உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி மாணவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு; 3 மாணவர்கள் கைது

பள்ளி மாணவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு; 3 மாணவர்கள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பஸ்ஸில் சென்று கொண்டிருந்த 11ம் வகுப்பு பள்ளி மாணவனை, மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த 17 வயதான மாணவன், திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறான். இன்று பள்ளிக்குச் செல்வதற்காக பஸ்ஸில் ஏறி ஸ்ரீவைகுண்டம் சென்று கொண்டிருந்தான். அரியநாயகிபுரத்திற்கு அடுத்த ஊரான கெட்டியம்மாள்புரம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது மூன்று பேர் கொண்ட கும்பல் பஸ்ஸை வழிமறித்து உள்ளே ஏறி உள்ளது. அந்த கும்பல் பஸ்ஸில் இருந்த 17 வயது மாணவனை வெளியே இழுந்து போட்டனர். மேலும், கையில் வைத்திருந்த அரிவாளால் மாணவனை அந்த மர்மகும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது. மாணவனுக்கு தலையில் பல வெட்டுகள் விழுந்தன. பஸ்ஸில் இருந்தவர்கள் சத்தம் போடவே, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. பஸ்ஸில் வந்த சக பயணிகள் ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6g14kbrn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அங்கு வந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை ஆகியோர், வெட்டுக்காயங்களுடன் கிடந்த மாணவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கபடி விளையாடுவதில் ஏற்பட்ட மோதலால் இந்த கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.மேலும், துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவனிடமும், அவன் படிக்கும் பள்ளியிலும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயம்பட்ட மாணவரிடம் முதன்மைக்கல்வி அலுவலர் சிவக்குமார் விசாரணை நடத்தினார்.இந்த நிலையில், மாணவனை வெட்டிய சம்பவத்தில் தொடர்புடைய 17 வயதுடைய 3 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

masilamani k
மார் 10, 2025 18:38

ENNKAL ATCHIAI ENTHA KOMBANLUM KURRAI SOLAmudiathu - mk stalin


Kumar Kumzi
மார் 10, 2025 17:49

திருட்டு திராவிஷ கழகத்துக்கு மூன்று உறுப்பினர்கள் கெடைச்சாச்சு துண்டுசீட்டு கூமுட்ட வெரி ஹாப்பி


magan
மார் 10, 2025 16:52

கூடிய சீக்கிரம் வெட்டிட்டு செத்து போயிருங்க அப்பத்தான் திராவிடர்கள் நிரந்தரமா ஆட்சி செய்ய முடியுமா


Shekar
மார் 10, 2025 14:49

தமிழ் மண், வீரம் விளையும் மண்


M.Mdxb
மார் 10, 2025 14:56

எப்பா சேகர் இது வீரம் இல்ல வஞ்சம் வன்மை இதுல வீரம் வெளைஞ்சுச்சா கிறுக்கு பய


Pandi Muni
மார் 10, 2025 15:34

கஞ்சா மது போதையாகிப்போன தமிழ்நாடு வீரம் எங்கிருந்துடா வரும்


Shekar
மார் 10, 2025 17:02

ஜாதி தலைவர்கள் இப்படி பேசக்கூடும் என்று அவர்கள் பாணியில் நான் நக்கலாக பதிவிட்டதை எல்லோரும் சீரியஸாக எடுத்துகொண்டுவிடீர்கள்.


vbs manian
மார் 10, 2025 14:45

இதை போல் தினமும் செய்தி. பொது வாழ்வின் நிரந்தர அம்சமாகி விட்டது. கேட்டால் தனி மனித விரோத செயல்களுக்கு அரசு பொறுப்பல்ல என்று பதில். தெருவில் பொது வெளியில் நடக்கிறது போலீஸ் காவல் எல்லாம் எதற்கு.


sankar
மார் 10, 2025 13:36

எப்ப திருந்துவீங்க - வேதனையாக இருக்கிறது


M.Mdxb
மார் 10, 2025 13:09

வடக்கன்ஸ் மூளை இல்லாதவன் என்று சொல்லி சொல்லி இப்பூ நம்ம பசங்க மூளை இல்லாம போய்டுச்சு இவ்வளுவு வெறித்தனம் எப்படி வந்துச்சு எங்கே செல்கிறது தமிழகம் ஒரு பக்கம் பாலின சீண்டல் மறு பக்கம் பள்ளிக்கூடங்களில் போதை வஸ்து கிடைப்பது அரசுக்கு மட்டும் விடியல் ஆனால் மக்களுக்கு இருள் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு நிலைமை சரியில்லை காவலும் முதலமைச்சரும் ஆழ்ந்த உறக்கதில் விடியல் அரசால் மக்கள் விளங்காம போய்ட்டாங்க


Ramesh Sargam
மார் 10, 2025 12:28

இதுபோன்ற கொலை முயற்சி குற்றங்களுக்கு சரியான, கடுமையான தண்டனை உடனே கொடுக்கப்படவேண்டும். வழக்கு பதிவு செய்வது, அது பல ஆண்டுகள் நொண்டுவது, ஜாமீன், கத்தரிக்காய் என்று கூறி வழக்கை நீதிமன்றஙகளே காலம் தாழ்த்துவது, இதெல்லாம் மாறவேண்டும். கொலைக்குற்றம், பாலியல் வன்கொடுமை போன்ற தீவிர குற்றங்களை நீதிமன்றங்கள் காலம் தாழ்த்தாமல் விசாரித்து, எவ்வளவு துரிதமாக குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை நிறைவேற்றுகிறதோ, அதுவரையில் இதுபோன்ற குற்றங்கள் தொடரும். நீதிமன்றங்கள் தங்கள் செயல்பாட்டை முற்றிலும் மாற்றவேண்டும் - உண்மையான அக்கறை பாதிக்கப்பட்ட மக்கள் மீது இருந்தால். மிக முக்கியமாக அரசியல்வாதிகள் தலையீடு வழக்கில் இருக்கவே கூடாது.


Barakat Ali
மார் 10, 2025 12:07

சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்பட போதைப் பழக்கமே காரணம் .... இதுதானுங்க விடியல் ....


Siva Balan
மார் 10, 2025 11:51

இதெல்லாம் ஒரு விஷயம்னு செய்தி போடுற..... தமிழ் ஏழை மாணவர்கள் மும்மொழி கற்க கூடாது. இது மட்டுமே திராவிட மாடலில் குற்றம்.


சமீபத்திய செய்தி