உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் மருந்தகங்கள்: அதிக கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு

முதல்வர் மருந்தகங்கள்: அதிக கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதற்கு, 1,000 முதல்வர் மருந்தகங்களை தமிழக அரசு துவக்கிஉள்ளது. இந்த மருந்தகங்களை, கூட்டுறவு சங்கங்களும், தனியார் தொழில்முனைவோரும் நடத்துகின்றனர். முதல்வர் மருந்தக திட்டத்தை, கூட்டுறவு துறை நிர்வகிக்கிறது.இந்நிலையில், முதல்வர் மருந்தகங்கள், போதிய மருந்துகள் சப்ளையின்றி முடங்குவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. முதல்வர் மருந்தகங்களின் செயல்பாடு தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில், தலைமை செயலர் முருகானந்தம் நேற்று மாலை கூட்டுறவு துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். இதில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.இதுகுறித்து, இணைப் பதிவாளர் ஒருவர் கூறுகையில், 'முதல்வர் மருந்தகங்களில், அனைத்து வகை மருந்துகளும், எப்போதும் கிடைக்கும் வகையில் இருப்பில் வைக்குமாறும்; இந்த பணியில் அலட்சியம் காட்டாமல், அதிக கவனம் செலுத்துமாறும் உயரதிகாரிகள் எச்சரித்தனர்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Suresh Sivakumar
மார் 22, 2025 05:49

காண் ஆர்ட்டிஸ்ட்


M R Radha
மார் 19, 2025 10:18

மோடியை பாத்து சூடு போட்டுக் கொள்ளக் கூடாது. ரொம்ப நாள் தாண்டாது. டூப்ளிகேட் மருந்துகள் நிறைய பூந்துடும். மக்களே த்ரவிஷ் மருந்துகளை நம்ப மாட்டார்கள்


Thiunniyam Dewakar
மார் 19, 2025 20:12

மதராஸ் மாகாணத்தில் எங்கு பார்த்தாலும் ஊழல். இப்போது மருந்திலும் ஊழல் நடக்கும். மக்கள் பொறுப்போடு இருந்து வாங்குவதை தவிர்ப்பது நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை