உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீனியர் அமைச்சர்கள் சிலருக்கு கல்தா தரும்படி உதயநிதி... நிர்பந்தம்!

சீனியர் அமைச்சர்கள் சிலருக்கு கல்தா தரும்படி உதயநிதி... நிர்பந்தம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'நான் துணை முதல்வராக பதவியேற்க வேண்டும் என்றால், சீனியர் அமைச்சர்கள் சிலருக்கு 'கல்தா' கொடுக்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, அமைச்சர் உதயநிதி நிர்பந்தம் கொடுத்து வருவதாகவும், அதன் காரணமாகவே, அமைச்சரவை மாற்றம், துணை முதல்வர் அறிவிப்பு தள்ளிப்போவதாகவும் தி.மு.க., வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அப்போது, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா; அமைச்சரவை மாற்றப்படுமா என்ற கேள்விக்கு, 'வெயிட் அண்டு சீ' என, ஒரு வரியில் பதில் அளித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b4f6xrdj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

எதிர்பார்ப்பு

அமெரிக்க பயணத்தை முடித்து சென்னை திரும்பிய போதும், அதே கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்' என்றார். இதையடுத்து, உதயநிதி துணை முதல்வராவார்; சில அமைச்சர்களும் மாற்றப்படுவர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சரவை மாற்றம்; துணை முதல்வர் பதவி அறிவிப்பு தள்ளிப்போகிறது. இதற்கு, உதயநிதியின் நிர்பந்தமே காரணம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், அரசிலும் முக்கிய துறைகளின் அமைச்சர்களாக கோலோச்சுகின்றனர். இந்த சூழ்நிலையில், தான் துணை முதல்வரானால், அவர்கள் எல்லாம் நம் சொல்படி நடப்பரா; அவர்களிடம் வேலை வாங்க முடியுமா என்ற சிந்தனையில் அமைச்சர் உதயநிதி உள்ளார். அதனால், இளைஞர்கள் பலரை அமைச்சர்களாக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அந்த இளைஞர் படையை முடுக்கி விட்டு, தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் நம்புகிறார். அதனால், 'மூத்த அமைச்சர்கள் சிலருக்கு கல்தா கொடுக்க வேண்டும்; அப்போது தான், துணை முதல்வராக பொறுப்பேற்பேன்' என, முதல்வர் ஸ்டாலினிடம் உதயநிதி நிர்பந்தம் செய்து வருகிறார்.

கருத்து கேட்டார்

இந்த பிரச்னை குறித்து, மூத்த அமைச்சர்கள் சிலரின் கருத்தை ஸ்டாலின் கேட்டுள்ளார். அப்போது, உதயநிதி துணை முதல்வராக மூத்த அமைச்சர்கள் பச்சைக்கொடி காட்டிஉள்ளனர். இருப்பினும், தங்களின் அமைச்சர் பதவி பறிபோவதை அவர்கள் விரும்பவில்லை. அடுத்த சட்டசபை தேர்தல் வரை, அமைச்சராக தொடர அனுமதியுங்கள் என்றும் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், அ.தி.மு.க.,விடம் இருந்து ஆட்சியை மீட்க, கடந்த சட்டசபை தேர்தலின் போது, தற்போது அமைச்சர்களாக இருக்கும் பலர் தான், பணத்தை வாரி இறைத்துள்ளனர். அதன்பின், லோக்சபா தேர்தல் வெற்றிக்கும் அவர்கள் வகுத்த வியூகமே உதவியுள்ளது. மேலும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களையும், மாவட்ட செயலர்களையும் சரிக்கட்ட, மூத்த அமைச்சர்களே சரியான ஆட்கள் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியாக நம்புகிறார். எனவே, உதயநிதி குறிப்பிடும் மூத்த அமைச்சர்கள், அமைச்சரவையில் தொடர வேண்டும் என்பதே அவரது விருப்பம். இதற்காக, உதயநிதியின் மனதை மாற்றும் முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார். அதாவது, 'கருணாநிதி முதல்வராக இருந்த போது, நான் துணை முதல்வராக இருந்தேன். அப்போது, கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் அமைச்சரவையில் இருந்தனர். 'அவர்கள் எல்லாம் என்னை அரவணைத்து சென்று தான் பணிகளை செய்தனர். அதேபோல, உனக்கும் ஒத்துழைப்பு வழங்க, மூத்த அமைச்சர்கள் தயாராக உள்ளனர்' என, உதயநிதியிடம் ஸ்டாலின் கூறியுள்ளார்.

லட்சியம்

அதுமட்டுமின்றி, வரும் 2026 சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது முதல்வரின் லட்சியம். அந்த லட்சியத்திற்கு இடையூறாக அமைச்சரவை மாற்றமும், மூத்த தலைவர்களுக்கு கல்தா கொடுப்பதும் அமைந்து விடக்கூடாது என்றும் ஸ்டாலின் நினைக்கிறார். அதனால், உதயநிதியை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. அவர் சமரசம் அடையும் பட்சத்தில், அமைச்சரவை மாற்றம் மற்றும் துணை முதல்வர் குறித்த அறிவிப்பு, எந்த நேரத்தில் வெளியாகலாம். இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 78 )

sundarsvpr
அக் 04, 2024 19:36

கட்சி உடையும். ஸ்டாலின் வீட்டில் அடைந்து கிடப்பார்.


sundarsvpr
செப் 28, 2024 15:39

முத்துவேல் கருணாநிதிக்கும் அவர் மகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கும் உள்ள அரசியல் நெருக்கம் தந்தை தனயன் என்பதுஅல்ல. ஜவஹர் இந்திராவிற்கு உள்ள நெருக்கும் போல் . இதுபோல் அரசியல் அனுபவம் பெற உதய நிதி தந்தையுடன் உடன் செல்லவேண்டும் பல ஆண்டுகள். சனாதன விவாத மேடையில் பேசி இரண்டாம்தர தலைவர் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். சதுரங்க ஆட்டத்தில் check இல் mate நிலையில் உதயநிதி உள்ளார். எந்த முக்கிய காய் வெட்டப்படும் என்பது இப்போது தெரியாது.


MP.K
செப் 27, 2024 16:17

வாழ்த்துக்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி


tmranganathan
செப் 25, 2024 16:32

தீம்க மூத்த அமைச்சர்களை தன வீட்டு வேலையாளாக நினைக்கிறார். சுயமரியாதை சிங்கம்னு சொல்ற தீம்க மூத்தவர்கள் சுயமரியாதை போன வர்களா?


Vijay D Ratnam
செப் 25, 2024 15:50

வாரிசு அரசியல், குடும்ப அரசியல், பரம்பரை அரசியல் இந்த தேசத்தை பிடித்த தொற்றுநோய், தொழுநோய். தமிழகத்தில் இந்த நோய் முற்றி மாநிலம் சீழ்பிடித்து சீரழியும் நிலையில் இருக்கிறது. டெங்கு போல மலேரியா போல கொசு போல இதை அகற்ற கூடாது, அடியோடு ஓழித்துக்கட்ட வேண்டும். ஆனால் காசுக்கும் குவாட்டருக்கும், பிரியாணிக்கும் ஒட்டு போடும் தமிழனுக்கு இதெல்லாம் மேட்டரே இல்லை. எந்த தகுதியும் இல்லாத, சுதந்திர தினம் குடியரசு தினம் எதுவென்று கூட தெரியாத ஒரு முதலமைச்சர் கையில் பவரை கொடுக்கும் போது அவரு மவனுக்கு பதவியை கொடுப்பதில் என்ன தவறு. காசுக்கு ஒட்டு போடும் தமிழனுக்கு கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி வராமல், யோகி ஆதித்யாநாத், சிவராஜ்சிங் சவுகான், பஜன்லால் ஷர்மா, நவீன் பட்நாயக் மாதிரி முதலமைச்சரா கிடைப்பாங்க.


சாண்டில்யன்
செப் 25, 2024 00:08

இந்த கதை பொன்னியின் செல்வன் நாவலை படித்த திருப்தி பேஷ்


தமிழன்
செப் 23, 2024 21:03

திமுக ஆட்சி இன்னமும் தொடரும் என்று நம்பிக்கையில் இப்படி பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.. ஆனால் இந்த தீபாவளிக்கு பிறகு திமுக ஆட்சி தமிழகத்தில் இருக்காது.. இது சோதிட படியான குறிப்புகள். பொறுத்து இருந்து பாருங்கள். தீபாவளிக்கு பிறகு தமிழகத்தில் உறுதியாக ஆட்சி மாற்றம் ஏற்படும்.


தமிழன்
செப் 23, 2024 20:59

திமுகவை வழி நடத்த யாரும் இல்லை என்றால், திமுகவை அதிமுகவுடன் இணைத்து விடலாம். இப்பவே பல அதிமுக தலைவர்கள் தான் திமுகவின் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.. அதனால் திமுகவை அதிமுகவுடன் இணைத்து விடுவது நல்லது. இந்த மூன்று ஆண்டுகள் திமுக ஆட்சி செயல்பட காரணமே அதிமுக முன்னாள் தலைவர்கள் தான் காரணம். அதனால் திமுகவை அதிமுகவுடன் இணைத்து விடுங்கள்.


தமிழ்வேள்
செப் 23, 2024 20:56

தமாஷா பார்க்கலாம்...


தமிழன்
செப் 23, 2024 20:56

முதல்வர் ஸ்டாலின், உதயநிதியை துணை முதல்வர் ஆக்குவதற்கு பதில், அவர் மனைவி கிருத்திகா உதயநிதியை துணை முதல்வராக மட்டும் அல்ல கட்சியின் செயல் தலைவராகவும் ஆக்கலாம்.. உதயநிதியின் முதிர்ச்சி பொறுப்பு உணர்ச்சி இவைகளில் கிருத்திகா சிறப்பாக செயல்படுவார். திமுகவின் வருங்கால தலைவர் கிருத்திகாவாக இருக்கட்டும்.


sridhar
செப் 23, 2024 21:20

வருங்காலத்தில் திமுகவே வேண்டாங்கறோம் , நீங்க வேற .


krishna
செப் 23, 2024 22:25

AAHA THAMIZHAN NEE VERA LEVELE GOPALAPURAM KOTHADIMAI ELLORAYUM VIDA 1000 MADANGU MIGA PERIYA KOTHADIMAI VAAZHTHUKKAL.