உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "தரம் குறையாது, தடை கூடாது" - காலை உணவு திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் உறுதி

"தரம் குறையாது, தடை கூடாது" - காலை உணவு திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவுத்திட்டம் இன்று முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் உள்ள ஒரு பள்ளியில் துவக்கி வைத்து பேசுகையில்;பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோர் முன்னேற்றத்திற்கு பணி செய்வதில் எனக்கு பெரும் மகிழ்வாக உள்ளது. பசியை போக்குவதற்காக பெற்றோர்களுக்கு உரிய பாசத்தோடு நான் கொண்டு வந்த திட்டம் தான் காலை உணவு வழங்கும் திட்டம்.பள்ளி குழந்தைகள் யாரும் பசியுடன் இருக்கக்கூடாது. அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. மாணவர்கள் படிப்புக்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது. இடைநிற்றலை தவிர்க்க வேண்டும். படிப்பதற்கு எந்த தடை வந்தாலும் அதனை உடைப்பதுதான் அரசின் கடமை. குழந்தைகள் எதிர்காலத்தின் சொத்து. காலைஉணவு திட்டம் என்பது முதலீடு. பசி பிணி போக்கும் இத்திட்டம் கடல் தாண்டி கனடாவிலும் செயல்படுத்தப்படுகிறது.

தடைகளை உடைப்போம்

20.73 லட்சம் குழந்தைகள் காலை உணவு சாப்பிட்டு வருகின்றனர். தற்போது விரிவுப்படுத்தப்பட்டுள்ள திட்டத்தின் மூலம் 2,23,536 குழந்தைகள் பயன்பெறுவர். இந்த காலை உணவு தரமாக வழங்கப்படும். ஒரு துளி கூட தரம் குறையாமல் வழங்கப்பட வேண்டும் என்பது எனது விருப்பம். இதனை உறுதி செய்ய அமைச்சர்கள், அதிகாரிகள் பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு தயாராக இருக்கிறதா? அத்தகைய ஆக்கபூர்வமான செயலை மத்திய அரசு செய்யுமா?. மாணவர்கள் படிக்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதே எனது எண்ணம். அது பசியோ, நீட் தேர்வோ, புதிய கல்விக் கொள்கையோ!. தமிழக மாணவர்களின் கல்விக்கான தடை எதுவாக இருந்தாலும், அதை நாங்கள் தகர்ப்போம். கல்வி எனும் சொத்தை மாணவர்கள் பெற உறுதுணையாக இருப்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

மனநிறைவு தந்தது!

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் தமிழகம் முழுக்க எத்தனை குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டது என்பதை கண்காணித்தேன். மாணவச் செல்வங்களின் பசி போக்கிய மனநிறைவு அடைந்தேன்!. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Mani . V
ஜூலை 16, 2024 06:38

என்ன டிகிரி படிக்கிறார்?


என்றும் இந்தியன்
ஜூலை 15, 2024 16:56

. 1 இந்த திட்டம் யாருடையது. இது எங்கள் திமுகவின் திட்டம். தவறு காமராஜ் அவர்களின் திட்டம் 2இந்த உணவுபொருட்கள் யாரிடம் இருந்து வாங்குகின்றார்கள்.


தமிழ்வேள்
ஜூலை 15, 2024 14:06

ஸ்டாலின் திட்டம் துவக்கிய பள்ளி -புனிதஅந்நாள் அரசு உதவிபெறும் பள்ளி ... அவர்களின் இயக்கத்தில் இவர் உள்ளது பகிரங்கமாக தெரிகிறது .....அரசு உதவி பெரும் பள்ளியில் எப்படி


samvijayv
ஜூலை 15, 2024 13:52

சரி.., அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த "அம்மா" உணவக தரம் ஏன் குறைந்துக் கொண்டு போகிறது?.


கட்டத்தேவன்,,திருச்சுழி
ஜூலை 15, 2024 13:17

பெயருக்கு காலை உணவுத் திட்டம்னு சொல்லி திமுகவினர் கொள்ளையடிக்க ஆரம்பித்த திட்டம்தான் இது. நீங்கள் சமைத்து போடும் முட்டையிலிருந்து காய்கறிகள் வரை தரம் இல்லாமல் கழித்து கட்டியது என்று இந்த பச்சைப் புள்ளைகளுக்கு தெரியவா போகிறது.


ஆரூர் ரங்
ஜூலை 15, 2024 12:44

சாப்பாடு போட்டது சரி.


கூமூட்டை
ஜூலை 15, 2024 12:36

தரம் என்றால் ரேஷன் பொருட்கள் மாதிரி இனி பள்ளிக்கு ஓரு சுகாதார காப்பீடு இந்த உணவு கூமூட்டை ஏழைகளுக்கு ஆசிரியர் தினம் சாப்பிட பிறகு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். வாழ்க வளமுடன் ஊழலை பரிமாற்றம்


MADHAVAN
ஜூலை 15, 2024 12:19

காலை உணவுத்திட்டம் மிக சிறப்பாக நடைபெறுகிறது, எங்களது வீட்டின் பக்கம் உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு வரம் 6 முட்டை, சத்துமாவு, தினமும் சிறுதானிய உணவு என்று மிக சிறப்பாக நடைபெருகிறது


செல்வேந்திரன்,அரியலூர்
ஜூலை 15, 2024 13:34

நீ ஒரு அறிவாலய வாட்ச்மேன் என்பது ஊரறிந்த உண்மை!


Kumar Kumzi
ஜூலை 15, 2024 14:55

ஓசிகோட்டருக்காக இம்பூட்டு கூவுரியே கொத்தடிமை


hari
ஜூலை 15, 2024 15:00

எல்லாரும் சந்தோசமா இருக்கோம்


ஆரூர் ரங்
ஜூலை 15, 2024 12:11

அடிப்படை அறிவு கொஞ்சம் தேவை. மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளித்து மாணவர்கள் தகுதியை நிர்ணயிப்பது கல்வி அமைச்சகமல்ல. மத்திய சுகாதாரத் துறைதான். கல்வி மத்திய மாநில பொதுப் பட்டியலில் இருப்பதற்கும் நீட்டுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. 15 ஆண்டுகள் மத்திய கூட்டாட்சியில் பங்கு வகித்த நேரத்தில் கல்வித்துறையை கேட்டு வாங்கி சீர்திருத்த முயற்சி எடுக்காமல் இப்போது புலம்புவது ஏமாற்று கபட நாடகம். நீட் மசோதாவைக் கொண்டு வந்த நீங்களே எதிர்ப்பது பின்னர் அதற்கு ஆதரவைக் கேட்டு வாங்குவதைப் பார்த்து சிரிப்பு வருகிறது.


தாமோதரன்,முக்காணி
ஜூலை 15, 2024 12:02

முதல்வரே பிள்ளைக்கு ஊட்டி விட்ட உங்கள் கையை நல்லா சோப்பு போட்டு கழுவிட்டிங்களா?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை