உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திண்டுக்கல்லில் சீன பூண்டு விற்பனையா

திண்டுக்கல்லில் சீன பூண்டு விற்பனையா

திண்டுக்கல் : சீனாவில் மரபணு மாற்றப்பட்ட பூண்டுகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பூண்டுகளை சாப்பிடுவதால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சீனா நாட்டில் உள்ள மரபணு மாற்றப்பட்ட பூண்டுகள் விற்பனையாவதாக தகவல்கள் வெளியானது. இதன் எதிரொலியாக திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் மேற்குரதவீதி,கச்சேரி தெரு, பெரிய கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படும் மொத்த பூண்டு கடையில் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர். இவை விற்பனைக்கு வந்தால் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினர்.

அதிகாரிகள் கூறியதாவது:

மரபணு மாற்றப்பட்ட சீன பூண்டுகளை சாப்பிடுவதால் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை எந்த பகுதிகளிலும் சீன பூண்டுகள்தென்படவில்லை. கடைகளிலும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Barakat Ali
டிச 05, 2024 11:06

தமிழகம் சீனாவின் இறையாண்மைக்கு உட்பட்டது ..... இந்திய ஒன்றியத்துக்கு கட்டுப்பட்டதல்ல ..... இவ்வாறு திராவிட மாடல் அறிவித்து விடுமா ????


P Kumar
டிச 05, 2024 07:16

சைனா பூன்டுன்னே விக்கிரானுக இவிங்களுக்கு இன்னும் ஆதாரம் கெடெக்கலையாம் என்ன ஒரு குசும்பு.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை