உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாயிடம் ஆசி பெற்றார் முதல்வர் ஸ்டாலின்; நெகிழ்ச்சி பதிவு

தாயிடம் ஆசி பெற்றார் முதல்வர் ஸ்டாலின்; நெகிழ்ச்சி பதிவு

சென்னை: 50வது திருமண நாளை முன்னிட்டு தனது தாய் தயாளு அம்மாளிடம் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அரைநூற்றாண்டாக என் வாழ்வின் துணையாக, என்னில் பாதியாக துர்கா நுழைந்து, தன்னுடைய அன்பால் மணவாழ்வை மனநிறைவான வாழ்க்கையாக அளித்துள்ளார். அவர் மீதான அளவற்ற அன்பே என் நன்றி. எதிர்பார்ப்புகளற்ற அன்பும் விட்டுக் கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என இளைய தலைமுறையினருக்குச் சொல்லிக் கொள்கிறோம். வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழ்ந்திட விழைகிறோம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஆக 20, 2025 21:47

தாயிடம் ஆசி பெறுவதுபோல, தேர்ந்தெடுத்த மக்களிடமும் ஆசி வாங்க வேண்டும்.


இராம தாசன்
ஆக 20, 2025 19:32

பெற்ற தாய்தானே -இதில் என்ன நெகிழிச்சி?பெற்றவர்களை தினமும் / எப்போதும் வணங்கி ஆசி பெறுவது என்பது நமது பண்பாடு...என்றோ ஒரு நாள் சென்று ஆசி வாங்குவது வெளி நாட்டு கலாச்சாரம் - அதற்கு அடிமை ஆகி விட்டு அதை கொண்டாடாடுவது பெருமையாக கருதுகிறார்கள்


surya krishna
ஆக 20, 2025 16:12

அப்போ பாத்திமா பாபு அவ்வளவுதானா


sundarsvpr
ஆக 20, 2025 15:20

பாரத நாட்டில் கோடிக்கணக்கான நபர்கள் தன்னுடை பெற்றோரிடம் ஆசி பெறுகிறார்கள் இதுபோல் ஸ்டாலின் பெற்றுள்ளார், முதல்வர் என்று கூறி ஆசி பெற்றார் என்றால் செய்தி.


ஆரூர் ரங்
ஆக 20, 2025 14:33

வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கப் பிரிவு வந்தால் மட்டுமே ஞாபக மறதி நோய் ஏற்படும். மகன் மட்டும் நினைவிலிருக்கிறார். அந்த வித்தியாசமான ஆள் யார்?


முக்கிய வீடியோ