உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிறிஸ்துமஸ் சிந்தனைகள்-19

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்-19

நற்செய்தி

'நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாட்கள் நகர்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைக்கிறது. தளிர், கதிர், தானியம் என நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்தது தெரிந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார். ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது' என்றார் இயேசு. இதில், விதை - நற்செய்திவிதைப்பவர் - நற்செய்தியை அறிவிப்பவர்விளைநிலம் - இதைக்கேட்கும் மக்களின் உள்ளம்கதிர் - ஞானம் அறுவடைக்காலம் - நிலையான வாழ்வுக்குள் மக்களைச் சேர்க்கும் காலம் என்பதைக் குறிக்கும்.அதாவது நல்ல விளைச்சலைப் பெறுவதற்கு நற்செய்தியை மக்களின் உள்ளத்தில் விதைப்பதே அடிப்படை. அதுமட்டுமே நாம் செய்யக்கூடிய காரியமாக இருக்கும். சொல்லால் மட்டுமல்ல, செயலாலும் நற்செய்தியை அறிவிக்க முடியும் என்றார் இயேசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ