உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செம்மொழி நிறுவன போட்டி கட்டுரை, கவிதை வரவேற்பு

செம்மொழி நிறுவன போட்டி கட்டுரை, கவிதை வரவேற்பு

சென்னை : செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், பாரத மொழிகளின் திருவிழாவையொட்டி, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, கட்டுரை, கவிதை போட்டிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, 'பாருக்குள்ளே நல்ல நாடு, நம் பாரத நாடு' என்ற தலைப்பிலும்; 10 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்ற தலைப்பிலும், கல்லுாரி மாணவர்களுக்கு, 'வள்ளுவர் உணர்த்தும் அறம்' என்ற தலைப்பிலும் கட்டுரைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதேபோல, ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும்மாணவர்களுக்கு, 'மெய்ப்பொருள்' என்ற தலைப்பிலும், 10 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 'செவிச்செல்வம்' என்ற தலைப்பிலும், கல்லுாரி மாணவர்களுக்கு, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற தலைப்பிலும் கவிதைப் போட்டிகள் நடைபெற உள்ளன.கட்டுரைகளை 10 பக்கத்திற்குள்ளும், கவிதைகளை, 30 அடிகளுக்குள்ளும் எழுதி, 'இயக்குனர், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழிச்சாலை, பெரும்பாக்கம், சென்னை- 100' என்ற முகவரிக்கு, நவம்பர், 23ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தேர்வாகும் மாணவர்களுக்கு, முதல்பரிசாக 30,000, இரண்டாம் பரிசாக 20,000, மூன்றாம் பரிசாக 10,000 ரூபாய் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை