உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீனாட்சி கோவில் நிலத்தில் கிறிஸ்துவ கட்டுமானம்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மீனாட்சி கோவில் நிலத்தில் கிறிஸ்துவ கட்டுமானம்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க தாக்கலான வழக்கில், அங்கு மறைமாவட்ட பிஷப் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமானத்தை பொறுத்தவரை, தற்போதைய நிலை தொடர இடைக்கால உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரை கிளை.மதுரை வழக்கறிஞர் மகாராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை, வண்டியூர் பகுதியில் குறிப்பிட்ட சர்வே எண் நிலம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது. இதை ஒரு வழக்கில் 1966ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆனால், இன்னும் ரோமன் கத்தோலிக்க மிஷனின், தற்போது மதுரை ஆர்ப்பிஷப்பகம் - மதுரை மறைமாவட்ட பிஷப் இல்லம் வசமே உள்ளது.'மதுரை புரோக்ரேட்டர் சொசைட்டி ஆப் செயின்ட் மேரீஸ்' என்ற பெயரில் பட்டா பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலத்தை மீட்டு மீண்டும் மீனாட்சி அம்மன் கோவில் பெயரில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:நிலத்தில் கட்டுமானத்தை பொறுத்தவரை தற்போதைய நிலை தொடர வேண்டும். நில நிர்வாக கமிஷனர், அறநிலையத்துறை கமிஷனர், மண்டல இணை கமிஷனர், கலெக்டர், கோவில் செயல் அலுவலர், மறைமாவட்ட பிஷப்பிற்கு நோட்டீஸ் அனுப்பி நவ., 25க்கு வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Anantharaman Srinivasan
நவ 13, 2025 18:26

நிலம் மீனாட்சி அம்மன் கோவிலுக்குசொந்தமானதுனு 1966 ல் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியபின்பும் 50 வருடமா மீனாட்சியம்மன் கோவில் நிலத்தை மீட்க முடியலையே.. இந்து நாடு.


என்றும் இந்தியன்
நவ 13, 2025 17:25

5.23 கோடி வழக்குகள் Pending in Indian Courts.


Barakat Ali
நவ 13, 2025 16:15

இங்கேயும், சமூக வலைத்தளங்களிலும் கொதித்துப் பொங்கும் ஹிந்துக்கள் தெருவில் இறங்கிப்போராட மாட்டார்கள் ....


Natchimuthu Chithiraisamy
நவ 13, 2025 13:00

மதுரை வழக்கறிஞர் மகாராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: செய்தி வெளியில் வருகிறது. இந்த பொது நல மனுவை யார் யார் போட முடியுமோ மதுரையில் உள்ள அனைவரும் போடுங்கள் விழாவுக்கு வருபவர்கள் அனைவரும் கோர்ட்டில் இருப்பார்கள். இதில் என்ன ஆதாயம் என்று யோசிக்காமல் செயல் படுங்கள் மதுரை இந்துக்களே.


Modisha
நவ 13, 2025 12:47

கோவிலே கிறிஸ்துவ நிலத்தில் இருப்பதாக திமுக அரசு சொன்னாலும் ஹிந்துக்கள் போராட போவதில்லை .


JAYACHANDRAN RAMAKRISHNAN
நவ 13, 2025 11:53

கோவை சூலூர் பகுதியில் உள்ள ஒரு திராவிட மாடல் கல்லூரி கூட திருவண்ணாமலை கோவிலுக்கு சொந்தமானது என்று சொல்லுகிறார்கள். என்ன செய்ய முடிந்தது. கல்லூரியும் அப்படியே தான் இருக்கும் கோவிலும் அப்படியே தான் இருக்கும். திராவிட மாடல் எதுவும் செய்ய முடியாது. எந்த கோர்ட் வந்தாலும் எதுவும் நடக்காது. திராவிட மாடல் நினைத்தது தான் நடக்கும். எவரெஸ்ட் சிகரம் ஏறினாலும் உச்சியில் எவ்வளவு நேரம் தான் நிற்க முடியும் அங்கேயே தங்க முடியாது இறங்கித்தானே ஆக வேண்டும்.


Muralidharan S
நவ 13, 2025 11:33

மக்களின் கவனத்தை தங்களின் மோசமான நிர்வாக சீர்கேடான, ஊழலான ஆட்சியிலிருந்து திசைதிருப்பிக்கொண்டேதான் இருக்கும்.. திராவிஷா மாடல்..


R.MURALIKRISHNAN
நவ 13, 2025 11:24

இந்து கோயில் நிலங்களை ஆட்டய போடுவதில் இஸ்லாம் மட்டுமல்ல கிருத்துவமும் முயற்சிக்கிறது. ஆக கிருத்துவம், இஸ்லாம் மற்றும் திருட்டு திராவிடம் மூன்றும் நிலத்தை ஆட்டய போடுவதில் நிபுணர்கள்


Rathna
நவ 13, 2025 11:21

ஒத்தி வைத்தால் தான் வரவேண்டியது வரும்.. ஒத்தி வைங்க.. முடிவு எடுக்காதீங்க.


என்னத்த சொல்ல
நவ 13, 2025 11:10

60 ஆண்டகால பிரச்சனைபோல் தெரிகிறது.


புதிய வீடியோ