உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு அரசு ஊழியரை கடனாளியாக்கும்: ஊழியர் சங்கங்கள் குற்றச்சாட்டு

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு அரசு ஊழியரை கடனாளியாக்கும்: ஊழியர் சங்கங்கள் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சட்டசபை மானிய கோரிக்கையில், விதி எண் 110ன் கீழ், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை கடனாளியாக்கும்,'' என, அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம்சாட்டி உள்ளன. தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலர் சங்கர்: முதல்வர் அறிவித்த அனைத்து சலுகைகளும், அரசுக்கு திரும்ப பெறக்கூடிய தொகையாக அறிவித்துள்ளார். இது, மக்கள் மத்தியில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சலுகை செய்வது போல காட்டி, ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த அறிவிப்பை புறந்தள்ளிட வேண்டும். அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் பாஸ்கரன், பொதுச்செயலர் சீனிவாசன்: 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்துள்ளதை அரசு ஊழியர் சங்கம் வரவேற்கிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிநிறைவுக்குப் பின் நிம்மதியாக வாழ, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் முருகையன், பொதுச்செயலர் சங்கரலிங்கம்: கடந்த காலத்தில் நிறுத்தியிருந்த அகவிலைப்படியை மத்திய அரசு அறிவித்த தேதியில் இருந்து மீண்டும் அரசு ஊழியர்களுக்கு அறிவித்தது, இந்த அரசின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சரண் விடுப்பு இந்தாண்டிலேயே வழங்கப்படும் என்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலர் அன்பழகன்: ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது தொடர்பான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. தேர்தல் கால வாக்குறுதிகளை அறிவித்தால் மட்டுமே ஆசிரியர்கள், அரசு ஊழியர் நம்பிக்கையை அரசு பெற முடியும். தமிழ்நாடு பழைய ஓய்வூதியத் திட்ட மீட்பு இயக்கத்தின், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ்: முதல்வரின் அறிவிப்புகளில் எட்டு அறிவிப்புகள் உடனடியாக பலன் அளிக்கக் கூடியவை.தமிழகத்தை விட பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜார்க்கண்ட், ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம் உட்பட ஏழு மாநிலங்கள் நடைமுறைப்படுத்தியதை தொடர்ந்து, தமிழகத்திலும் விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலர் ஜெயராஜ ராஜேஸ்வரன் அறிக்கை: மகப்பேறு விடுப்பில், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பெண்களுக்கு எதுவும் அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது.சரண் விடுப்பு அறிவிப்பு நாடகம் ஏற்கனவே எதிர்பார்த்தது தான். மொத்தத்தில், 110 -விதியில் முதல்வரின் அறிவிப்பு, அரசு ஊழியர்களை கடனாளியாக்குவதாக உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன்: முதல்வர் ஸ்டாலின், 110 விதியின் கீழ், சட்டசபையில் அறிவித்துள்ள சில அறிவிப்புகள் ஏமாற்றம் அளிக்கின்றன. முதல்வர் உறுதியளித்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதுவரை போராட்டங்கள் தீவிரமடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
ஏப் 29, 2025 15:44

மாநிலமே 9 லட்சம் கோடி க்கு மேல் கடனில் உள்ளது என்பதால் அரசு ஊழியர்கள் இந்தச் சலுகைகளை மறுத்துவிடலாம். சம்பளத்தை மட்டுமா நம்பி வாழ்கிறீர்கள்? கொஞ்ச நாள் சமூகத்திற்கு இலவச சேவை செய்யலாமே.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 29, 2025 11:49

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் எப்படி மெக்சிகோ நாடு பென்ஷன் கொடுத்து திவால் ஆனதோ அது போல தமிழகமும் திவால் ஆகி விடும். மெக்சிகோவில் இப்போது கட்டாயம் அனைவரும் 70 வயது வரை வேலைக்கு சென்று சாப்பிட வேண்டும். அதற்கு பின் முடியாதவர்களுக்கு மட்டும் ஓய்வூதியம். திவால் பின்னர் இலஞ்சம் வாங்க முடியாது. யாரும் தர மாட்டார்கள் ஏனெனில் யாரிடமும் பணம் இருக்காது.


shyamnats
ஏப் 29, 2025 08:49

தமிழக மக்கள் என்பவர்கள் அரசு ஊழியர்கள் மட்டுமா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூட இதே கேள்வியை எழுப்பி, பின்னர் பின் வாங்கினார். தேர்தல் நெருங்குவதால் இவர்களை தாஜா செய்து ஓட்டு வங்கியை பெரிசாக்க இந்த அறிவிப்புகள். முறையான துறை சார்ந்த வேலை கிடைக்காத பொது ஜனம் நிலைமை ஒன்றும் மாற வேண்டாமா? தமிழகத்திற்கு தேவை முறையான அரசு நிர்வாகமே.


GMM
ஏப் 29, 2025 07:22

ஊதாரி செலவிற்கு முற்றுப்புள்ளி வைத்தால், பழைய பென்ஷன் திட்டம் செயல்படுத்த முடியும். கணவன் மனைவி இருவரும் அரசு ஊழியர் என்றால் ஒருவருக்கு மட்டும். ஓய்வு பெற்ற பின் இரு வீடுகள், விவசாய நிலம், பிள்ளைகள் வருமானம் .. போன்றவை இருந்தால் பென்ஷன் நிறுத்த வேண்டும். தற்போது தொழில் நுட்ப உதவிகள். ஊழியர் எண்ணிக்கை குறைக்க முடியும்.


raja
ஏப் 29, 2025 07:07

இன்னுமா தமிழா இந்த திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற தெளுங்கனை நம்புகிறார்.. அடித்து விரட்ட வேண்டியவன். .


Yes God
ஏப் 29, 2025 06:52

யார் திராவிடன் அவன் எங்கிருக்கிறான்


Yes God
ஏப் 29, 2025 06:50

அடைந்தால் திராவிட நாடு. இல்லேன்னா சுடுகாடு. அப்பா இதை கேட்டால் உடம்பு புல்லரிக்கிறது. அடுக்கு மொழி பேசியே ஆள கவுத்தானுங்க


Svs Yaadum oore
ஏப் 29, 2025 06:47

தமிழகத்திலும் விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமாம் ......போக்குவரத்துக்கு ஊழியருக்கு ஓய்வு பெற்ற பின் பணி முதிர்வு தொகை கூட கொடுக்க கூட வக்கில்லாத அரசாங்கம் ....இந்த லட்சணத்தில் அரசு ஊழியருக்கு பழைய ஓய்வூதியத் திட்டமாம் .....விடியல் தேர்தல் வாக்குறுதி என்று வந்தவன் போனவன் கேட்டதெல்லாம் தேர்தல் வாக்குறுதி என்று அறிவிப்பு ...அவன் சொன்னதை கேட்டு இவன் வோட்டு போட்டானாம் ....மேல் மாடியில் சாணியா இருந்தது ??....


D.Ambujavalli
ஏப் 29, 2025 06:38

தேர்தல் நெருக்கத்தில் அரசு ஊழியர்களைத் தன்னைக்கட்டியாக வேண்டும் என்பதற்காக அறிவிப்பு. அரசாணை வெளியிட நீண்ட தாமதம் செய்துவிட்டு, புது அரசு வந்ததும், ‘நாங்கள் அறிவித்ததை நிறைவேற்றவில்லை’ என்று எதிர்க்குரல் எழுபது முன்னேற்பாடுதான் இது


Venkateswaran Rajaram
ஏப் 29, 2025 05:32

முதலில் அரசு ஊழியர்கள் லஞ்சம் பெற்றுக் குவித்த சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும். பின் அவர்களுக்கு பழைய ஓய்ஊதிய திட்டத்தை அமல் படுத்தலாம்....


முக்கிய வீடியோ