உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமரை இன்று சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

பிரதமரை இன்று சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நடைபெறவுள்ள, 'நிடி ஆயோக்' கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டில்லி வந்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.மாநிலங்களுக்குரிய நிதிப் பங்கீட்டை நிர்ணயம் செய்யும் நிடி ஆயோக் அமைப்பின் ஆலோசனை கூட்டம் டில்லியில் இன்று நடக்கவுள்ளது. மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்துக்கு, பிரதமர் மோடி தலைமையேற்கவுள்ளார்.இதில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று மதியம் டில்லிக்கு வந்தார். தி.மு.க., மற்றும் காங்கிரஸ் எம்.பி., க்கள் வரவேற்றனர்.புதிதாக கட்டப்பட்ட தமிழ்நாடு இல்லம் வந்தடைந்த முதல்வர், சிறிய ஓய்வுக்குப் பின், அக்பர் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவின் இல்லத்துக்கு சென்றார்.சோனியாவும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும், முதல்வரை வரவேற்றனர். இருதரப்பும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டபின், சோனியாவும், முதல்வரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். இருவரும் தமிழக மற்றும் தேசிய அரசியல் குறித்து பேசியதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முதல்வர் சென்றார். அங்கு, ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் டாக்டர் பரமேஷ்வரனிடம் நலம் விசாரித்தார். இன்று காலையில் இருந்து மாலை வரை, நடக்கும் நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், மதிய உணவு இடைவேளையின்போது பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். ஒருவேளை நேரம் கிடைத்தால், தமிழகத்துக்கு தேவையான நிதியை உடனே ஒதுக்கித் தருமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துப் பேசுவார் என, அவரோடு டில்லி வந்திருக்கும் தமிழக அதிகாரிகள் கூறினர்.டில்லி நிகழ்ச்சிகள் முடிந்து, இன்று இரவே தமிழகம் திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின். - நமது டில்லி நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

theruvasagan
மே 24, 2025 10:47

இதுக்கெல்லாம் சரியான ஆள் சின்னவர்தான். சனாதனத்தை டெங்கு மலேரியா கொசுவை ஒழிப்பது போல் ஒழிக்கணும். அப்பன் வீட்டு சொத்தா இப்படியெல்லாம் அதிரடியாக பேசி எதிரிகளுக்கு டெர்ராாக விளங்குவார். அவர் வரப்போகிறார் என்று தெரிந்தாலே போதும். ஒன்றிய அரசு வெலவெலத்துப் போய்விடும். கேட்டதை மறுபேச்சு பேசாமல் கொடுத்துவிடும். ஒத்தை செங்கல்லையே ஆயுதமாக கொண்டு எதிரிகளை நடுநடுங்கச் செய்த மாவீரராயிற்றே.


Kasimani Baskaran
மே 24, 2025 09:26

ஸ்தாலீன் மிரட்டல், பயந்து நடுங்கி நிதியை விடுவிக்க உறுதியளித்த மோடி என்று தலைப்பு வரும். வேறு ஒன்றும் நடக்காது.


SUBRAMANIAN P
மே 24, 2025 09:02

இவருக்கு தமிழே தகிடு தத்தம். இங்கிலிஷ் தெரியாது. சுட்டுப்போட்டாலும் வராது. ஹிந்தி தெரியாது போடான்னு சொல்லியாச்சு. அரைகுறை தமிழில் பேசினாலும் பிரதமருக்கு புரியாது. பக்கத்துல வேற ஒக்காந்துருக்காரு. வடிவேலு போல சிரிச்சே மழுப்பிருவாரோ? என்ன முதலமைச்சரோ? தமிழ்நாட்டுமக்களுக்கு தங்களுக்குண்டான தலைவனையோ, ஆட்சியாளனையோ தேர்ந்தெடுக்குறதுல போதுமான அறிவு இல்லையென்றே தோன்றுகிறது.


Minimole P C
மே 24, 2025 09:51

Why you doubt? Certainly they do not have.


அப்புசாமி
மே 24, 2025 11:10

ஏன்? ஜீ தான் தமிழ்ல படிச்சு பி.ஹெச்.டி வாங்கியவராச்சே. தமிழன் சைகை மொழியில் பேசுனாலும்.புரிச்சிக்கிட்டு ஆவன செய்வாரு. தமிழர்களுக்கு மட்டுமாவது தலைக்கு பாஞ்சிலட்சம் வாங்கிக் குடுப்பாரு.


மூர்க்கன்
மே 24, 2025 11:55

தேசத்திற்கு தலைவனின் ஆங்கில புலமையும் அகிலம் அறிந்ததுதானே?? டெலி பிராம்டர் மட்டும் வேலை செய்யவில்லையெனில் தலைவன் வெலவெலத்து போயிடுவான்.


xyzabc
மே 24, 2025 06:33

பாம்பன் பாலம் திறப்பு விழாவுக்கு போக முடியல. இப்போ எப்படி?


pv, முத்தூர்
மே 24, 2025 06:06

ஒன்றிய அரசு மத்திய அரசாகும் இன்று.


K.Rajasekaran
மே 24, 2025 05:57

தி மு க பஹ்லஹம் பயங்கரவாதிகளை விட மோசமான நபர்கள், நாட்டிலிருந்து களை எடுக்க பட வேண்டியவர்கள் அதுவே நாட்டிற்கு நன்மை, இவருக்கு கொடுக்கும் நிதி அனைத்தும் இவர்கள் குடும்பம் கொள்ளை அடிக்க உதவும்


Mani . V
மே 24, 2025 04:55

ஸ்டாலின் கூட்டணிக் கட்சி தலைவர் மோடியை சந்திக்கிறார். மக்கள்தான் அவர்கள் இருவரும் எதிரிகள் என்று நம்பி ஏமாந்து போகிறார்கள்.


raja
மே 24, 2025 03:48

படுத்ததே விட்டானய்யா இந்த வெள்ளை கொடி வேந்தன் இருபத்தி மூணாம் புலிகேசி என்ற வடிவேலுவின் காமெடி நியாபகம் வருகிறது....


D.Ambujavalli
மே 24, 2025 03:11

அப்படி ஒன்றும் மாநிலத்து நன்மைக்காக உருகி வழியவில்லை ED, ரைடுகள், வழக்குகள், மகனைக்காப்பாற்றும் நல்ல தந்தையாக பிரதமர், அமித் ஷா என்று தேடிப்போய் ‘நிவாரணம்’ வேண்டித்தான் போயிருக்கிறார் இதுவரை முந்தைய மாநாடுகளில் எந்த கூட்டத்திலாவது கலந்துகொண்டிருக்கிறாரா?


krishna
மே 24, 2025 02:55

AAHA KAIPULLA ARUVAALODA KELAMBITTARU ETHANA THALA URULA POGUDHO.ONDRIYA ARASE JAAKIRADHAI.ENGAL MOORGA MIRUGA KUMBAL PAK NAATAI INI ATTACK SEIDHAAL DRAVIDA MODEL KUMBAL SUMMA IRUKKADHU.JAAK8RADHAI ENA MIRATTA POGIRAAR.THUNDU SEATTU PERA KETTALE ADHIRUDHULLA. IPPADIKJU EERA VENGAAYAM VENUGOPAL ORU KILO OVIYA VIJAY.


சமீபத்திய செய்தி