ராமநாதபுரத்திற்கு முதல்வர் வருகை ஒத்திவைப்பு
ராமநாதபுரம்: முதல்வர் ஸ்டாலின் இன்றும், நாளையும் ராமநாதபுரத்தில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில் இன்று மாலை 6:00 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் ரோடு ஷோவுக்கும், நாளை அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், கரூரில் 40 பேர் பலியானதை அடுத்து, முதல்வர் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ராமநாதபுரத்தில் முதல்வர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகளும் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டன.