உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சினிமா 28.08.26

 சினிமா 28.08.26

'டாக்சிக்' முதல் நாளில் ரூ.150 கோடி வசூல் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் 'டாக்சிக்'. இந்தாண்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம். ஆனால் படத்தில் ஒரே வன்முறை, ரத்தம், ஆபாசம் என கொட்டி கிடப்பதால் நெகட்டிவ் விமர்சனங்களே வருகின்றன. இருப்பினும் முதல்நாளில் உலகளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் இப்படம் லாபத்தை பெறுவது கஷ்டம் என்றே சொல்கிறார்கள். ' ரணபலி' ரிலீஸில் மாற்றம் ராகுல் சங்கிருத்தியன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா, ஹாலிவுட்டின் 'மம்மி' பட புகழ் வில்லன் ஆர்ணால்டு வோஸ்லுா ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்து வரும் படம் 'ரணபலி'. வரலாற்றுப் பின்னணியில் அதிரடி படமாக உருவாகிறது. செப்., 11ல் ரிலீஸ் என அறிவித்து இருந்தனர். ஆனால் பட பணிகள் இன்னும் முடியாததால் அக்., 16க்கு ரிலீஸை தள்ளி வைத்துள்ளனர். ரிலீசிற்கு முன்பே 'ஏ' சான்றிதழ் சொன்ன இயக்குனர் 'அனிமல்' படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, அடுத்து பிரபாஸ் நாயகனாக நடிக்கும் 'ஸ்பிரிட்' படத்தை இயக்கி வருகிறார். திரிப்தி டிம்ரி நாயகியாக நடிக்கிறார். அடுத்தாண்டு மார்ச் 5ல் ரிலீசாகிறது. இப்படம் குறித்து பேசிய சந்தீப் ரெட்டி, ''நாம் எவ்வளவு முயற்சித்தாலும் ஸ்பிரிட் படத்திற்கு சென்சார் போர்டு, 'ஏ' சான்றிதழ் தான் கொடுப்பார்கள்'' என பட ரிலீஸிற்கு முன்பே கூறிவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை