உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குழந்தைகளின் கற்றல் திறன் அதிகரிப்பு: முதல்வர் ஸ்டாலின்

குழந்தைகளின் கற்றல் திறன் அதிகரிப்பு: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' காலை உணவுத் திட்டம், குழந்தைகளின் கவனம், நினைவாற்றல் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்துகிறது,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: சிந்தனையுடன் திட்டமிடுவது என்பது உடனடி பிரச்னைகளைத் தீர்ப்பது மட்டுமல்ல. நாம் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் சமூகத்தை மாற்றுகிறது.காலை உணவுத்திட்டம் குழந்தைகளிடையே மருத்துவமனை வருகை மற்றும் கடுமையான நோய்களைக் கணிசமாகக் குறைத்துள்ளது. அதே நேரத்தில் கவனம், நினைவாற்றல் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்துகிறது. நன்கு ஊட்டமளிக்கப்பட்ட குழந்தை பள்ளியில் சிறப்பாகச் செயல்படுகிறது, இது நீண்டகால சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது.தமிழகம் கல்வி மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. இது பாலின விகிதாச்சாரம் மற்றும் பாலின இடைவெளிகளைக் குறைக்க வழிவகுத்தது. அதே தொலைநோக்கு அணுகுமுறையுடன், திராவிட மாடல் அரசு குறிப்பிடத்தக்க, நன்மைகளைத் தரும் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Suresh Sivakumar
மார் 22, 2025 05:55

காம்பரேட் டு ஹிம் எவேர்யோனே வில்ல பெ இன்டெலிஜெண்ட்


ஆரூர் ரங்
மார் 21, 2025 11:35

கற்றல் திறன் அதிகரித்து வருகிறது. தேர்வு நேரங்களில் மட்டுமே துண்டு சீட்டைப் பயன்படுத்துகிறார்கள்.


மணி
மார் 21, 2025 10:10

ஆம் தனியார் பள்ளிகளின் மாணவர்கள் கற்றல் திறன் அதிகரித்துள்ளது.


theruvasagan
மார் 21, 2025 09:53

தம்பி. தட்டுல இருக்கற எதையும் வீணாக்காம சுத்தமா வழிச்சு சாப்பிட்டு விடணும். தட்டு பார்க்கிறதுக்கு அலம்பி வச்ச தட்டு மாதிரி பளபளன்னு இருக்கணும். இந்த நுணுக்கம் தெரிஞ்சிகிட்டா எதிர்காலத்தில் பெரிய ஆளா வருவாய்.


अप्पावी
மார் 21, 2025 09:11

எங்கெல்லாம் சோறு ஃப்ரீன்னு ....


ashok d
மார் 21, 2025 08:55

ஐயா. Super


Velan Iyengaar, Sydney
மார் 21, 2025 08:28

ஹும் என்ன செய்ய... துண்டு சீட்டு பார்த்து கூட படிப்பதில் சிரமம்...


Padmasridharan
மார் 21, 2025 01:20

பெண் காவலர்கள், ஆண் காவலர்களை போல் இரவு ரோந்துக்கு ஜீப் ஒட்டியும்/ நடந்தும் வருவதில்லை. இலவச பயண சீட்டு கொடுக்கும் பேருந்தில் பெண் நடத்துனர்கள் இல்லை. பெண் படகோட்டிகள் இல்லை. பொய்கள் சொல்லி விவாகரத்துகள் அதிகமாகி இருக்கின்றது. இவை பெண் அதிகாரமா. இலவச காலை சாப்பாடு போட்டு கற்று வளர்ந்தபின் மதுக்கடைகளில் நிற்கவா கற்றல் திறனின் பயன். படித்தவர்களிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் ஆதிக்கம்


krishna
மார் 20, 2025 21:56

INDRU MUDHAL NAMMA THUNDU SEATTU AVARGALAI KUDI APPA ENA SELLAMAAGA KOOPIDALAAM.


Ramesh Sargam
மார் 20, 2025 21:56

குழந்தைகளின் கற்றல் திறன் அதிகரிப்பு. முற்றிலும் பொய். அதிகப்படியான வீடுகளில் குழந்தைகளின் பெற்றோர்கள் குடித்துவிட்டு ஒன்றுமறியாத குழந்தைகளை அடிப்பதால், குழந்தைகளின் கதறல்தான் அதிகரிப்பு.