உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீடு புகுந்து நாய் கடித்ததில் குழந்தை, பாட்டி படுகாயம்

வீடு புகுந்து நாய் கடித்ததில் குழந்தை, பாட்டி படுகாயம்

கூத்தாநல்லுார்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லுார் அருகே,மேல்கொண்டாளியைச் சேர்ந்தவர், அபுதாகிர், 40. வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவரது மனைவி சுல்தான் பீவி, 20. இவர்களுக்கு, 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவர்களுடன், குழந்தையின் தாய்வழி பாட்டி மல்லிகா பீவி, 55, என்பவரும் வசிக்கிறார். நேற்று, தொட்டிலில் குழந்தை துாங்கி கொண்டிருந்தது. மல்லிகா பீவி, கொல்லைபுறம் இருந்தார். அப்போது, வீட்டிற்குள் புகுந்த தெருநாய், துாங்கி கொண்டு இருந்த குழந்தையை கவ்வி இழுத்து சென்று கடித்து குதறியது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு, மல்லிகா பீவி ஓடி வந்து, நாயை விரட்டினார்; அவரையும் நாய் கடித்தது. அக்கம் பக்கத்தினர், நாயை விரட்டி விட்டு, குழந்தை மற்றும் பாட்டியை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

கனோஜ் ஆங்ரே
ஆக 21, 2025 17:11

இந்த மாதிரி... மனிதர்கள் துன்பத்திற்கு காரணமான... கடிக்கும், வெறிபிடித்த நாய்களை கொல்வதே... மனித இனத்தை காப்பாற்ற முடியும்... பசுவை வணங்கச் சொல்லும் இந்து மத வேதங்களும், உபநிடதங்களும் “பசு உன்னை கொல்ல வந்தால், அதனை நீ கொல்லலாம்”...என இந்து மத வேதங்கள், உபநிடதங்கள் சொல்கிறது...


Sridhar
ஆக 21, 2025 13:49

நான் 3 தடவை நாய் கடியிலிருந்து தப்பினேன் இந்த செய்தியை படித்தவுடன் நாய்களை பிடித்து தனிமை இல் விடுவதே மிக நல்ல காரியம் மனித உயிர்களை காப்பாற்ற வேண்டும் ஆனால் சில உபயோமில்லாததுகள் நாய்களுக்கு சப்போர்ட் பண்ணும் இதுதான் நம் விதி


V RAMASWAMY
ஆக 21, 2025 07:30

இப்படி கட்டுப்பாடற்ற பெருகிவரும் நோய்த்தொல்லையில் மெத்தனம் காட்டுவது ஏன் ? மனித உயிர்கள் முக்கியமில்லையா? வல்லுநர்கள் இந்ததொல்லைகளுக்கான காரணங்களையும் ஆராயவேண்டும்.