உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை மேம்பாலத்திற்கு சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டினார் முதல்வர் ஸ்டாலின்

கோவை மேம்பாலத்திற்கு சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டினார் முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு 'சி. சுப்பிரமணியம் மேம்பாலம்' என்று முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டினார்.அவரது அறிக்கை: கொள்கைகளும் பாதைகளும் வெவ்வேறானாலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்று நாட்டுக்காகப் பணியாற்றிய தலைவர்களைப் போற்றுவதே மாண்பு. மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகித்து, நாட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்கிய பசுமைப் புரட்சிக்கு அடித்தளமாக இருந்தவர் பாரத ரத்னா சி.சுப்பிரமணியம்.அவரது புகழொளியைப் பரப்பிட வேண்டும் என டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் வைத்த கோரிக்கையை ஏற்று, கோவை மாநகரின் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு 'சி. சுப்பிரமணியம் மேம்பாலம்' என்று பெயர்சூட்டும் மகிழ்ச்சிகரமான அறிவிப்பை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்துகொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சி.சுப்பிரமணியம் யார்?

* 1910 பிப்ரவரி 15ம் தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள செங்குட்டை ப்பாளையம் என்ற கிராமத்தில் சி.சுப்பிரமணியம் பிறந்தார்.* நாட்டின் பசுமைப் புரட்சிக்கு முக்கிய பங்காற்றிய சி.சுப்பிரமணியம், மத்திய நிதி அமைச்சர் ஆகவும், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் வேளாண் துறை அமைச்சராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர். மஹாராஷ்டிரா மாநில கவர்னராகவும் பணியாற்றியவர். தமிழக சட்டமன்றத்திலும் பார்லியிலும் நீண்ட காலம் பணியாற்றியவர்.* இவர் 1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது சிறையில் அடைக்கப்பட்டார்.* பசுமைப் புரட்சியை ஏற்படுத்தியதில் சி.சுப்பிரமணியம் ஆற்றிய பங்கிற்காக 1998ம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

பா மாதவன்
டிச 28, 2025 14:39

பெரிய ஆச்சரியமாக உள்ளது. பெயர் வைப்பதற்கு, கலைஞர் கருணாநிதி என்ற பெயர் தவிர தமிழகத்தில் பெயர் சொல்லக் கூடிய தலைவர் ஒருவருமே இல்லை என்ற சமயத்தில் எப்படியோ சி சுப்பிரமணியன் என்ற மனிதர் கிடைத்து விட்டார். மிகுந்த சந்தோஷம்.


Guru Rajan
டிச 28, 2025 13:02

கருணாநிதியும்இந்திராகாந்தியும் கூட்டணி வைத்த ஆரம்ப காலத்தில் இல்லாத வரட்சியை சொல்லி கோடி நிதி பெற்றார. அனால் தமிழ்நாட்டில் எந்தவரட்சியும் இல்லாததால் வறட்சி நிதி தணிக்கைக்கு உட்பது என்று சி.சுப்பிரமணியம் கூறினார் அனால் கருணாநிதி அவர்கள் சி. சுப்ரமணியத்தின் தந்தை பொள்ளாச்சி சந்தையில் மாட்டுமவண்டிகளை கொள்ளை அடித்தவர் என்று விமர்சனம் செய்தார்


Amar Akbar Antony
டிச 28, 2025 12:14

கொள்கைகளும் பாதைகளும் வெவ்வேறானாலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்று நாட்டுக்காகப் பணியாற்றிய தலைவர்களைப் போற்றுவதே மாண்பு. - என்னமா உருட்டறாரு அந்த மாண்பு எல்லாம் பா ஜ க வின் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் காலத்தில் நடந்தது. அப்போது அம்மாவின் அ தி மு க வாஜ்பாய் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தது. ஆகா உருட்டு தி மு க ஏதோ அவர்கள் தான் மாண்பு கடைபிடிக்கிறார்களென்று தெரியாததயெல்லாம் உளறுவது. ஓன்றுமட்டும் உண்மை. ஒரு பாலத்திற்கு ஜி டி நாயுடு என்று நாயுடுக்களின் வோட்டுக்காக பெயர் வைத்தாயிற்று. இப்போ கவுண்டர்கள் மணம் வெதும்பக்கூடாது என்பதற்காக தேடிப்பிடித்து உருட்டறீங்க. நாங்க அதாவது கவுண்டருங்கோ உங்க வியாக்கியானம் உருட்டு எல்லாம் தெரியுமுங்கோ. வைக்கிறோம் பார் உங்களுக்கு மீண்டும் ஆப்பு.


Rathna
டிச 28, 2025 12:08

சி சுப்ரமண்யம் நல்ல திறமையாளர். நேர்மையானவர். தேர்தல் அரசியலில், அவரது சாதி அவருக்கு ஒரு பாலத்தின் பெயரை வைக்க உதவி இருக்கிறது.


M S RAGHUNATHAN
டிச 28, 2025 11:37

பாலத்தின்.பெயரை C S கவுண்டர் பாலம் என்று வைத்து இருக்க வேண்டும் அல்லது C சுப்ரமண்ய கவுண்டர் பாலம்.என்று வைத்து இருக்க வேண்டும்.


SRIRAM
டிச 28, 2025 10:52

மக்கள் சிந்திக்க தெரியாத முட்டாள்கள் என்று நினைக்கிறார் போல... அந்த ஊர்ல முக பேரு எடுபடாது என்று தெரியும்....


Sundar R
டிச 28, 2025 10:50

எதிர்வரும் 2026 தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைத்தால் அது நியாயமானதாக இருக்கும். திமுகவுக்கு எத்தனை தொகுதி, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு போன்றவற்றை காங்கிரஸ் தலைமை முடிவு செய்வது தான் எதிர்கால தமிழகத்திற்கு நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும். ஒரு கட்சி தேர்தலில் தனியாக போட்டியிட்டால் தான் அக்கட்சியின் யோக்கியதை மக்களுக்குத் தெரியும். திமுக 1967 முதல் இன்றுவரை ஒரு தேர்தலில் கூட தனியாக போட்டியிட்டதில்லை. அதனால் திமுகவின் யோக்கியதை யாருக்கும் தெரியாது. மேற்கூறிய காரணத்தால், ஒரு கூட்டணியைத் தலைமை தாங்கும் அளவுக்கு தார்மீக ரீதியாக திமுகவுக்கு ஒரு யோக்கியதையும் இல்லை. 2026 தேர்தலுக்கு முன்பாகவே திமுகவை மின்சார எரியூட்டல் மூலம் நன்றாக தகனம் செய்தால் காங்கிரஸ் கட்சியை தமிழக மக்கள் அனைவரும் பாராட்டுவார்கள். அதுதான் சர்வ உத்தமமான செயல். அதை காங்கிரஸார் சர்வ சாதாரணமாக செய்ய வேண்டும்.


அரவழகன்
டிச 28, 2025 10:39

கலைஞர் கருணாநிதி பெயர் பெரியார் பெயர் எல்லாம் மறந்து போச்சா....


sri
டிச 28, 2025 10:20

Have you gotten bored of using your father's name?


வெங்கடேஷ்
டிச 28, 2025 10:08

பெயர் வைத்தது சரி, அதற்காக நீங்கள் பீத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை


V Venkatachalam, Chennai-87
டிச 28, 2025 15:15

பீத்திக்கொள்ளத்தானே பேர் வச்சது? அதுக்கும் அலம்பல் பண்ணாதீங்க.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ