, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருத்தல் உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி, தேசிய மருத்துவ ஆணையம் (NMC) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அதிலும், 24 மருத்துவக் கல்லூரிகள் விளக்கமளிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்து விட்டதும், மீதமுள்ள 10 கல்லூரிகளுக்கு, வரும் வாரத்தில், காலக்கெடு நிறைவடைய உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. உரிய விளக்கம் அளிக்காததாலும், குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமல் இருப்பதாலும், இந்த அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாக வாய்ப்பு இருக்கிறது. இதனால், மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த முடியாத நிலை ஏற்படும். ஏற்கனவே, கடந்த 2023ம் ஆண்டு மே மாதமும், இதே காரணங்களுக்காக, புகழ்பெற்ற ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உட்பட மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டது. ஆனால், திமுக அரசு தனது தவறுகளிலிருந்து பாடம் கற்கவில்லை. தற்போது 34 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை என்றால், தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பு, அடியோடு சிதைந்து போய் விடும். ஆனால், தினமும் வீண் விளம்பர நாடகங்கள் நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சருக்கு இது குறித்து எந்தக் கவலையும் இல்லை. தமிழக சுகாதாரத்துறை அமைச்சரோ, முதல்வர் குடும்பத்தினருக்கு யார் சிறந்த பணியாளாக இருப்பது என்ற மற்ற அமைச்சர்களுடனான போட்டியில், முதல் வரிசையில் ஓடிக் கொண்டிருக்கிறார். உங்கள் விளம்பர ஆசைக்கு, தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்விக் கனவைப் பறிகொடுக்க முடியாது என்பதை முதல்வர் உணர வேண்டும். உடனடியாக, தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரம் தொடர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

pmsamy
மே 14, 2025 07:42

அண்ணாமலை திமுகவைப் பற்றி பேசுவதால் திமுகவுக்கு அதிக விளம்பரம் கிடைக்கிறது அண்ணாமலை கன்டின்யூ


துர்வேஷ் சகாதேவன்
மே 13, 2025 20:44

தம்பி உன் வெட்டி பந்த வீண் பேச்சு எல்லாம் வேலைக்கு ஆகாது இனி மணல் குவாரி மாமூல் வாராது ஓரமா ஒதுங்கி நில்லு , நீ பேச பேச DMK க்கு சக்தி கூடுது


Babu
மே 13, 2025 19:20

உம்மை மாதிரி ஜால்ராக்களால் தான் திருட்டு முன்னேற்ற கழகம் பொழைப்பு நடக்குது


Raja
மே 13, 2025 18:06

"சும்மா நடிங்க பாஸ்" என்று சன் டிவியில் ஒரு நிகழ்ச்சி வரும். அதுபோல திமுகவின் ஸ்லீப்பர் செல் அண்ணாமலையின் நடிப்பு சூப்பர். எஜமான் திமுகவின் கட்டளைப்படி அதிமுக-பி,ஜே,பி. கூட்டணியை சிதறடிக்கும் வேலையை மிக சிறப்பாக செய்துகொண்டிருக்கும் அண்ணாமலையின் வேஷம் டெல்லிக்கு தெரியாமல் இல்லை.


P. SRINIVASAN
மே 13, 2025 17:51

வெறும் பொய்.


Bala
மே 13, 2025 18:47

சரியாக சொன்னீர்கள் . திராவிட மாடல் என்றாலே பச்சை பொய்தான்


என்றும் இந்தியன்
மே 13, 2025 16:52

36 அரசு மருத்துவக் கல்லூரிகளில், தேசிய மருத்துவ ஆணையம் NMC விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அதிலும், 24 மருத்துவக் கல்லூரிகள் விளக்கமளிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்து விட்டதும், மீதமுள்ள 10 கல்லூரிகளுக்கு, வரும் வாரத்தில், காலக்கெடு நிறைவடைய உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. உரிய விளக்கம் அளிக்காததாலும், குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமல் இருப்பதாலும், இந்த அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாக வாய்ப்பு இருக்கிறது. அப்படியென்றால் அரசு மருத்துவக்கல்லூரிகள் மூடப்பட்டால் லாபம் யாருக்கு தனியார் மருத்துவக்கல்லுரிகளுக்கு ஒரு சீட் ரூ 25 லட்சம் ரூ 50 லட்சம் என்று உயர வாய்ப்பு. ஆகவே தான் நடத்தும் தனியார் கல்லூரிகள் நல்ல லாபம் அடைய முதல்வர் ஸ்டாலின் உழைக்கின்றார் என்று அறிக


என்றும் இந்தியன்
மே 13, 2025 16:44

இந்த நாடகம் இன்னும் எத்தனை நாளம்மா??? இதனால் நமக்கு உணர்த்துவது ஒன்று???உங்கள் குழந்தை நன்கு உயர என்ன சொல்வீர்கள்???நீ அவனை போல் இரு இவனைப்போல இரு அப்போது தான் நீ மிக மிக உயரத்திற்குப்போகமுடியும்???இப்போது அதே உதாரணம் ஸ்டாலினுக்கும் சொல்லலாம்???ஒண்ணுமே தெரியாமல் இருந்தாலும் நீ ஸ்டாலின் போலவே மிக மிக உயரத்திற்கு செல்லமுடியும் என்று சொல்லலாம்


morlot
மே 13, 2025 16:40

Modi please appoint him as a minister of defense or interior affairs at Delhi.


Barakat Ali
மே 13, 2025 16:04

நயினாரை ஓரங்கட்டிட்டீங்களா ????


Tirunelveliகாரன்
மே 13, 2025 16:01

அண்ணாமலை பேசுவதையும் சீரியஸ்சா மக்கள் எடுக்கிறார்களா என்ன?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை