மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
3 hour(s) ago | 5
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
6 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
7 hour(s) ago | 21
கரூர்:கரூர் அருகே உள்ள ஆத்தூரைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவரது மகள் கமலாதேவி(13). அதே ஊரை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி பன்னீர்செல்வம் மகள் கவுசல்யா(12), ரவி மகள் ரம்யா (13).தோழிகளான இவர்கள் மூவரும், நேற்று வீட்டுக்கு பக்கத்தில் உள்ள கல் குவாரி குட்டையில் தேங்கியுள்ள நீரில் துணி துவைக்க சென்றனர். அப்போது, கவுசல்யா குட்டையில் ஆழமான பகுதிக்கு சென்றதில் நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற ரம்யாவும், கமலாதேவியும் தண்ணீரில் குதித்தார். மூவரும் ஒன்றன் பின் ஒன்றாக தண்ணீருக்குள் மூழ்கி இறந்தனர்.இதை ஒரு பாறை மீது இருந்து பார்த்த கார்த்திக்(7) மற்றும் ஒரு சிறுவன், வீட்டுக்கு ஓடிச்சென்று தகவலை கூறியுள்ளனர். பெற்றோர் மற்றும் உறவினர்கள், கரூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் நீரில் மூழ்கிய மூன்று சிறுமியரின் உடலை மீட்டனர்.வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
3 hour(s) ago | 5
6 hour(s) ago | 5
7 hour(s) ago | 21