உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ்நாடு யாருடன் போராடும்: கவர்னரின் விமர்சனத்துக்கு முதல்வர் பதில்

தமிழ்நாடு யாருடன் போராடும்: கவர்னரின் விமர்சனத்துக்கு முதல்வர் பதில்

சென்னை: தமிழ்நாடு யாருடன் போராடும் என்ற கவர்னர் ரவியின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.அவர் கூறியிருப்பதாவது; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sk9srm1i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழ்நாடு யாருடன் போராடும்? என ஆளுநர் கேட்டுள்ளார். ஹிந்தி மொழியை ஏற்றுக் கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என்பவருக்கு எதிராகப் போராடும். அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூட நம்பிக்கைகளையும் - புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்.உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும். அரசியல் சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும்.தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை - தொழில் வளர்ச்சியை- வேலை வாய்ப்புகளை, அடுத்த மாநிலத்துக்கு மிரட்டி அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும்.உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்குக் காவிக்கறை பூசுவது முதல் கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்துபோக வேண்டும் என்று நினைப்பது வரையிலான வன்மம் இருக்கிறதே, அதற்கு எதிராகப் போராடும்.தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழ்நாட்டின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும். நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழ்நாடு மட்டும் 11.19% வளர்ச்சி பெற்று, பிற மாநிலங்களுக்கு ஒளிகாட்டுகிறதே என்று நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பி, கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும். இறுதியில் தமிழ்நாடே வெல்லும்! ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Indian
அக் 06, 2025 09:17

மக்கள் மனநிலை, மீண்டும் தி மு க ஆட்சி வேண்டும். தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட ஒரே கட்சி தி மு க . ...


Ramesh Sargam
அக் 06, 2025 01:13

காசாவின் விடுதலைக்கு தமிழகம் போராடும்.


R.MURALIKRISHNAN
அக் 06, 2025 00:44

தமிழ்நாட்டை நாசப்படுத்தியவன் கட்டுமர காரனும் அவன் மகனும் தான்.


சகுரா
அக் 05, 2025 23:07

திராவிட கழகம் மாயையிலேயே போராடுவோம். எதிரிகள் இல்லை என்றால் கூட எதிரி இருப்பதாக ஒரு மாயை உருவாக்கி போராடுவோம். மக்கள் ஓன்றாக இருந்தால் கூட ஒரு கட்சியை காவி என்று கூறி மொத்த இந்துக்களையும் பிரித்து சமூக நீதி என்ற பெயரில் போராடுவோம்..


Saai Sundharamurthy AVK
அக் 05, 2025 22:29

இப்போது மழைக் காலம் தொடங்கி விட்டது. கடந்த இரண்டு வருடங்களாக சென்னை மக்கள் அந்த 4000 கோடிக்கு கணக்கு கொடுக்க சொல்லி போராடுகிறார்கள்..?...?


ரகுநாதன்
அக் 05, 2025 22:18

முதலில் தன்னுடனேயே போராடவேண்டியிருக்கும்


Kjp
அக் 05, 2025 21:30

அப்போ திராவிட மாடல் வெல்லாது.என்கிறீர்களா. தமிழ் மாடல் தான் வெல்லும் என்று சொல்கிறீர்கள். என்ன எழுதிக் கொடுத்தாலும் கூச்சமின்றி படிக்கிறீர்கள்.


Vasan
அக் 05, 2025 21:23

Well said Chief Minister, you have given a fitting reply. We are proud of you, and wish the other states also follow Tamilnadu model and be as bold as you.


N Sasikumar Yadhav
அக் 05, 2025 20:10

முதலில் ஊழலில் சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்து கஜானாவில் சேர்த்து ஊழல்வாதிகள் மிக கடுமையான தண்டனை பெரும்வகையில் சட்டம் இயற்ற வேண்டும் . சோறு தின்கிற தட்டுக்கூட பறிமுதல் செய்ய வேண்டும் . ஓட்டுப்பிச்சைக்காக பொதுமக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து இலவசங்களாக கொடுத்து மீண்டும் மீண்டும் விஞ்ஞானரீதியாக கொள்ளையடிக்கிறது திராவிட மாடல்


Kulandai kannan
அக் 05, 2025 19:49

ஒரு பொது கூட்டத்திற்கு ஒழுங்காகப் பாதுகாப்புக் கொடுக்க துப்பில்லை. இந்த லட்சணத்தில் இந்தியாவையே காப்பாராம்.


சமீபத்திய செய்தி