உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிசம்பர் 12ல் தர்ணா சி.ஐ.டி.யு., அறிவிப்பு

டிசம்பர் 12ல் தர்ணா சி.ஐ.டி.யு., அறிவிப்பு

சென்னை: 'பழைய ஓய்வூதிய திட்டம், போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கக்கோரி, டிசம்பர், 12ல் சென்னையில் தர்ணா போராட்டம் நடத்தப்படும்' என, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, சி.ஐ.டி.யு., பொதுச்செயலர் ஆறுமுகநயினார் கூறியதாவது:

போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு, ஓய்வு கால பணப்பலன், மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். அனைத்து துறையிலும் ஓய்வு பெற்றவர்கள், அகவிலைப்படி உயர்வு பெறும் போது, போக்குவரத்து துறையில் மட்டும், ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக, அகவிலைப்படி உயர்வு மறுக்கப்படுகிறது. அதேபோல, தி.மு.க., வின் தேர்தல் வாக்குறுதியின்படி, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படாமல் உள்ளது. அதை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பர், 12ம் தேதி, சென்னை பல்லவன் சாலையில், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, தர்ணா போராட்டம் நடக்கும். இதில், அரசியல் கட்சி தலைவர்கள், தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி