உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தெளிவாக சொல்கிறேன், தமிழகம் தலைவணங்காது: முதல்வர் ஸ்டாலின்

தெளிவாக சொல்கிறேன், தமிழகம் தலைவணங்காது: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தெளிவாக சொல்கிறேன், தமிழகம் தலைவணங்காது என்று முதல்வர் ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டமாக கூறி உள்ளார்.இது குறித்து அவர் தமது சமூக வலைதள பதிவில் கூறி உள்ளதாவது; சர்வதேச மக்கள் தொகை தினத்தில் மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல். மக்கள்தொகை கட்டுப்பாட்டில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. பெண்களுக்கு கண்ணியத்துடன் அதிகாரம் அளிக்கிறது. அனைவருக்கும் சுகாதாரம், கல்வியை வழங்குகிறது. வெற்றிகரமான, நிலையான வளர்ச்சியை பெற்றுள்ளது. ஆனால் இன்னமும் நமக்கு கிடைத்தது என்ன? குறைவான தொகுதிகள், குறைந்த நிதி. நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வெளியேற்றப்படும் எங்களின் குரல்.ஏன்? ஏனென்றால் தமிழகம் சரியானதைச் செய்தது, அது டில்லியை அச்சுறுத்துகிறது. பழனிசாமியும், அவரின் கட்சியும், தமிழகத்துடன் அல்ல, டில்லியுடன் நிற்பது இன்னும் மோசமானது.நமது முன்னேற்றத்தை தண்டிக்கும் தொகுதி மறு சீரமைப்பை அவர்கள் ஆதரிக்கிறார்கள். ஆனால் நான் ஒன்றை தெளிவாக சொல்கிறேன். தமிழகம் எப்போதும் தலைவணங்காது. நாம் ஒன்றாக எழுவோம். இது ஓரணி Vs டில்லி அணி. மண், மொழி, மானம் ஆகியவற்றை காக்க ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தின் கீழ் இணைவோம்.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 77 )

samvijayv
ஜூலை 28, 2025 11:41

ஆனா... பிரதமர் விமான நிலையத்திற்கு வருகிற பொழுது மட்டும் "வெள்ளை" குடை பிடித்து எங்களின் மட்டும் காப்பாற்றிக் கொள்வோம்., அப்படித்தானே தகப்பா?.


Bhakt
ஜூலை 21, 2025 02:05

அடக்கம் அமரருள் உய்க்கும். அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். ஆகா தமிழகம் தலை வணங்கும் ஆனா நான் தலை வணங்கினால் என் விக்கு கீழே விழுந்து விடும்.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 20, 2025 05:58

நாங்கெல்லாம் ஓரணியில்


Suresh
ஜூலை 18, 2025 12:27

ஆம். திராட திருட்டு குடும்பத்துக்கும் அராஜக கூட்டத்துக்கும் தலை வணங்காது


தமிழன்
ஜூலை 17, 2025 16:53

மன்னிப்பு சாரி கேட்பது தலை வணங்குவது இல்லையா ?


Venkataraman
ஜூலை 17, 2025 15:27

தமிழகம் தலைவணங்காது ஆனால் கருணாநிதியின் குடும்பம் பதவிகளை பெற்று யாருக்கு வேண்டுமானாலும் தலைவணங்கும்


Venkataraman
ஜூலை 17, 2025 15:24

இவர்கள் தலைவணங்க மாட்டார்கள். ஆனால் பதவி தருகிறேன் என்றால் மானம், வெட்கம் எல்லாவற்றையும் விட்டு விட்டு அவர்களுடன் சேர்ந்துகொண்டு விடுவார்கள். அப்படிதான் பாஜக வின் வாஜ்பாயி அரசிலும், காங்கிரசின் மன்மோகன் சிங் அரசிலும் சேர்ந்து பதவிகளை பெற்று கொள்ளை அடித்தார்கள்.


Raghavan
ஜூலை 15, 2025 21:40

நாங்கள் என்றைக்கும் தலை வணங்கமாட்டோம் தொபுக்கடீர் என்று கீழேவிழுந்து நமஸ்கரிப்போம்.


மூர்க்கன்
ஜூலை 15, 2025 16:06

எந்த வகையில்??


JANA VEL
ஜூலை 15, 2025 12:31

வாங்கின மந்திரி பதவியில் நீடிக்க ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை