உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை ரூ.10 கோடி உயர்வு

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை ரூ.10 கோடி உயர்வு

சென்னை:தீபாவளி பண்டிகையை ஒட்டி கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் 150 விற்பனை நிலையங்களில் 30 சதவீதம் தள்ளுபடியுடன் சிறப்பு விற்பனை அக்டோபர் 23ல் துவங்கியது.வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிறந்த வடிவமைப்பாளர்கள் வடிவமைத்த 700 புதிய சேலை ரகங்கள் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டன.கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு 76 கோடி ரூபாய்க்கு கோ ஆப்டெக்ஸ் ரகங்கள் விற்பனையான நிலையில் நடப்பாண்டில் 100 கோடி ரூபாய் என்ற விற்பனை இலக்குநிர்ணயம் செய்யப்பட்டது.ஒரு மாத கால சிறப்பு தள்ளுபடி விற்பனை முடிந்த நிலையில் 86 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகளை கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு தீபாவளி காலத்தை விட 10 கோடி ரூபாய் அதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை