மேலும் செய்திகள்
கொடுமையை எதிர்த்து நில்... துாற்றுதல் ஒழி
10-Dec-2024
கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர் மன்னர் அலெக்சாண்டர். இவர் போரில் பல நாடுகளை வென்றவர். ஒருமுறை இவரது படை இந்தியாவிற்கு வந்து பஞ்சாபை கைப்பற்றியது. அப்போது பஞ்சாபை ஆட்சி செய்தவர் போரஸ். அவரது கையில் விலங்கிட்டு அலெக்சாண்டர் முன் நிறுத்தினர். ''இப்போது நீ கைதி. உன்னை எப்படி நடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறாய்'' எனக்கேட்டார் அலெக்சாண்டர். அப்போதும் போரஸ் தைரியமாக, ''போரில் ஜெயிப்பது, தோற்பது மன்னர்களுக்கு சகஜம். தோற்றாலும் என் நாட்டிற்கு நானே மன்னன்'' என தெரிவித்தார். இந்த சூழ்நிலையிலும் போரஸின் தைரியமான பதிலைக் கேட்ட அலெக்சாண்டர் ஆச்சர்யப்பட்டார். உடனே வீரர்களிடம், ''போரஸின் கை விலங்கை அகற்றுங்கள். அவரை பத்திரமாக அனுப்பி வையுங்கள்'' எனக்கூறி, கைப்பற்றிய பகுதிகளை அவரிடமே ஒப்படைத்தார்.
10-Dec-2024