உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாடா வாகன உற்பத்தி ஆலைக்கு அடிக்கல்; 5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்!

டாடா வாகன உற்பத்தி ஆலைக்கு அடிக்கல்; 5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்!

சென்னை: ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் வாகன உற்பத்தி ஆலைக்கு இன்று(செப்.,28) முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்யும், இந்த ஆலையால் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.இந்தியாவில், பயணியர் மற்றும் வர்த்தக வாகனங்கள் உற்பத்தி, விற்பனையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், ராணிப்பேட்டை மாவட்டத்தில், 9,000 கோடி ரூபாய் முதலீட்டில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசு இடையில், கையெழுத்தானது. பணப்பாக்கத்தில்470 ஏக்கரில் இந்த ஆலை அமைக்கப்படுகிறது. இன்று(செப்.,28) சிப்காட் தொழிற்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். விழாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தலைவர் சந்திரசேகரன், அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கார் உற்பத்தி ஆலை மூலம் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த தொழிற்சாலையில் மட்டும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் கார்களை தயாரிக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தமிழகமே முகவரி

நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உலகின் பெரிய நிறுவனங்களுக்கு தமிழகம் தான் முகவரியாக உள்ளது. டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருவதால் அதிகமான பெண்களுக்கு வேலை கிடைத்துள்ளது. பல்வேறு துறைகளில் தடம் பதித்துள்ளது டாடா நிறுவனம். டாடா குழுமத்தை சேர்ந்த 15 நிறுவனங்கள் தமிழகத்தில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன. இந்தியாவின் தொழில் நிறுவனங்களில் முக்கியமானது டாடா நிறுவனம். இந்தநிறுவனத் தலைவர் இளைஞர்களின் முன்மாதிரியாக உள்ளார். டாடா குழுமம் மேலும் தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும். அனைத்து மாவட்டங்களில் சீரான வளர்ச்சி என்பது தான் நம் இலக்கு. புதிய ஆலையை உருவாக்க ராணிப்பேட்டையை தேர்வு செய்த டாடா நிறுவனத்திற்கு நன்றி. அரசின் நான் முதல்வன் திட்டத்தில் இணைந்து டாடா நிறுவனம் செயல்பட்டு வருகிறது.2030ம் ஆண்டிற்குள் தமிழகத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் அரசுப்பள்ளியில் படித்த சந்திரசேகர், டாடா குழுமத்தின் தலைவராக உயர்ந்திருப்பது பெருமை. உங்கள் நிறுவனத்தின் மூலம் தமிழகத்திற்கு கூடுதல் உதவிகளைச் செய்ய வேண்டும்; ஏனென்றால் இது நமது மாநிலம்.

நம்பர் ஒன் தமிழகம்

மின்சார வாகன உற்பத்தியில் தமிழகம் தான் இந்தியாவின் தலைநகரம். இந்தியாவில் விற்பனையாகும் மொத்த மின்சார வாகனங்களில் 40% தமிழகத்தில் தான் உற்பத்தியாகின்றன. எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழகம் தான் நம்பர் ஒன்; இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கியப்பங்கு வகிக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

rao
செப் 29, 2024 11:00

The day TATA group conducted a ground breaking ceremony for its Motor plant at Ranipet inviting Stalin,the same day it's Phone assembly unit in Hosur caught fire,what a contrast.


Tamil
செப் 28, 2024 23:02

No job for Tamilnadu peoples in managers level all from other states only then what use of starting in Tamil Nadu , only junior labour works for Tamil Nadu peoples ah ?


Ramesh Sargam
செப் 28, 2024 20:40

I already tolded that Tata will start their production soon in Tamil Nadu.


செங்குட்டுவன்
செப் 28, 2024 19:48

40 பர்சண்ட் குடுத்தும் கட்டுப்படியாகுதா? இல்கே உ.பி, குஜராத்தில் இன்னும் அதிகமா வாங்குறாங்களா? புரியலியே கோவாலு.


M Ramachandran
செப் 28, 2024 19:10

ஹிந்தி காரனாக இருந்தா என்ன அவன் கொடுக்கும் ஐசு புரூ ட்டு இனிக்கும். என்ன கனிமொழி இந்தி பிடிக்காது போடா சொரி டி வி புகழ் கோடகல்லு பிரதெரஸ் அம்மா இதற்கு நீங்கள் தான் பதிலு சொல்லணும். . இஙகு தான் திராவிடன் நிக்குறான். சட்டமெல்லாம் உனக்கில்லே...


Ravi Kumar Damodaran
செப் 28, 2024 18:48

ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்கள் - வாவ். உலக கவனத்தை ஈர்க்கும். ராணிப்பேட்டையில் ராஜாக்கள் செல்லும் கார்கள்.


ஆரூர் ரங்
செப் 28, 2024 18:24

சாம்சங் ஆலை ஊழியர்கள் மாதக்கணக்கில் ஸ்ட்ரைக். அதில் முதல்வர் என்ன செய்தார்? துவக்கத்தில் (குடும்ப கேபிள் வியாபாரத்தைக் காக்க) டாட்டா ஸ்கை க்கு கட்டுமரம் செய்த கொடுமை கொஞ்ச நஞ்சமல்ல. டாடாவின் மன்னிக்கும் குணம் பாராட்டத்தக்கது.


vbs manian
செப் 28, 2024 17:54

அப்போ போர்ட் நிறுவனம் ஏன் வெளியேறியது.


venugopal s
செப் 28, 2024 17:44

மத்திய பாஜக அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிப்பதற்கு முன்பே இது செயல்பாட்டுக்கு வந்து விடும் என்று நம்பலாம்!


Muthu
செப் 28, 2024 17:00

சந்திரசேகர் ஐயர் அது தெரியுமா இதில் கருத்து போடுபவர்களுக்கு. கழகக்காரர்களுக்கு பாப்பான்னா ஆகாதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை