உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள்தான் நம் சொந்தங்கள் என உணர வேண்டும்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகேள்

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள்தான் நம் சொந்தங்கள் என உணர வேண்டும்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகேள்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள்தான் நம் சொந்தங்கள் என்பதை மத்திய பா.ஜ., அரசு உணரவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; இன்னல்கள் பல எதிர்கொண்டு, கடல் அலைகளின் மேல் தங்களது உயிரும் - வாழ்வாதாரமும் ஊசலாட, நாள்தோறும் வாழ்கின்றனர் நமது மீனவர்கள்.அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கடந்த 02-04-2025 அன்று இறையாண்மை கொண்ட நமது தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மனம் இரங்காமல், கண் மூடி - காதுகளை அடைத்துக் கொண்டு - வாய் மூடி மௌனித்திருக்கிறது மத்திய அரசு.எனவே, நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான - மேம்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறேன்.தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள்தான் நம் சொந்தங்கள் என்பதை மத்திய பா.ஜ., அரசு உணரவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

vinoth kumar
ஏப் 08, 2025 01:33

விபரம் தெரிந்தும் இந்த ஆள் ஏன் இப்படி நாடகம் ஆடுகிறார்? நல்ல மீன் வளத்துக்கு ஆசைப்பட்டு இலங்கை கடல் எல்லைக்குள் செல்லும் இந்திய மீனவர்களை மட்டுமே இலங்கை அரசு கைது செய்கிறது. இந்திய எல்லைக்குள் வந்து கைது செய்வதில்லை. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதை தடுக்க முடியாது. வேண்டுகோள் விடுத்தது விடுதலை செய்ய வைக்கலாம். என்ன ஒரு நல்ல வித்தியாசம் எனில், காங்கிரஸ் ஆட்சியினபோது சுடுவார்கள், இப்போது பி ஜே பி ஆட்சியின்போது சுடுவதில்லை, கைது மட்டும் செய்கிறார்கள், பொது மக்களுக்கு தெரியும் இந்த விபரம் ஸ்டாலினுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சர்யம் .


தமிழ்வேள்
ஏப் 07, 2025 20:17

கள்ள கடத்தல் செய்பவன் அடுத்தவன் வாழ்வாதாரத்தை சுரண்டி அழிப்பவன் இந்திய மீனவன் அல்ல. . திருட்டு திராவிட மீனவன் என்று திருத்தி சொல்லுங்கள் முதல்வரே..


C.SRIRAM
ஏப் 07, 2025 19:43

தமிழக மீனவர்களில் சிலர் வேண்டுமென்றால் எல்லை தாண்டி செல்வதாக தெரிகிறது அதில் உங்க கட்சி தொடர்பும் இருக்கலாம் . இருந்தாலும் கட்ச தீவை தாரை வார்த்ததில் உங்க அப்பாக்கும் பங்கு உண்டு . ஏதோ யாரோ காரணம் போல தினமும் உளறி கருத்து சொன்னாலும் உண்மை உரைக்கவே செய்யும் . உங்க அப்பா மீனவர்களும் சொந்தங்கள் என்று நினைக்காமல் தானும் தனது சொந்தங்கள் குடும்பம் மட்டும் என்று நினைத்து செய்த துரோகத்தின் விளைவு .


சுரேஷ் பாபு
ஏப் 07, 2025 18:52

கச்சத்தீவைத் தாரை வார்த்தது இப்போது நீங்கள் கை கோர்த்து கொண்டு இருக்கும் காங்கிரஸ் கட்சி ஆண்ட போது - அதற்கு ஒப்புதல் அளித்த உங்கள் அப்பாவும் காரணம். இந்த வரலாற்றை யாரும் அழித்து விட முடியாது. அப்புறம் ஏன் இந்த நாடகம்? தற்போதைய மத்திய அரசு ஆட்சியில் கடந்த கடந்த 11 வருடங்களாக ஒரு மீனவர் கூட இலங்கை கடற்படையினரால் சுடப்படவில்லை. ஆனால் காங்கிரஸும் நீங்களும் கூட்டணியாக மத்தியில் ஆட்சி செய்த காலத்தில் எத்தனை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுடப்பட்டு உயிரிழந்தார்கள். அவர்கள் நம் சொந்தங்கள் இல்லையா? அப்போது அதைத் தடுக்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?


புதிய வீடியோ