உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வரின் போலீஸ் துறை கடமை தவறி உள்ளது: ஹெச்.ராஜா

முதல்வரின் போலீஸ் துறை கடமை தவறி உள்ளது: ஹெச்.ராஜா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம்: தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா அளித்த பேட்டி:தமிழகத்தில், 850 போலீசார் போதை கடத்தலுக்கு துணை போனதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. முதல்வர் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் போலீஸ் துறை கடமை தவறியுள்ளது. மகனுக்கு மகுடம் சூட்டுவதில் காட்டும் ஆர்வத்தில் சிறிதளவாவது போலீஸ் துறையில் கவனம் செலுத்த வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gapl20z0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முதல்வர் மட்டுமல்ல; அமைச்சர்கள் சேகர்பாபு, மகேஷ், பொன்முடி தங்கள் இலாகா வேலைகளை பார்க்காமல் மற்ற வேலைகளை செய்து வருகின்றனர்.இது, கல்வி அமைச்சர் மகேஷின் சொந்த மாவட்டமான திருச்சியில் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியரின் மகன், 45 குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தியவரை பிடிக்க, 200 போலீசார் செல்கின்றனர்; அவர் என்ன பயங்கரவாதியா? தனியார் பள்ளிகள் வளர்ச்சி அடைந்துள்ளன. 1,300 அரசுப் பள்ளிகள் மூட வேண்டிய நிலையில் உள்ளன. அமைச்சர்கள் தங்கள் துறைகளில் கவனம் செலுத்துவதில்லை. முதல்வரின் கீழ் உள்ள போலீஸ் துறையில் தன் கடமையை செய்ய தவறி விட்டதால் ஆட்சியை ஆள வேண்டும், இல்லை என்றால் வெளியேற வேண்டும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
செப் 19, 2024 15:51

தலைமை போலீஸ் அதிகாரிகளைப் பத்தி ஒண்ணுமே பேசமாட்டீகளா ராசா? அவிங்க வேலை பாக்குற லட்சணம் தெரியலியா?


அரசு
செப் 19, 2024 13:03

ஒரு கொசு தொல்லை குறைந்தது என்று என்று பார்த்தால், புது கொசுவின் தொல்லை தாங்க முடியல.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 19, 2024 10:12

அப்படியா சொல்றீங்க ????


சிவன்
செப் 19, 2024 08:58

போலீசில் திருட்டு திராவிடனுங்க அதிகமாயிட்டாங்க. ஒருத்தன், ரெண்டு பேரா இருந்தா புடிச்சு தண்டிக்கலாம். ஆனா, மந்தை மந்தையா இருக்காங்களே. கூண்டோட டிஸ்மிஸ் வூட்டுக்கு அனுப்பினால் உருப்படலாம்.


VENKATASUBRAMANIAN
செப் 19, 2024 08:15

ஸ்டாலினிடம் அதிகாரம் இல்லை. அதனால் சும்மா பேசுவதில் பலனில்லை. இவர்களது லட்சணத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இதில் திமுக வல்லவர்கள். இதை பாஜக உணரவேண்டும்


சமூக நல விரும்பி
செப் 19, 2024 08:07

போலீஸ் துறை மட்டும் கடமை தவறவில்லை முதல்வரும் அவருடைய கடமையில் இருந்து தவறி விட்டார்.


tmranganathan
செப் 19, 2024 07:51

இதென்ன வாரிசுக்கு ஆட்சிப்பொறுப்பா? சின்னப்பையனுக்கு ஒண்டும் தெரியாது. குரங்கு கையில் பூமாலை கொடுத்தது போல ஆகிவிடும்.


Iyer
செப் 19, 2024 07:38

திமுகவின் ஸ்டாலின் அரசு இனியும் நீடித்தால் தமிழ்நாடு முழுவதும் சீரழியும். தமிழனுக்கு புத்தி கெட்டு போய் விட்டதா? படித்த பண்புள்ள, நேர்மையான, தேசபக்தன் அண்ணாமலையை நிராகரித்து திமுக போன்ற திருட்டுக்கும்பலை ஆட்சியில் அமர்த்தியதன் காரணம் என்ன?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை