உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயத்தில் மசோதாவுக்கு ஒப்புதல் கவர்னர் குறித்து முதல்வர் கிண்டல்

பயத்தில் மசோதாவுக்கு ஒப்புதல் கவர்னர் குறித்து முதல்வர் கிண்டல்

சென்னை:“நீதிமன்றத்துக்கு போய் விடுவோம் என்று பயந்து, சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்திருக்கலாம்,” என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் பதவிகளை வழங்கும் வகையில், இரண்டு சட்ட மசோதாக்கள், கடந்த ஏப்ரல் 16ம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. பின், கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இரண்டு மசோதாக்களுக்கும் கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சிகளில் 650 மாற்றுத்திறனாளிகளுக்கும், ஊரக உள்ளாட்சிகளில் 12,913 மாற்றுத்திறனாளிகளுக்கும் நியமன பதவிகள் கிடைக்க உள்ளன.இந்த மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் வழங்கியது குறித்து, முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:கவர்னர் ஒப்புதல் அளித்தது எதிர்பார்த்தது தான். அதில், எந்த பிரச்னையும் இல்லை. சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவில் கையெழுத்திட்டு, அவர் ஒப்புதல் வழங்கிஉள்ளார். ஒருவேளை, நாங்கள் நீதிமன்றத்திற்கு போய் விடுவோம் என்று பயந்து, அவர் ஒப்புதல் அளித்திருக்கலாம்.இவ்வாறு முதல்வர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 04, 2025 01:24

கவனிக்கவும்..... பல்கலைக்கழக மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை..... மக்களுக்கு உபயோகப்படும் மசோதா என்றால் கவர்னர் ஒப்புதல் கொடுப்பார் மாறாக கொள்ளையடிக்க மசோதா என்றால் நீங்கள் கோர்ட்டுக்கு போய் நீதிபதிகளிடம் தான் ஒப்புதல் வாங்க வேண்டும்..... தவிர மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது நீதிபதிகளின் வேலை இல்லை.... அவர்களிடம் வாங்கி கட்டி கொண்டால் தான் அடுத்து நீதிமன்றம் போகமாட்டீர்கள்.....இப்பொழுது கூட உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை போட்டதால் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறீர்கள்.... கவர்னர் பயப்படவில்லை நீங்கள் தான் பயந்து உச்ச நீதிமன்றத்தை நாடி இருக்கிறீர்கள்....!!!