உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டுறவு காஸ் ஏஜென்சிகள் 2 சிலிண்டர் இணைப்பு தர மறுப்பு

கூட்டுறவு காஸ் ஏஜென்சிகள் 2 சிலிண்டர் இணைப்பு தர மறுப்பு

சென்னை: கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், கூட்டுறவு பண்டக சாலைகள், பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனத்தின் காஸ் ஏஜன்சிகளை நடத்துகின்றன. எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு, ஒரு சிலிண்டர், இரண்டு சிலிண்டர் என்ற பிரிவுகளில், சிலிண்டர் இணைப்புகளை வழங்குகின்றன. ஒரு சிலிண்டரில் காஸ் திடீரென தீர்ந்து விட்டால், சமையல் செய்ய சிரமம் ஏற்படும் என்பதால், பலரும் இரு சிலிண்டர் இணைப்புகளை பெறுகின்றனர். இந்நிலையில், கூட்டுறவு பண்டக சாலையின் காஸ் ஏஜன்சிகளில், இரண்டு சிலிண்டர் இணைப்பு வழங்க மறுப்பதாக புகார்கள் எழுகின்றன. இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:சில இடங்களில் கூட்டு றவு காஸ் ஏஜன்சிகள் மட்டும் உள்ளன. அவற்றில், இரண்டு சிலிண்டர் இணைப்பு வழங்குமாறு கேட்டால், 'எங்களிடம் மாற்று சிலிண்டர் இல்லை; ஒரு சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும்; விருப்பம் இருந்தால் வாங்கலாம்; இல்லையெனில் தனியார் ஏஜன்சிகளில், காஸ் இணைப்பும், இரு சிலிண்டர் இணைப்பும் பெற்றுக் கொள்ளலாம்' என்கின்றனர். இதுகுறித்து, எண்ணெய் நிறுவனங்களிடம் கேட்டால், 'ஒரு சிலிண்டர், இரு சிலிண்டர் என, வாடிக்கையாளர் விருப்பம் போல் வாங்கலாம். எழுத்து பூர்வமாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்கின்றனர். ஆனால், புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை