உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமெரிக்க வரி சிக்கலுக்கு தீர்வு காண பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

அமெரிக்க வரி சிக்கலுக்கு தீர்வு காண பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதித் துறையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை விரைவில் களைய நடவடிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: அமெரிக்க வரிவிதிப்பால் திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ஊர்களின் ஏற்றுமதித் துறைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூரில் உள்ள காலணி உற்பத்தி நிறுவனங்களிலும் இதேபோன்ற மோசமான சூழ்நிலை காணப்படுகிறது.இதன் காரணமாக, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள், குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது. இருதரப்பு ஒப்பந்தம் மூலம் இந்த வரிச் சிக்கலை விரைவில் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதித் துறையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை விரைவில் களைய நடவடிக்க வேண்டும். இவ்வாறு முதல்வரி ஸ்டாலின் கூறியுள்ளார்.ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோலியம் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா இந்தியா பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தி உள்ளது. இதனால் ஜவுளி துறை கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

sahil
டிச 18, 2025 19:05

இவரே நேராக அமெரிக்கா சென்று அதிபரிடம் ட்ரம்ப் கேட்கலாமே


Sridharan Venkatraman
டிச 18, 2025 19:00

உங்களை ஐ நா பாராட்டுகிறதே - பசுமை தட்ப வெப்ப நடவடிக்கைகளுக்கு. நேரடியாக அமெரிக்காவுக்கு வரி குறைப்பு கேட்டு கடிதம் போடுங்கள்.


Ramesh Sargam
டிச 18, 2025 14:25

எல்லா நாட்களிலும் மத்திய அரசை தூற்றுவது. காரியம் ஆகவேண்டுமென்றால் காலில் விழுவது. இதெல்லஸ்ம் ஒரு பொழப்பா முதல்வரே. உங்களுக்கு சூடுசொரனை எதுவும் இல்லையா?


N S
டிச 18, 2025 13:49

நீட் தேர்வு ரகசியம் தெரிந்த துணை முதல்வரிடம் வழி கேட்டிருக்கலாம். உலகமே வியக்கும் தமிழக பாணியில் இதற்கு வழி தெரியவில்லை. "அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதித் துறையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை விரைவில் களைய நடவடிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்." தன்னிகரில்லா தரணி திராவிட மாடல் ஆட்சிமுறையில் நான் கடிதம் எழுதிவிட்டேன்.


Vasan
டிச 18, 2025 12:18

Why not write a letter to Trump directly?


Kumar Kumzi
டிச 18, 2025 10:52

ரஸ்யாவின் அதிபர் சொல்லிட்டாருங்கோ ...ஹீஹீஹீ


ram
டிச 18, 2025 10:45

முதலில் இந்த திருட்டு திமுக அரசு பெட்ரோல் டீசல் வாட் 11% to 13% வசூலிக்கிறார்கள், இதை குறைக்கலாமே இந்த தலை சிறந்த முதல்வர், அப்புறம் நாம் அமெரிக்கா வரி சிக்கலுக்கு தீர்வு காணலாம்.


ram
டிச 18, 2025 10:41

ஏன் இங்கிருந்து பஜ்ஜி சொஜ்ஜி தின்பதற்கு அனுப்பி வைத்த நபர்களை அமெரிக்கா அனுப்பினால் இதன்மூலம் ஒரு 100 கோடி கணக்கு எழுதலாமே.


Baskaran
டிச 18, 2025 10:34

அனையப்போற விளக்கு என்ன ஒரு அக்கறை நாட்டின் மக்கள் மேல... இந்த நல்லுறவை ஒவ்வெரு கட்சியும் கடைபிடித்தால் மத்திய அரசுடன் ஒரு ஒருங்கிணைந்த அடுத்த வளர்ச்சிக்கான பாரதத்தை காண முடியும்..


Chandru
டிச 18, 2025 10:23

வேற லெவெல்க்கு போயி விட்டாரே


முக்கிய வீடியோ