பஹல்காம் தாக்குதல் பின்னணியில் சீனா
காஷ்மீர் பஹல்காம் பகுதியில், ஹிந்துக்கள் பங்கரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்; இது கண்டிக்கத்தக்கது. இதை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஐ.நா. சபையில் இருந்து பாகிஸ்தானை நிரந்தரமாக நீக்க வேண்டும். உலக நாடுகள் எங்கும், பாகிஸ்தான் விளையாட்டு வீரார்கள் விளையாடுவதற்கு தடை விதிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், இந்தியாவும் பாகிஸ்தானுடன் எந்த விளையாட்டையும் விளையாட அனுமதிக்ககூடாது. பஹல்காமில் பயங்கரவாதிகள், நீங்கள் ஹிந்துவா எனக் கேட்டுக் கேட்டு சுட்டுக் கொலை செய்திருக்கின்றனர். இதன் பின்னணியில் சீனாதான் உள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளுக்கு சீனா தான் ஆயுத சப்ளை செய்கிறது. பஹல்காம் நிகழ்வுக்குப் பின், பாகிஸ்தானின் எல்லையை இந்தியா மூடியிருக்கிறது. இந்த முடிவு சரியானது. மதுரை ஆதினம்