உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டி.டி. தொலைக்காட்சியில் ஹிந்தி மாதம் நிறைவு விழா! பிரதமருக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்

டி.டி. தொலைக்காட்சியில் ஹிந்தி மாதம் நிறைவு விழா! பிரதமருக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்

சென்னை; ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி மாதம் கொண்டாடப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கடிதம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி உள்ளதாவது; சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து அக்டோபர் 18ம் தேதி அன்று நிறைவடையும் ஹிந்தி மாத நிறைவுவிழா நடைபெறுவது குறித்து பிரதமர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு வரவே இந்த கடிதத்தை எழுதுகிறேன்.இந்திய அரசமைப்புச்சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை. சட்டமியற்றுதல். நீதித்துறை மற்றும் தகவல் தொடர்பு போன்ற அலுவல் நோக்கங்களுக்காக மட்டுமே ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில், ஹிந்திக்கு தனி இடம் அளிப்பதும் ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.எனவே, ஹிந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்ற ஹிந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்கலாம். மத்திய அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால், அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் மொழிக்கான மாத கொண்டாட்டங்களையும் அதே போல் கொண்டாட வேண்டும்.இந்திய அரசு செம்மொழியாக அங்கீகரித்துள்ள அனைத்து மொழிகளின் சிறப்பையும் செழுமையையும் கொண்டாட இதே போன்று சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாம். இது அனைவரிடையேயும் ஒரு சுமூகமான உறவை மேம்படுத்தும்.இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Indian
அக் 18, 2024 22:48

இங்கே கீழே உள்ள சில கருத்துக்களை பார்க்கும் போது தமிழகம் துரோகிகளாலும் , வந்தேறி களாலும் சூழப்பட்டுள்ளது தெரிகிறது . தமிழ் நாட்டில் இருந்து கொண்டு , உண்டு கொண்டு தமிழுக்கு எதிராக பேசுபவன் துரோகியாக தான் இருப்பான்


R.MURALIKRISHNAN
அக் 18, 2024 22:02

அப்படியே வடக்கல போயி இண்டி கூட்டணி மீட்டிங்கில் சொல்லு பார்போம்


sridhar
அக் 18, 2024 20:31

இந்த கடிதத்தை குப்பைத்தொட்டியில் வீசியாச்சு.


raja
அக் 18, 2024 19:54

திருட்டு ஒன்கொள் கோவால் புற திராவிடர்கள் சௌகார் பேட்டையில் இந்தியில் விளம்பரம் செய்யாமல் போஸ்டர் ஒட்டாமல் தேர்தலின் போது ஒட்டு கேட்பார்களா...


venugopal s
அக் 18, 2024 19:52

பாஜக ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக திமுகவை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு தமிழைப் புறக்கணித்து ஹிந்தி தலையில் சுமக்கின்றனர் !


Barakat Ali
அக் 18, 2024 19:46

சிதம்பரம் ஹிந்தியை பெருமைப்படுத்தி பேசியபொழுது யூ பி ஏ கூட்டணியில் அங்கம் வகித்தது ஏன் ???? ஊழல் செய்யத்தானே ????


Sathyanarayanan Sathyasekaren
அக் 18, 2024 19:07

உலகெங்கும் தடைசெய்யப்பட்ட முஸ்லீம் பயங்கரவாத இயக்கத்திற்கு சென்னை பல்கலைகழக பேராசிரியர் ஆள் சேர்ப்பு செய்துள்ளார். ஏஜென்ட்கள் தஞ்சை, கும்பகோணம் ஆகிய ஊரல்களில் கைது செய்து இருக்கிறார்கள். ஆனால் போலீஸ் துறையை நிர்வகிக்கும் முதல்வருக்கு ஹிந்தி தான் முக்கிய பிரச்னை, இவர்களின் கையகலாத தனத்தை மறைக்க, தமிழக மக்களை மடை மாற்ற வழக்கம் போல ஹிந்தியை கையில் எடுத்துள்ளார். தமிழக மக்களும், குஆர்டெர்க்கும் எச்சில் பிரியாணிக்கும், 2000 ரூபாய்க்கும் மறுபடியும் வோட்டை போடுவார்கள் என்ற தையிரியம் தான்


தமிழ்வேள்
அக் 18, 2024 17:38

நீ வேண்டுமானால் மற்றமாநிலங்களில் தமிழ் மாதம் கொண்டாடு ..யாரும் தடுக்கப்போவதில்லையே ? ஏன் இந்த வெட்டி சலம்பல் ??


Murugesan
அக் 18, 2024 17:29

திருட்டு ரயில் கட்டுமரத்திற்கு என்னத்துக்கு கோடிக்கணக்கான மக்கள் பணத்துல விழா எடுக்கிற தத்தி


RAAJ68
அக் 18, 2024 17:01

இது மட்டுமல்ல தமிழ் தாங்கிகள் தமிழ் போராளிகள் சென்னை தூர தர்ஷன் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறார்களாம். தமிழ் தாங்கிகளுக்கு ஒரு வேண்டுகோள். தூர்தர்ஷன் முன்பு போராட்டம் நடத்தும் நீங்கள் தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிக்கும் லட்சணங்களை கேட்டிருக்கிறீர்களா. வாழைப்பழத்தை வாலாபலம் அறுநூறு என்பதை ஆர்நாறு நாசவேலை என்பதை நாசா வேலை உளுத்தம் பருப்பு என்பதை உளுத்தாம் பருப்பு கத்தரிக்காய் என்பதை கத்தாரிக்கா பாயசம் என்பதை பாயாசம் என்று உச்சரிக்கிறார்கள். இது ஒரு உதாரணம்தான் இப்படி நிறைய வார்த்தைகளை தப்பு தப்பாக உச்சரிக்கிறார்கள். போராட்டம் நடத்தும் உங்களுக்கே பல பேருக்கு ழ உச்சரிப்பு வராது. எனவே உங்களுக்கு போராட்டம் நடத்தும் அருகதை இல்லை. தைரியம் இருந்தால் தனியார் தொலை புரட்சி நிலையங்கள் முன்பு போராட்டம் நடத்துங்கள்.


புதிய வீடியோ