உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரிட்டன் அமைச்சர் கேத்தரினுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை

பிரிட்டன் அமைச்சர் கேத்தரினுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:பிரிட்டன் நாட்டின் அமைச்சர் கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு அரசு துறைகளின் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஜெர்மனி மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். ஜெர்மனி பயணத்தை முடித்து, பிரிட்டன் தலைநகர் லண்டனில் முகாமிட்டுள்ளார். விவாதித்தனர் அங்குள்ள வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தில், பிரிட்டன் அமைச்சரும், அந்நாட்டின் பார்லிமென்ட் துணை செயலருமான கேத்தரின் வெஸ்ட்டை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். பல்வேறு துறைகளில், தமிழகம் மற்றும் பிரிட்டனின் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து இருவரும் விவாதித்தனர். பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, பசுமை பொருளாதாரம், கல்வி, ஆராய்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொடர்பு சேவைகள் மற்றும் உற்பத்தி போன்றவற்றில் தமிழகத்தின் வலிமை குறித்து முதல்வர் எடுத்துரைத்தார். இந்த துறைகளில், பிரிட்டன் அதிக அளவிலான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். உயர் கல்வி திறன் மேம்பாடு மற்றும் காலநிலை ஒத்துழைப்பில், பிரிட்டன் மற்றும் தமிழக உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், அப்போது விவாதிக்கப்பட்டது. தமிழகம் முன்னணி பசுமை ஹைட்ரஜன், சூரியசக்தி மற்றும் காற்றாலை ஆற்றல் போன்றவற்றில், உலக அளவில் தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்குவது குறித்தும் முதல்வர் விளக்கினார். காலநிலை மாற்ற உத்திகளில் இணைந்து செயல்படுவது குறித்தும் விவாதம் நடந்தது. சந்திப்பின் போது, தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதல்வரின் முதன்மை செயலர் உமாநாத், தொழில் துறை செயலர் அருண்ராஜ், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன இயக்குநர் தாரேஸ் அகமது ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Kulandai kannan
செப் 05, 2025 17:37

What Mr. Stalin TOLDED the minister?


venugopal s
செப் 05, 2025 18:16

Same thing which was tolded by Mr. Modi to china President recently!


theruvasagan
செப் 05, 2025 11:20

கடந்த 2024ம் ஆண்டில் அந்நிய முதலீடுகளை ஈர்த்த முக்கியமான சில மாநிலங்களின் பட்டியல் கீழே. முதலீடுகள் மில்லியன் டாலர் கணக்கில். மஹாராஷ்ட்ரா 16651. கர்நாடகா 4496. குஜராத் 5556. டெல்லி மற்றும் என்சிஆர் பிராந்தியம் 4453. தமிழ்நாடு 2903. நாடு முழவதற்கும் வந்த மொத்த அந்நிய முதலீடு 40672. அதில் மஹாராஷ்டிரத்தின் பங்கு 40 சதவிகிதம். தமிழகத்தின் பங்கு 7 சதவிகிதம். அந்நிய முதலீட்டில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்ற உருட்டெல்லாம் முரசொலியை எழுத்துக்கூட்டி படிக்கும் 200 ஓவா உபிகளுக்கே சமர்ப்பணம்.


V RAMASWAMY
செப் 05, 2025 11:16

அடேயப்பா, இவர் ஒருவர் போதும். போகிற போக்கைப் பார்த்தால், ஐ நா சபையில் இடம் பிடித்து தமிழ்நாட்டையே அங்கத்தினராக்கி விடுவார் போலிருக்கிறதே.


மண்ணாந்தை
செப் 05, 2025 11:05

நீங்களே "காணவில்லை" endru செய்தி போடுகிறீர்கள். பின்னர் இந்தா இருக்காரு என்பது போலவும் சேதி போடுகிறீர்கள்.விந்தை


hariharan
செப் 05, 2025 08:13

MR. CM should know about his limits. He cant commit anything on behalf of INDIA. he is just an cm. Even EAM is powerfull on this field. He can have tea and walkout without an fruitfull meeting. I feel pity for UK minister for her time waste.


KUMARAN TRADERS
செப் 05, 2025 07:51

தமிழே ஒழுங்கா பேச தெரியாது இதுல வேற இங்கிலீஷ் தாய்மொழி கொண்டவர்களிடம் போய் இவர் பேசுறாரா என்ன கொள்ளையடித்த பணத்தை அவர் பங்களாவில் வைக்கலாமா போய் பார்த்திருப்பாரோ


venugopal s
செப் 05, 2025 18:18

ஹிந்தியும் குஜராத்தியும் மட்டுமே தெரிந்த பிரதமர் மோடி ரஷ்ய அதிபரிடமும் சீன அதிபரிடமும் எப்படி பேசினாரோ அதேபோல் தான்!


Shivakumar
செப் 05, 2025 06:39

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்ற முறை வெளி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்தாரே எத்தனை கோடி முதலீடுகளை ஈர்த்து வந்தார் என்று சொல்லவும்.


ManiK
செப் 05, 2025 06:17

அந்த அமைச்சரின் துறை - Shadow minister for Asia Pacific. ஒரு இலாகாவும் இல்லாத ஒப்புக்கு சப்பானி. இவருடன் புகைப்படம் எடுக்க திமுக அரசு எவ்வளவு கொடுத்தார்களோ!!?


HoneyBee
செப் 05, 2025 06:13

சூப்பர் ஃபோட்டோ ஷீட் பண்ணி இருக்காங்க.‌‌ இதைத் தவிர வேற எதுவும் இல்லை. அம்புட்டு தான் கெளம்பி வந்துடுங்க


Modern Chanakya
செப் 05, 2025 06:11

அப்பா....கடைசி வாய்ப்பு....USA, Mexico, Venezuela, Canada, Scotland, Jersey, Isle of Man, Guernsey, Europe la Austria, Hungary, Czechia, Gibraltar, France, Belgium, Bulgaria, Greece, Italy, Finland, Croatia, Denmark, Faroe Islands, San Marino, Iceland, Ireland, Netherlands, Portugal, Estonia, luxembourg, Åland Islands, Jersey, Liechtenstein, Cyprus, Liechtenstein, Spain, Lithuania, Poland, Albania, Switzerland, Denmark, Slovakia, Norway, Eurasian countries Russia, Ukraine, Uzbekistan, Kazakhstan, Azerbaijan, Tajikistan, Belarus, Serbia, Kyrgyzstan, Turkmenistan, Georgia, Moldova, Mongolia, North Macedonia, Slovenia, Latvia, Kosovo, Timor-Leste, Cyprus, Monaco, Montenegro, Malta, Maldives, Andorra , Svalbard and Jan Mayen, Vatican City, then Far East Brunei, Malaysia East &West, Indonesia, Philippines, China, Taiwan, Thailand, Cambodia, Vietnam, Singapore, Australia, New Zealand, then Pakistan, Afkhanistan, Paluchistan, Bhutan, Nepal, Timor-Leste, Kosovo, Latvia, Mongolia, Bosnia and Herzegovina, Lebanon, Palestine[,Israel, Laos, Jordan, Bulgaria, Czech Republic, Romania, Syria, North Korea, South Korea, Myanmar, Turkey, Middle East Countries Iran, Iraq, Qatar, UAE, Bahrain, Oman, Saudi Arabia, Yemen, Srilanka- Katcha theevu, Bangladesh, etc., பார்த்துட்டு வந்துடீங்கன்னா திராவிட வெற்றியை இருக்குமே, பட் ஏப்ரல் 2026, பிறகு வாய்ப்பில்லே அப்பா வாழ்க்கையிலே.... ஏதோ தோணிச்சு, சொல்லிட்டேன்,, புருஞ்சுகிட்டா சரி


venugopal s
செப் 05, 2025 18:20

நீங்கள் வெளியுட்டுள்ள பட்டியல் பிரதமர் மோடி அவர்கள் மேற்கொண்ட கடந்த கால வெளிநாட்டுப் பயணமா?


புதிய வீடியோ