உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விளக்கம் அளித்த கவர்னரிடம் முதல்வர் ஸ்டாலின் கேள்வி

விளக்கம் அளித்த கவர்னரிடம் முதல்வர் ஸ்டாலின் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழ்தாய் வாழ்த்துப்பாடலை பெருமையோடு துல்லியமாய் பாடுவேன் என விளக்கமளித்துள்ள கவர்னர் விழா மேடையிலேயே திருத்தியிருக்கலாமே என கவர்னரின் பதிலுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்சென்னை தூர்தர்ஷன் டி.வி., தமிழ் அலுவலகத்தில் நடந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் 'திராவிடம் ' என்ற வார்த்தை கொண்ட வரி விடுபட்டது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ள அறிக்கையில்https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=utwmlv2l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பக்திச்சிரத்தையோடு பாடுவேன்' எனச் சொல்லும் நீங்கள், முழுமையாகப் பாடப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உடனே மேடையிலேயே கண்டித்திருக்க வேண்டாமா? அதனை ஏன் செய்யவில்லை? 'பெருமையோடு துல்லியமாகப் பாடுவேன்' என விளக்கம் கொடுக்கும் ஆளுநர் - உரிமையோடு அந்த இடத்திலேயே தவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கலாமே! சரியாகப் பாடும்படி பணித்திருக்கலாமே? துல்லியமாக அந்தச் செயலை நீங்கள் செய்திருந்தால் எதிர்வினை ஏற்பட்டிருக்குமா?'ஒரு கவர்னருக்கு எதிராக முதல்வ்ரர் இனவாதக் கருத்தைத் தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது' எனச் சொல்லியிருக்கிறீர்கள்.கவர்னர் அவர்களே, தமிழ் எங்கள் இனம்! அது எங்கள் உயிர்மூச்சு! தமிழ்மொழியைக் காக்க உயிர்களை நெருப்புக்குக் கொடுத்தவர்கள் தமிழர்கள். முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்கு அடிகோலியதோடு, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறுகளைத் தாங்கி நிற்கும் மண் இது. இந்த மண்ணின் தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான்!'பாஜக அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவி தமிழ்மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தைத் தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது. ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழைக் கொண்டு சென்றார் பிரதமர் மோடி' எனச் சொல்லியிருக்கிறார் கவர்னர். தமிழைத் தலையில் தூக்கிப் போற்றுவதாக நீங்கள் கூறும் மோடி அரசு தமிழ்மொழிக்கு என்ன செய்தது? 2013-2014 முதல் 2022 -2023-ஆம் ஆண்டு வரை சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக டெல்லியில் உள்ள மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.2029 கோடி, திருப்பதியில் உள்ள தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.406 கோடி என மொத்தம் ரூ.2435 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு செலவிடப்பட்டதைவிட இரண்டரை மடங்கு அதிகம். இதே காலகட்டத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக வெறும் ரூ.167 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. அதாவது சமஸ்கிருதத்திற்குச் செலவிடப்பட்டதில் வெறும் 7 விழுக்காடு மட்டுமே தமிழுக்கு ஒதுக்கப்பட்டது. அதுமட்டுமில்ல, கடந்த காலத்தில் நீங்கள் பேசியது நினைவிருக்கிறதா? 'தமிழ்நாடு என்ற பெயரைப் புறக்கணித்து, தமிழகம் என்று அழைக்க வேண்டும்' என்றும்; “திராவிடம் என்ற கோட்பாடே பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தியதுதான்” என்றும் கூறியதை மறக்க முடியுமா?'திராவிட மாடல் காலாவதியான கொள்கை' என ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்த வெறுப்புதானே, இன்றைக்குத் தமிழ்த்தாய் வாழ்த்து வரை வந்து நிற்கிறது?தமிழை நேசிப்பதாக இப்போது சொல்லும் நீங்கள் முன்பு, திருவள்ளுவர் படத்தைக் காவி நிறத்தில் ஏன் வெளியிட்டீர்கள்? எனச் சொல்ல முடியுமா? தமிழ்மீது ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குப் பற்றிருப்பது உண்மையானால், உலகப் பொதுமறையான திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்காமல் உங்களைத் தடுப்பது எது?பிரதமர் மோடி அவர்கள் அறிமுகப்படுத்தும் திட்டங்கள், தொடர்வண்டிகள், முன்வைக்கும் முழக்கங்கள் என 'எங்கும் இந்தி - எதிலும் இந்தி' என்ற கொள்கையுடன் இந்தியைத் திணிப்பது நீங்கள்தான்.கவர்னராகப் பொறுப்பேற்றதிலிருந்து அரசியல்சட்ட நெறிமுறைகளை மறந்து நாள்தோறும் அரசியல் பேசுவதும், கவர்னர் மாளிகையை அரசியல் அலுவலகமாக மாற்றியதும் - திராவிட இனத்தையே கொச்சைப்படுத்திப் பேசி வருவதும் எந்த வகை அரசியல் நாகரிகம்? எந்த வகை கண்ணியம்?சட்டப்பேரவையில் நீங்கள் படிக்க வேண்டிய கவர்னர் உரையில் கூட திராவிட மாடல், தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற பெயர்களைத் தவிர்த்தவர்தானே நீங்கள்?உங்கள் வரலாறு இப்படி இருக்கும்போது, #திராவிடநல்திருநாடு தவிர்க்கப்பட்டதைத் தற்செயலானது எனத் தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?அரசியலமைப்புச் சட்டப் பதவியில் சட்டப்புத்தகத்தின்படி பொறுப்பேற்றவர், வகுப்புவாதக் கும்பலின் கைப்பாவையாக மாறி, பிளவுவாத அழிவு விஷக் கருத்துகளைத் தமிழ்மண்ணில் விதைக்க நினைத்தால் அதன் வேரில் வெந்நீர் ஊற்றுவார்கள் தமிழ்நாட்டு மக்கள்.நீங்கள் கவர்னர் பதவியில் தொடர நினைத்தால், பிளவுவாத சக்திகளிடமிருந்து விடுவித்துக்கொண்டு, அரசியல்சட்ட நெறிமுறைகளின்படி கடமையை ஆற்ற வேண்டும் என உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Sakthi
அக் 20, 2024 00:02

இவர்கள் அனைவரும் இதோடு விட்டுவிட்டால் இன்னும் 20 மாதம் காலத்தை ஒட்டலாம். இல்லாவிட்டால் தவளை தன் வாயல் கெட்ட கதை தான். உண்மையான தமிழர்கள் திராவிடத்தை தொழிலுறிபர்கள்


GMM
அக் 19, 2024 08:38

திராவிடம் என்ற வார்த்தை மூல பாடலில் பின் சேர்ப்பு. தமிழினம் திராவிட மாயை இனம் என்றால், திராவிட சொல்லை நீக்கியது சரிதான். இந்தி எதிர்ப்பில் மாணவர்களை கொளுத்தியது யார்? சமஸ்கிருதம் தேசிய மொழி. தமிழ் மாநில மொழி. இந்திய நாட்டின் உள் தமிழ்நாடு என்ற சொல் தவறு. மதுரை, திருச்சி மாநிலம் என்று கூறலாமா? இஷ்டம் போல் பெயர் கூடாது. நம் புலவர்கள், மன்னர்கள் திராவிடம் என்ற சொல் எங்கும் பயன்படுத்த வில்லை? ஒரு வீதிக்கு கூட பெயர் இட வில்லை. திராவிட மொழி, கலாச்சாரம், நூல், உறவு ஏதும் இல்லை. திருவள்ளுவருக்கு காவி உடையில் என்ன தவறு? வெள்ளை உடைக்கு ஆதாரம்.? தமிழ் மக்கள், இளைஞர்கள் மாறிவிட்டனர். தேசிய ஒருங்கிணைப்பு மொழி அவசியம். பிள்ளைகள் வெளி மாநிலங்களில் படும் அவஸ்தைக்கு காரணம் திராவிடம். தனியார் பள்ளி, கல்லூரிகள் அடிப்படை இந்தியை கற்று கொடுக்க வேண்டும்.


Neel Sansu
அக் 19, 2024 07:53

எனக்கு ஒரு விதமான சந்தேகம் வருகிறது. ஹிந்தி விழாவின் கடைசி நாளில் தி. மு. க. வின் இளைஞர் அணி மட்டும் கலந்து கொள்கிறது. விழாக்களில் எப்பொழுதும் பாடும் பாடகி வரவில்லை. திராவிட நல் திருநாடு என்ற பகுதி மட்டும் தவறுகிறது. உடனடியாக முதல்வர் அறிக்கை விடுகிறார். எல்லாவற்றிற்கும் ஒரு தொடர்பு இருக்குமோ? இது ஒரு வகை டூல் கிட் ஆக இருக்குமோ?


N Sasikumar Yadhav
அக் 19, 2024 07:31

4000 கோடி ரூபாயில் செய்யும் வடிகால் பணி இன்னும் நிறைவேற்றாத தீயமுக மீது இருக்கும் தீயமுகவுக்கு மட்டும் வாக்களித்த சென்னை மக்களின் கோபத்தை தங்களுடைய கேவலமான பாணியில் திசைதிருப்புகிறார்கள்


N Sasikumar Yadhav
அக் 19, 2024 07:31

4000 கோடி ரூபாயில் செய்யும் வடிகால் பணி இன்னும் நிறைவேற்றாத திமுக மீது இருக்கும் தீயமுகவுக்கு மட்டும் வாக்களித்த சென்னை மக்களின் கோபத்தை தங்களுடைய கேவலமான பாணியில் திசைதிருப்புகிறார்கள் திருட்டு திராவிட மாடல் கட்சியினர்


venugopal s
அக் 19, 2024 06:48

பெற்ற தாயை அடுத்த வீட்டுக்காரன் கேவலமாக இழிவாகப் பேசும்போது கோபப்படாமல் சிரித்துக் கொண்டே செல்லும் மானங்கெட்ட மகனைப் போல் தமிழக பாஜக ஆதரவாளர்கள்... இந்த விஷயத்தில் ஆளுநரையும்,பிரசார் பாரதியையும் கண்டிக்காமல் அவர்களை ஆதரிப்பது! இவர்கள் சோறு தான் சாப்பிடுகிறார்களா என்ற சந்தேகமும் வருகிறது!


maadal
அக் 19, 2024 08:17

21 ஆம் பக்கம் நினைவு ஓசி குவார்ட்டர்க்கு un குடும்பத்தை அடிமையாக்கி. தமிழர்களை அல்ல


Thiru Thiru
அக் 19, 2024 11:03

தோற்றால் 200 ரூபாய் அடிமையே நீங்க வேண்டுமானால் அடிமையாய் இருங்க


theruvasagan
அக் 19, 2024 11:06

தமிழை காட்டுமிராண்டிகள் மொழி என்றும் திருக்குறளை தங்கத்தட்டில் வைத்த ...(அந்த வார்த்தையை சொல்லவே கூசுகிறது) என்றும் பழித்தவர்களை கண்டிக்க உனக்கு ரோஷம் வரவில்லையே. கோபம் வரவில்லையே. அதைவிட மோசம் அவர்கள் வழியிலே வந்தவர்கள் நாங்கள் என்று பெருமை பேச்சு வேறே.ஏன் அப்படி. உங்களோட தமிழ் பற்று எப்படின்னு ஊருக்கே தெரியும். உலகத்துக்கே தெரியும். இந்த உருட்டு எல்லாம் எடுபடாது.


N Sasikumar Yadhav
அக் 19, 2024 12:43

முதலில் உங்க திராவிட மாடல் அரசை தீயமுக தலைவர் கருநாநியால் சுயநலத்துக்காக வெட்டப்பட்ட பாடலை எடுத்து விட்டு திரு மனோன்மணியம் எழுதிய முழு தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பதிவிட சொல்லுங்க அதை விட்டுட்டு தாய் அது இதுன்னு நாடகம் நடத்தாதீர்


Sathyanarayanan Sathyasekaren
அக் 19, 2024 05:56

திருட்டு திராவிட கொள்ளையர்கள், ஊழல் மற்றும் நிர்வாகத்திறமையின்மையை மறைக்க மறுபடியும் ஹிந்தி நாடகம்? அண்ணா பல்கலை பேராசிரியர் உலகமெங்கும் தடைசெய்யப்பட்ட முஸ்லீம் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்திருக்கிறேன். போலீஸ் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வருக்கு அதை பற்றி கவலை இல்லை, ஹிந்தி திணிப்பாம், அதை எதிர்கிறாராம். இன்னுமாடா ஏமாற்றுகிறீர்கள்? வெட்கக்கேடு.


இறைவி
அக் 19, 2024 05:50

இந்த கேள்விக்கான பதில் ஒரு ஆரம்ப பள்ளி சிறுவனுக்கு கூட தெரியும். ஒரு விழாவில் பாடல் இறை வணக்கம் அல்லது மொழி வாழ்த்து பாடப்படும்போதோ அல்லது யாரேனும் சொற்பொழிவு ஆற்றும் போதோ ஒரு இடத்தில் தவறு நேருமானால் யாரும் விழா மேடையில் அதை குறுக்கே பாய்ந்து நிறுத்தி சரி செய்ய மாட்டார்கள். தமிழுக்காக இவ்வளவு பொங்கும் முதல்வருக்கு அந்த பாடலின் முழு வடிவத்தை அப்படியே பாடாமல், அவரது தந்தை மாற்றினார் என்பது தெரியுமா? அல்லது தமிழ் தமிழ் என்று இவர் கூவும் தமிழை, அவர்களின் தாய் மொழியை விட, ஆதி மொழி என்று தூக்கிப் பிடிக்க திராவிட நாடுகளான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மக்கள் தயாரா என்று தெரியுமா? சென்னை வெள்ள சொதப்பல்களிலிருந்து மக்களை திசை திருப்பும் வேலை.


சம்பா
அக் 19, 2024 04:31

சரியான கேள்வி தான்


நிக்கோல்தாம்சன்
அக் 19, 2024 04:00

திரு ஸ்டாலின் அவர்களே , நீங்க துண்டு சீட்டு இல்லாம பேசவே தெரியாது , இதில் தமிழ்த்தாய் வாழ்த்தை அடுத்தவர் பாடவில்லை என்று புகார் கூறுகிறீர்கள் , உங்களுடைய பழைய வீடியோக்கள் வேண்டுமா ? அப்படி கொடுத்தால் தமிழகத்தை விட்டு எங்கே போவீர்கள் என்பதனை முதலில் தெள்ளத்தெளிவாக உரைத்து விடுங்க


புதிய வீடியோ